நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

சலஃபிசமும் மரபுவாதமும் – நூல் அறிமுகம்

Loading

சமீபத்தில் வெளியான முனைவர் இமாத் ஹம்தாவின் Salafism and Traditionalism: Scholarly Authority in Modern Islam என்ற நூல் எமது உரையாடல்புலத்திற்குப் பயனளிக்கும் பல முக்கியமான உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது. அதிலொன்று, நவீனகால சலஃபிசச் சிந்தனைப் பள்ளியானது இஸ்லாமிய மூலாதாரங்களைப் பொருள்கோடல் செய்வதற்கான மற்றொரு முறைமையாகவே (Hermeneutical Methodology) புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்ற அவரது கருத்து. ஏனெனில், கடந்த சில தசாப்தங்களாக சலஃபிசம் எனும் சொல் மிகவும் அரசியல்படுத்தப்பட்ட ஒன்றாகிவிட்டது. நாசகர அரசியல் குறிக்கோள்களை நோக்கி மக்களை வழிநடத்தும் கோட்பாடாகவே அது பார்க்கப்படுகிறது. இது தவறான கண்ணோட்டம் என்று கூறும் நூலாசிரியர், சலஃபிசத்தின் மையமான வாதங்களையும், மூலாதாரங்களை அவர்கள் அணுகும் விதத்தையும், அதிலுள்ள உள்முரண்பாடுகளையும் பகுப்பாய்வு செய்கிறார்.

அடுத்து, இஸ்லாமிய மூலாதாரங்களைப் பொருள்கோடல் செய்வது எப்படி என்பது குறித்த சலஃபிசச் சிந்தனைப் போக்கை, அதற்கு எதிர்த்திசையில் பயணித்த இஸ்லாமிய மரபுவாதத்தின் (Islamic Traditionalism) விவாதங்களைத் தவிர்த்துவிட்டுப் புரிந்துகொள்ள முடியாது என்கிறார் இமாத் ஹம்தா. இந்தப் பின்னணியில், இஸ்லாமிய மரபுவாதத்தின் பிரதான கருத்தாடல்கள் பற்றியும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்தியாவில் மதரசாக்கள் – நிழலும் நிஜமும்

Loading

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இன்னும் 8.5 கோடி குழந்தைகள் பள்ளியையே எட்டிப் பார்க்காத நிலையில், மதரசாக்கள் தன்னளவில் அறிவொளியைப் பரப்பியே வருகின்றன. அதிலும், மதரசாக்களில் பயில்பவர்கள் சமூகத்தின் அடித்தட்டு மக்களாகவும் பெண்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கான உணவு, உறையுள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளோடு அவர்களுக்கான கல்வியும் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பு இல்லையென்றால் அவர்களில் பெரும்பாலானவர்கள் படிக்காத தற்குறிகளாகத்தான் ஆவார்கள். நவீனச் சிந்தனை என்ற போர்வையில் மதரசாவை மட்டும் குறிவைத்துத் தாக்குபவர்கள் சிறுபான்மைச் சமுதாயத்திற்கு எதைக் கையளிக்கப்போகிறார்கள்?

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மதரசாக் கல்வித் திட்டம் – நேற்றும் இன்றும்

Loading

முகலாயர் காலத்தில், குறிப்பாக அக்பரின் காலத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் மதரசாக்களில் ஒருசேர கல்வி பயில ஊக்குவிக்கப்பட்டனர். ஏழ்மை அறிவுத் தேட்டத்திற்கான தடைகல்லாக இருக்கக் கூடாது என்பதற்காக மேல்படிப்பு மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கும் நடைமுறையும் முதன்முதலாக மதரசாக்களிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மதரசாக்களின் மாணவர்கள் நல்லொழுக்கம், கணிதம், அளவையியல், வேளாண்மை, வடிவியல், எண்சோதிடம், வானவியல், அரசியல், பொதுநிர்வாகம், மருத்துவம், தர்க்கவியல், இயற்பியல் உள்ளிட்ட 18 வகையான பாடங்களைக் கற்றுத்தேற வேண்டியிருந்ததாக அபுல்ஃபஜல் தனது அய்ன் இ அக்பரியில் குறிப்பிடுகிறார். நவீன பாரதத்தின் தந்தை, இந்து மதச் சீர்திருத்த சிற்பி என்று புகழப்படும் ராஜாராம் மோகன்ராய் இத்தகைய இஸ்லாமியக் கலைக்கூடத்தில் பயின்றவரே.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கருப்பொருள் அடிப்படையில் திருக்குர்ஆன் விரிவுரை – நூல் அறிமுகம்

Loading

திருக்குர்ஆனின் வசனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சிதறல்கள் அல்ல. அதன் வசனங்களுக்கு மத்தியில் வெளிப்படையான, நுண்ணிய தொடர்புகள் இருக்கின்றன. அதன் ஒவ்வொரு அத்தியாயமும் ஆரம்பம் முதல் இறுதிவரை நுண்ணிய இழைகளால் இணைக்கப்பட்டுள்ளன. அதன் அத்தியாயங்களுக்கு மத்தியிலும் தொடர்புகள் இருக்கின்றன. அதன் அத்தியாயங்கள், வசனங்கள் இறைக்கட்டளையின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. அதற்கு ‘இல்முல் முனாஸபாத்’ என்று பெயர். இது திருக்குர்ஆனின் அற்புதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – நூல் அறிமுகம்

Loading

சையித் குதுப் எழுதிய புத்தகங்களில் முதன்மையான புத்தகமாக ‘இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்’ என்ற புத்தகத்தையே கூறுவேன். தமிழில் 260 பக்கங்களைக் கொண்ட சிறிய புத்தகம்தான். ஆனால் செறிவான உள்ளடக்கத்தைக் கொண்ட மிகச் சிறந்த புத்தகம். ஒவ்வொரு நம்பிக்கையாளனும் ஒரு பாடத்திட்டமாகக் கருதி பயில வேண்டிய புத்தகம் அது. இஸ்லாமிய இயக்கங்கள் தங்கள் ஊழியர்களுக்கு – குறைந்தபட்சம் பொறுப்பாளர்களுக்கு – இந்தப் புத்தகத்தை வாசிக்கும்படி பரிந்துரைக்க வேண்டும். இஸ்லாம் குறித்து வாசிக்க விரும்புவோருக்கு இந்தப் புத்தகம் மிகச் சிறந்த வழிகாட்டி.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியச் சட்டவியலை காலனியநீக்கம் செய்தல்

Loading

காலனியத்திற்கு முந்தைய இஸ்லாமிய ஃபிக்ஹ் பாரம்பரியம் என்பது முஸ்லிம் சமூகத்தினுடைய உற்பத்தியாகும். முஸ்லிம் சமூகம் தனது வாழ்வை ஒழுங்குபடுத்திக்கொள்ளும் நோக்குடன் ஆரம்பித்த சமூக உரையாடலின் விளைவுதான் அது. இதன் பொருள் என்னவென்றால், அரசுடைய செயல்திட்டங்களின் அடிப்படையிலோ அல்லது அதனுடைய பலத்தின் துணையுடனோ அது வளர்ச்சியடைவில்லை என்பதே.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் மொழிபெயர்ப்பு 

நவீன இஸ்லாமிய அறிவுஜீவிகளின் தடுமாற்றம்

Loading

நாம் உளுத்துப்போன அவற்றை அகற்றித் துப்புரவாக்க வேண்டும். அவற்றைத் தகர்த்து, கலைத்துப்போட்டு, அதன் சிதிலங்களை அப்புறப்படுத்த வேண்டும். அதன் பிறகே, நாம் முழு நம்பிக்கையுடன் நம்முடைய சொந்த நியமங்களில் ஊன்றிநின்று, நம்முடைய சன்மார்க்கத்தின் மேன்மையையும் மதிப்பச்சம்தரும் மகோன்னதத்தையும் உலகின் முன்பாக மீண்டுமொருமுறை வெளிப்படுத்திக் காட்டமுடியும், இன்ஷா அல்லாஹ்.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் 

தமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்

Loading

இன்று சர்வசாதாரணமாகக் கிடைக்கும் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள், மேலே விவரித்தபடியான ஒரு வரலாற்றுப் பயணத்தைக் கடந்தே நம்மிடம் வந்து சேர்ந்திருப்பதை விரிவாக அறிந்துகொள்ள டார்ஸ்டனின் ஆய்வுரை உதவியதில் மனநிறைவு.

மேலும் படிக்க
நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய விஞ்ஞானங்கள்: அர்த்தம், சாத்தியம், எதிர்காலம்

Loading

இஸ்லாமிய அறிஞர்கள் அவர்களுடைய மரபை முழுமையாக அறிந்திருப்பதோடு மட்டுமல்லாமல், இது தொடர்பாக மேற்கத்திய அறிஞர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை அறிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். இதற்கு அர்த்தம் என்னவென்றால், ஆங்கிலம் மட்டுமல்லாமல் ஜெர்மன், பிரெஞ்சு, மற்றும் இன்ன பிற மொழிகளில் உள்ள அறிவுசார் ஆய்வுகளை அறிந்தவர்களாக இருக்க வேண்டும். இத்தகைய கல்விப்புல ஆய்வுகள் மீது அறிவை அடிப்படையாகக் கொண்டு விமர்சனங்களை முன்வைக்க முடிந்தவர்களாக இருக்க வேண்டும். இதில் இஸ்லாமிய அறிஞர்களிடத்தில் கல்விப்புலம் சார்ந்த போதாமைகள் இருக்குமானால் அவர்களின் எழுத்துகளை எவரும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை. இதற்கு மொழியாளுமையும் தேவைப்படுகிறது. அறபு, பாரசீகம், ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு கட்டாயமாகத் தேவைப்படுகின்றன. மேலும் ஒரு இஸ்லாமிய மொழியையும் அறிந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு அறிஞர் உஸ்மானிய அறிஞர்கள் பற்றியோ, இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் பற்றியோ அக்கறை கொண்டிருப்பாரானால், அவர் துருக்கி அல்லது உருது மொழியைக் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். இன்று ஒரு சிறந்த இஸ்லாமிய அறிஞர் என்பதற்கான அளவுகோல் என்னவென்றால், அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாமல் முக்கியமான மேற்கத்தியப் பல்கலைக்கழகங்களில் கூட மரியாதையை உண்டாக்கக்கூடிய உரையை நிகழ்த்தக்கூடிய திறன்படைத்தவராக அவர் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

ததப்புருல் குர்ஆன்: முன்னுரை (முதல் பகுதி)

Loading

அரபு ஜாஹிலிய்யா காலத்தைக் குறித்து நம்முடைய வரலாற்று நூற்களில் காணப்படும் தகவல்கள் யாவும் மேலோட்டமான நுனிப்புல் மேய்கின்ற தகவல்கள் ஆகும். அவற்றின் மூலமாக நாம் காண விளைகின்ற விஷயத்தை ஒருபோதும் சென்றடைய முடியாது. பொதுவாக நமது வரலாற்று ஆசிரியர்கள் விவரிக்கின்ற தகவல்களைப் படித்தால் என்ன தோன்றுகின்றது? அவர்கள் மனித குலமே கிடையாது. மாறாக, ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் என்ற எண்ணம்தான் தோன்றுகின்றது. ஒரு காலத்தில் மில்லத்தே இப்ராஹீம்- இப்ராஹீமின் மில்லத்தாக இஸ்மாயிலின் தீனின் வாரிசாகத் திகழ்ந்த ஒரு சமூகத்தின் சித்திரமாக அது நமது கண்களுக்குத் தென்படுவதில்லை. அவர்கள் ஏன் இவ்வாறு செய்துள்ளார்கள்? இப்படிச் செய்தால்தான் இஸ்லாத்தின் மேன்மையை உலகிற்குப் பறைசாற்ற முடியும் என்று கருதியதால்!

மேலும் படிக்க