குறும்பதிவுகள் மொழிபெயர்ப்பு 

“மரணத்திற்குப் பிறகான வாழ்வு என்பது மதம் உருவாக்கிய கட்டுக்கதை!”

Loading

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நிலைத்த பின்விளைவுகள் முடிவற்ற காலம் வரை நீடித்திருக்கும் என்கிற கருத்துதான் உண்மையில் அச்சம் தருவது. அது ‘நம் வாழ்வின் அர்த்தம் என்ன?’, ‘அதன் நோக்கம் என்ன?’ போன்ற கேள்விகளின்பால் கவனத்தைக் குவிக்கும்படி நம்மை வற்புறுத்துவதுடன், நாம் செய்யும் செயல்கள் யாவற்றைக் குறித்தும் நாளை மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்பதால் நாம் நம்முடைய செயல்களை மிகக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும் என்றும் அது நம்மை வற்புறுத்துகிறது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் கேள்வி-பதில்கள் மொழிபெயர்ப்பு 

ஹிஜாப் சட்டம் எந்த விதத்தில் ஒடுக்குமுறையானது?

Loading

பொது இடங்களுக்கான முஸ்லிம் உடை ஒழுங்குகள் என்பவை இறைவழிகாட்டுதல்களின் அடிப்படையில் அமைந்தவை. உடலின் எந்தப் பகுதியை மறைக்க வேண்டும், எதனை மறைக்கக் கூடாது என்பது குறித்த நம்முடைய நம்பிக்கையானது இறைவழிகாட்டுதல்களிலிருந்து வருவது. இறைவனை நம்புகிறவர்கள் என்ற அடிப்படையில் நாம் அந்த இறைவழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதோடு, அவற்றின் அகிலத்துவ முக்கியத்துவத்தையும் மெய்யறிவையும் புரிந்துகொள்ளவும் முயற்சிக்கிறோம். பிறருக்கு இவை எதிலும் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் முஸ்லிம்களிடத்தில் இவ்வுயர் விதிகளிலிருந்து பிறக்கும் தர்க்க நியாயமேனும் இருக்கின்றது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

தண்டனைகளைக் கொண்டு மட்டுமே குற்றங்களை ஒழித்துவிட முடியுமா?

Loading

போர்ச்சுகலின் உதாரணம் கவனத்திற் கொள்ளத் தக்கது. தண்டனைக்குரிய குற்றங்களின் பட்டியலிலிருந்து போதைப் பொருள் பாவனையை அது நீக்கியிருக்கிறது. இப்போது எவரேனும் போதைப் பொருள் பாவித்தது கண்டுபிடிக்கப்பட்டால் “நல்லுரை மன்றங்களின்” முன் அவர் ஆஜராக வேண்டும். அங்கு அவருக்கு போதைப் பொருள் பாவனையின் அபாயங்கள் பற்றி நிபுணர்களைக் கொண்டு அறிவுறுத்தப்படுவதுடன் உளவியல், மருத்துவ உதவியும் வழங்கப்படும்.

மேலும் படிக்க