கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நாத்திகம் – ஒரு குறுக்கு விசாரணை

Loading

மதநம்பிக்கையாளர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவும் வேறு வழியில்லாமலும் அவர்கள் படைப்பாளனின் இடத்தில் இயற்கையை வைக்கிறார்கள். மதநம்பிக்கையாளர்கள் படைப்பாளனுக்கு வழங்கும் அத்தனை பண்புகளையும் அவர்கள் இயற்கைக்கு வழங்குகிறார்கள். வெறும் பெயரைத்தான் மாற்ற முடிந்ததே தவிர அது உருவாக்கும் எந்தக் கேள்விகளுக்கும் அவர்களால் பதிலளிக்க முடியவில்லை.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: என்றும் மாறாதது (பகுதி 2)

Loading

நிச்சயமாக உறுதியான அடிப்படைகளையும் மதிப்பீடுகளையும் கொண்ட கண்ணோட்டம் மிக அவசியமானது. அது எல்லாவற்றையும் அறிந்த, தான் நாடியதைச் செய்யக்கூடிய ஒருவனிடமிருந்து வந்திருக்க வேண்டும். அவன் வாழ்க்கையின் எல்லா தளங்களையும் அறிந்திருக்க வேண்டும். எதுவும் அவனைவிட்டு மறைவாக இருக்கக் கூடாது. இச்சைகளோ தாக்கங்களோ அவன் வகுத்த மதிப்பீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. அது முழுக்க முழுக்க அவசியமானதாக, பாதுகாப்பானதாக, இயல்பான தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றக்கூடியதாக, நிலையான மையத்தைச் சுற்றி இயங்கக்கூடியதாக இருக்க வேண்டும். அது நேரான, பாதுகாப்பான, நிலையான நோக்கத்தை அடையும் இயக்கமாக இருக்க வேண்டும். அதுதான் சீரான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடியது.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 7) – மரியம் ஜமீலா

Loading

“இஸ்லாத்தின் போதனைகளின்படி, நீதமான வழியில் ஒருவன் சம்பாதித்த அனைத்தும் அல்லாஹ்வின் அருட்கொடையாகும். அல்லாஹ்வின் அருட்கொடைக்கு வரம்பு ஏதும் இல்லை. முறைகேடான சொத்து எவ்வளவு சிறியதாக இருப்பினும் அது முறைகேடானதே. முறையாக சம்பாதித்த சொத்து எவ்வளவு பெரியதாக இருப்பினும் அது முறையானதே. தனிச் சொத்துக்களை பலப்பிரயோகம் செய்து அரசாங்கம் கைப்பற்றுவதைவிட –சிறிய நோய்க்கு பெரிய நோய் கொண்டு சிசிச்சை அளிப்பதை விட- அநீதமாக செல்வம் குவிவதற்கு வழிவகுக்கும் முறைகேடான வழிகளனைத்தையும் தடுக்க வேண்டும். அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, வீடு, கல்வி, மருத்துவ தேவைகள் ஆகியவை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.”

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஆய்வுக் கட்டுரை: இஸ்லாமிய பார்வையில் அரசியல் பொருளாதாரம்

Loading

தனது உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களின் மீது உழைப்பாளி மட்டுமே சட்டபூர்வமாக உரிமை கோர முடியும். எனவே, யாரேனும் ஒருவர் மற்றவர்களை வேலைக்கமர்த்தி, அவர்களுக்குக் கூலியையும் கருவிகளையும் வழங்கி, அவர்களின் உழைப்பில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்களை தனது உடமையாக்கிக் கொள்வதென்பது இஸ்லாத்தை பொறுத்தவரை நினைத்தும் பார்க்கவியலாத ஒன்று.

மேலும் படிக்க