கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

திராவிட அரசியல்: வரலாற்றுத் தடங்கள் – நிகழ்ச்சித் தொகுப்புரை

Loading

நாடெங்கும் வளர்ந்துவரும் இந்துத்துவப் பேயைத் தடுக்கும் வழி தெரியாமல் மற்ற மாநிலங்களெல்லாம் திகைத்து நிற்க, இந்துத்துவத்தையும் அதன் அரசியல் கட்சியான பாஜகவையும் கேலிக்குரியவையாக ஆக்கி விரட்டியடிக்கும் ஒரு பொது மனப்பான்மை கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குவதற்கு, இங்கு செல்வாக்குடன் திகழும் ‘திராவிட / தமிழ்க் கருத்தியலே’ முக்கியக் காரணம் என்ற கூற்றுடன் வெகுசிலரே முரண்படுவர். அக்கருத்தியலின் தொடக்கத்தை அறிவிக்கும் வகையில் 1916ல் நீதிக்கட்சி தொடங்கப்பட்டு, ‘பார்ப்பனர் அல்லாதோர் அறிக்கை’ (non-Brahmin Manifesto) வெளியிடப்பட்டு நூறாண்டுகள் கடந்த நிலையில்; திராவிடக் கருத்தியலை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட திமுக 1967ல் முதன்முறையாக தமிழகத்தின் ஆட்சியைக் கைப்பற்றி ஐம்பதாண்டுகள் கடந்த நிலையில் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கு பல வகையிலும் முக்கியமானது, பயன் மிகுந்தது.

மேலும் படிக்க
காணொளிகள் குறும்பதிவுகள் 

சூஃபி இனாயத் நிறுவிய கம்யூன்

Loading

சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டுமென்ற இஸ்லாத்தின் குறிக்கோளை அடைவதற்கு வெறுமனே ‘செல்வம் பகிர்ந்தளிக்கப்படுவது’ மட்டும் போதாது; செல்வம் ஈட்டுவதற்கான ‘உற்பத்தி முறையையே’ புரட்சிகரமாக மாற்றியமைக்க வேண்டும் என்பதைச் சரியாகப் புரிந்து கொண்ட சூஃபி ஷாஹ் இனாயத் (1655-1718), கல்வி மற்றும் ஆன்மிகப் பணிகளுக்காக அரசு வழங்கிய விளைநிலத்தில், கூட்டு முறையில் விவசாயம் செய்து, கிடைக்கும் விளைச்சலை எல்லோரும் அவரவரின் தேவைக்கேற்ப பகிர்ந்துகொள்ளும் பரிசோதனை முயற்சியை சிந்துப் பகுதியில் வெற்றிகரமாக செய்து காட்டினார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

LGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளை கேள்விக்கு உள்ளாக்குதல்

Loading

அவர்களிடம் இருக்கும் தன்பாலின ஈர்ப்பு எனும் பாலியல் சாய்வு  பிரச்சினைக்குரிய ஒன்றல்ல என்றும், அதன்படியே அவர்கள் பாலுறவுச் செயல்களில் ஈடுபடலாம் என்றும் ஊக்குவிப்பது மட்டுமே அவர்கள் மீதான கரிசனை எனும் புரிதலையே நாம் இங்கு கேள்விக்கு உள்ளாக்குகிறோம். அவர்கள்மீது கொள்ளும் உண்மையான கரிசனை,  செய்யக்கூடிய உண்மையான உதவி என்பது அவர்களிடம் இருக்கும் தன்பாலின ஈர்ப்பை எப்படி நெறிப்படுத்தலாம், சுயகட்டுப்பாடுடன் கூடிய கண்ணியமான ஒரு வாழ்க்கை வாழ அவர்களுக்கு எப்படி உதவலாம் எனச் சிந்திப்பதிலேயே இருக்கிறது எனக் கருதுகிறோம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் 

தமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்

Loading

இன்று சர்வசாதாரணமாகக் கிடைக்கும் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள், மேலே விவரித்தபடியான ஒரு வரலாற்றுப் பயணத்தைக் கடந்தே நம்மிடம் வந்து சேர்ந்திருப்பதை விரிவாக அறிந்துகொள்ள டார்ஸ்டனின் ஆய்வுரை உதவியதில் மனநிறைவு.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

ஹஜ்ஜும் ஜிஹாதும்

Loading

முஸ்லிம்கள் குஃப்ரின் ஒருங்கமைந்த சக்தியை எதிர்கொள்ள நேர்ந்த போதெல்லாம், அதற்கெதிராக ஓர் ஜிஹாது இயக்கத்தை துவக்குவதே அவர்களது தன்னியல்பான எதிர்நடவடிக்கையாக இருந்திருக்கிறது. அவை அனைத்திலும் ஹஜ்தான் அவர்களது திட்டங்களில் மையப் பங்கு வகித்திருக்கிறது. ஏனெனில், முஸ்லிம்கள் எப்போதும் ஹஜ்ஜை அரசியல் இயல்புகொண்ட செயல்பாடாகவே விளங்கி வைத்திருந்தனர்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

ஃபிரான்ஸ் ஃபனானும் இஸ்லாமும்

Loading

அல்ஜீரியாவில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இஸ்லாமிய அறிஞர்களின் தலைமையிலான வீரஞ்செறிந்த காலனித்துவ எதிர்ப்புப் போராட்ட மரபுதான் ஃபனான் குறிப்பிடும் அந்தத் “தன்னெழுச்சி”. பத்தொன்பதாம் நூற்றாண்டு நெடுகிலும், ஏன் 1940-50கள்வரை கூட உயிர்ப்போடு இருந்த ஓர் போராட்டம் அது.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஹதீஸ்களின் பரவலும் தொகுப்பும் (பகுதி 1) – ஜோனத்தன் பிரௌன்

Loading

இஸ்லாத்தில் ‘அதிகாரம்’ என்பது இறைவனிடமிருந்து அவனுடைய தூதரின் வழியாக ஊற்றெடுக்கிறது. ஒரு முஸ்லிம் இஸ்லாமிய சட்டத்தைப் பற்றியும் நம்பிக்கையைப் பற்றியும் அதிகாரபூர்வமாக பேசுவதற்கான உரிமையை இறைவன் மற்றும் அவனது தூதருடனான இணைப்பின் ஊடாகவே பெறமுடியும். அது நேரடியாக நபிகளாரின் போதனைகளை மேற்கோள் காட்டுவதாகவோ, அல்லது சன்மார்க்க சட்டப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முறைகளை நபிகளாரிடமிருந்து மரபுரிமையாகப் பெற்று பயன்படுத்துவதாகவோ இருக்கலாம். இஸ்லாம் உருவாகி வளர்ந்து கொண்டிருந்த காலப்பிரிவில், முஸ்லிம்கள் நபிகளாரின் அதிகாரபூர்வ மரபின் பக்கமே மீண்டும் மீண்டும் திரும்புபவர்களாக இருந்தார்கள். நபிகளாரின் அதிகாரபூர்வ மரபானது சமுதாயத்தில் இறையச்சம் மிக்கவர்களால் வழிவழியாக பரப்பப்பட்டும் பொருள்கொள்ளப்பட்டும் வந்ததன் ஊடாகவே வெளிநோக்கிப் பரவியது. நபிமொழி அறிவிப்புகள், சட்ட நியாயவியல் முறைகள் எனும் வடிவங்களின் ஊடாகத்தான் நபிகளாரின் அதிகாரபூர்வ மரபு வழிவழியாகக் கடத்தப்பட்டது. ஆரம்ப இஸ்லாமிய காலப்பிரிவில் வெவ்வேறு சிந்தனைப் பள்ளிகளும் ஹதீஸ் மரபும் தோன்றுவதற்கு அவையே வழிவகுத்தன.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

நபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 4)

Loading

நபியவர்கள் எவ்வாறு முக்கிய அதிகார மையங்களை குடிமை உடன்பாடுகளின் கீழ் ஒன்றிணைத்தார்கள் என்பதையும்; தாம் செய்வதாக அவை வாக்களித்தவற்றுக்கு எவ்வாறு அவற்றைப் பொறுப்பாக்கினார்கள் என்பதையும் அவதானிப்பதன் மூலம், எல்லாக் காலத்திலும் முஸ்லிம்கள் தமது குடிமைப் பண்பை அநீதிக்கு எதிரான கூட்டுச் செயற்பாடுகளுக்கான ஒரு அடித்தளமாக மாற்றி வலுப்படுத்துவது எவ்வாறு என்பதை விளக்கிக் காட்டுவதே பரந்த நோக்கில் இந்தப் புத்தகத்தைப் பிரசுரிப்பதன் பின்னணியிலுள்ள குறிக்கோள். ஏனையவர்கள் ஏற்கனவே கூறியுள்ளவற்றை மீண்டும் எடுத்துரைப்பதோ; அல்லது நபி வரலாறு பற்றிய ஏனைய முந்தைய ஆய்வு முயற்சிகளில் செய்யப்பட்டுள்ளது போல், கொஞ்சம் மேலதிக விவரங்களுடன் காலக்கிரம ரீதியில் நபி வரலாற்றை எடுத்துரைப்பதோ எமது நோக்கம் அல்ல. மிகச்சிறந்த முன்மாதிரியென அல்லாஹ்வால் வருணிக்கப்பட்ட அண்ணல் நபிகளாரின் வரலாற்றின் ஊடாக, நாம் இங்கு நமது சமகாலப் பிரச்சினைகளுக்கு விடையளிக்கும் நோக்கில், விவரிப்பு அணுகுமுறையை விடுத்து பகுப்பாய்வு அணுகுமுறையை நோக்கி நகருவதற்கு முயற்சி செய்திருக்கிறோம்.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

நபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 3)

Loading

ஒடுக்கப்படும் மக்களை ஒடுக்குமுறையிலிருந்து விடுவிப்பது, அநீதிக்கு எதிராகப் பேசுவது போன்ற அதிமுக்கியப் பொறுப்புகளை ஒருவர் பலவீனராக இருக்கும் நிலையில் நிறைவேற்ற முடியாது. ஒடுக்குமுறையாளர்களை எதிர்கொள்வதற்கு அவரிடம் சக்தியும் அதிகாரமும் இருப்பது அவசியம். அண்ணல் நபியவர்கள் தாம் வென்றெடுத்த உலகியல் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கு மேற்கொண்ட வழிமுறைகளில் ஒன்று என்ற வகையில், ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொள்வதில்லையென நீதமானவொரு உடன்பாட்டுச் சட்டகத்திற்குள் வரும்படி சூழவிருந்த பிராந்திய அதிகார மையங்களை நோக்கி அழைப்பு விடுத்தார்கள். பங்குபெறும் அனைத்துத் தரப்புகளின் சட்டபூர்வமான தேவைகளும் மதிக்கப்படும் விதத்தில் பரஸ்பர நலன்பயக்கும் நோக்கில் உடன்படிக்கை ஷரத்துகள் வகுக்கப்பட்டன. ஒவ்வொருவரின் உரிமைகளும் கடமைகளும் மிகத் தெளிவாக விரித்துரைக்கப்பட்டன. இத்தகைய ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும் மீறப்படும் சமயத்தில், அதனால் வரக்கூடிய தீங்கான பின்விளைவுகளைக் களையும் நோக்கில் இராணுவ நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பு சாத்தியமான சகலவித அரசியல் முயற்சிகளையும் முயன்றுபார்க்க வேண்டும் என்று நபிகளாரின் முன்னுதாரணம் காட்டுகிறது.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

நபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 2)

Loading

மக்காவில் நபியவர்கள் முன்வைத்த தூதுத்துவ அழைப்புக்கு மறுமொழியளித்தவர்களில் பெரும்பாலனவர்கள் பலவீனமான, ஒடுக்கப்பட்ட, துயருக்குள்ளாக்கப்பட்ட அடிமைகள், ஏழைகள், பெண்கள் மற்றும் இளைஞர்களாகவே இருந்தார்கள். அவர்கள் மத்தியில் மேல்தட்டினரின் வாரிசுகள் சிலரும் இருந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்களும் கூட தங்களின் புதிய இஸ்லாமிய நெறியைக் கைவிடும்படி அவர்களின் குடும்பத்து மூத்தவர்களால் மிகக் கடுமையாக நடத்தப்பட்டு, அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். இவற்றுக்கெல்லாம் முஸ்லிம்கள் கொஞ்சமும் பலியாகிவிடவில்லை. இஸ்லாத்தையோ அல்லாஹ்வின் தூதர் மீதான விசுவாசத்தையோ கைவிடுவதைக் காட்டிலும், தண்டனைகளையும் சித்ரவதைகளையும் அனுபவிப்பதையே அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். நபியவர்களின் தூதின் உண்மைத் தன்மையையும், மக்காவின் சமூக ஒழுங்கு மிகத் தீவிரமாகப் பழுதடைந்த ஒன்று என்பதையும் அவர்கள் முற்றாக நம்பினார்கள்.

மேலும் படிக்க