சமஸ்கிருதம் என்கிற மொழியை விடுதலைக்குப் பிந்தைய இந்திய அரசு எப்படியெல்லாம் வளர்க்க முயன்றது என்பதைப் பற்றிப் புரிந்துகொள்ளச் சமஸ்கிருத கமிஷன் சார்ந்து பல்வேறு விஷயங்களைத் தொட்டுக் காண்பிக்கிறது சுமதி ராமசுவாமியின் கட்டுரை.
“(தலித்துகள்) பெளத்தராகவோ ஆர்ய சமாஜியாகவோ மாறுவதால் உயர் வர்ணத்தைச் சேர்ந்தோர் எனத் தம்மை அழைத்துக்கொள்வோர் (தலித்துகள்மீது) கொண்டுள்ள தப்பபிப்பிராயங்களில் எந்தவொரு குறிப்பிடத்தக்க மாற்றமும் வந்துவிடப் போவதில்லை. எனவே, அந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பதில் பெரிய அர்த்தமிருப்பதாகத் தெரியவில்லை. போர்க்குணமிக்க ஒரு சமுதாயத்தின் ஆதரவுடன் இந்துக்களின் தப்பபிப்பிராயங்களை வெற்றிகரமாக எதிர்க்க நாம் விரும்புவதாக இருந்தால், நாம் கிறிஸ்தவத்துக்கோ இஸ்லாத்திற்கோதான் மாறவேண்டும். அப்போது மட்டுமே தலித்துகள்மீது படிந்துள்ள தீண்டாமைக் கறை துடைத்தெறியப்படும்.”
“மதம் மாறுவது என்கிற நிலையில் நீங்க பவுத்தரா, கிறித்தவரா மாறுவது ரொம்ப சுலபம். அது யாரையும் இந்த சமூகத்துல பாதிக்காது. மதம் மாறுகிறவர்கிட்டேயும் மாற்றத்த கண்டுபிடிக்க முடியாது. வேணும்னா கூட்டம் போட்டு சொல்லிக்கலாம். ஆனா, நீங்க இஸ்லாம் மாறுவது என்பது மத மாற்றம் மட்டுமல்ல. உன்னுடைய சமூகத்துல உன்ன அடிமைப்படுத்துகிற கலாச்சாரத்திலிருந்தும் மாறுகிறோம்.”
கல்வி நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள், பிழைப்புவாத தலித் தலைவர்களுடன் தேர்தல் கூட்டணிகள் ஆகியவற்றின் மூலம் தலித் மக்கள் மத்தியில் ஊடுருவத் தொடங்கியிருக்கும் ஆர்.எஸ்.எஸ். அம்பேத்கரை முஸ்லிம் எதிர்ப்பாளராக அவர்களுக்கு அறிமுகப்படுத்த முனைகிறது. சாதி, தீண்டாமையைத் தோற்றுவித்துப் பாதுகாக்கும் இந்து மதத்தை ஒழிப்பதையே தனது லட்சியமாகக் கொண்டிருந்த அம்பேத்கரை, தனது நோக்கத்துக்கேற்ப பிசைந்து மாற்றியமைக்கிறது. அவரை முழுமையாக இருட்டடிப்புச் செய்ய முடியாதாகையால், “இந்து சமூகத்தில் சமத்துவம் நிலவ வேண்டுமென விழைந்த முஸ்லிம் எதிர்ப்பாளராக” அவரைக் காட்ட முனைகிறது.
எது புரட்சி? மாற்றத்தைத் தருவது தானே புரட்சி? தீண்டப்படாத மக்களைப் பொருத்தமட்டில், தீண்டாமையைக் கற்பிக்கும் கடவுள்களைத் தூக்கி எறிவதே புரட்சியன்றி, வேறொன்றும் புரட்சி ஆகாது. ஆகவே கடவுளை மாற்றுவோம். கடவுளை மாற்றுவோம் எனக் கூறி முடிக்கிறேன்.
“(இந்த நோய்க்கு) ஒரே மருந்துதான். அது இஸ்லாம்தான்! இதைத்தவிர வேறு மருந்து இல்லை. இது இல்லாவிட்டால் வேதனைப்பட வேண்டியதுதான். நோய் தீர்ந்து எழுந்து நடக்க இன்றைய நிலையில் இஸ்லாம் என்னும் மருந்துதான். இதுதான் நாடு கொடுக்கும். வீரம் கொடுக்கும். நிமிர்ந்து நடக்கச் செய்யும் மருந்தாகும்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் (‘இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து’ என்னும் பெயரில் குடியரசு பதிப்பகத்தால் இந்த உரை சிறு நூலாக 1947ல் வெளியிடப்பட்டது.)