கட்டுரைகள் 

பனூ குறைளா சம்பவம்: ஒரு மீளாய்வு

இஸ்லாத்தின் பெயரால் கொலைபாதகங்களை நிகழ்த்திவரும் ஒரு சமகால கிரிமினல் கும்பலை (ISIS) ஆதரிப்பதென இவர்கள் எடுத்திருக்கும் அநீதமான நிலைப்பாடு, இவர்களை எப்படியெல்லாம் தரம்தாழ்ந்து பேச வைத்திருக்கிறது என்பதை பார்க்கும்போது சினமும் பரிதாபமும் கலந்தவொரு உணர்வு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் மொழிபெயர்ப்பு 

மனிதனும் இஸ்லாமும்

இச்சுருக்கமான ஏழு உரைகளின் வழியாக ஷரீஅத்தி இஸ்லாமிய சித்தாந்தம், அதன் உலகநோக்கு, மனிதனின் சிறைகள், ஒரு புதிய சமூகத்தை நிர்மாணிப்பதில் சுதந்திர சிந்தனையாளரின் பொறுப்பு ஆகியன பற்றி அறிவொளியூட்டும் மனச்சித்திரமொன்றை உருவாக்கியிருக்கிறார்.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் மொழிபெயர்ப்பு 

பற்றியெரியும் பாலைவனம்

‘பற்றியெரியும் பாலைவனம்’ – இது வழமையானதொரு சாகசப் பயண நூல் இல்லை. இந்நூலை வாசிக்கையில் எனது இதயத்திற்குள் மனதிற்குள் சத்தியம், வீரம், ஆண்மை ஆகிய உணர்வுகள் உக்கிரமாக ஊடுருவிப் பாய்ந்ததாக உணர்ந்தேன். இந்நூலை வாசித்த நானறிந்த பலரும் இதே விதமான கிளர்ச்சியூட்டும் உணர்வை அனுபவித்ததாகச் சொன்னார்கள். வாசிக்க வாசிக்க அவரை மென்மேலும் நேசிக்க ஆரம்பித்து விடுவீர்கள். ஒவ்வொரு புதிய பக்கத்தை திருப்புவதற்கு முன்னும் இவ்வுணர்வு அதிகரித்துச் செல்வதை உணர்வீர்கள்.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் 

சூஃபியிசம் என்றால் என்ன?

சூஃபிகள் எதை நம்புகின்றனர்? எதை அடைய முயலுகின்றனர்? என்ன செய்கின்றனர்? இதைப் பற்றிப் பேசும் பிற எழுத்தாளர்கள் போலன்றி, மார்டின் லிங்ஸ் இம்மூன்று கேள்விகளுக்கும் சமநீதியுடன் பதிலளிக்கிறார். எனவே, ‘சூஃபியிசம் என்றால் என்ன?’ என்ற முதன்மைக் கேள்விக்கு அவரால் மிக வளமாக பதிலளிக்க முடிந்திருக்கிறது. ஒவ்வொரு பதிலும் ஒவ்வொரு கோணத்திலிருந்து வருகின்றன என்றபோதும், அவை அனைத்தும் விவகாரத்தின் வேர் நோக்கியே செல்கின்றன.

மேலும் படிக்க
காணொளிகள் மொழிபெயர்ப்பு 

பேரின்ப ரசவாதம் – “தன்னை அறிதல்”

இமாம் கஸ்ஸாலியின் ஞானப் பேழையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு அரிய முத்து இது. அதனை Raindrop Academy-ன் கைவண்ணத்தில் உருவான காணொளியுடன் சேர்த்து கீழே மொழிபெயர்த்து தந்திருக்கிறேன். காணொளியை பார்த்து இரசியுங்கள். எனது மொழிபெயர்ப்பையும் வாசித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

முஹம்மது அபூ ஸஹ்றா – ஓர் அறிமுகம்

அவரது நூல்களுள் அனைத்தைக் காட்டிலும் மிகப் பிரபலமானவை, ஒரு தொடராய் அமைந்த எட்டு நூல்கள்தாம். அவை ஒவ்வொன்றையும் அவர் இஸ்லாமிய வரலாற்றிலிருந்த முன்னணி அறிஞர்களுள் ஒருவரது வாழ்வு, கண்ணோட்டங்கள், புலமைத்துவம் ஆகியவற்றை ஆராய்வதற்கு ஒதுக்கியிருக்கிறார். அவ்வறிஞர்கள் பின்வருமாறு: அபூ ஹனீஃபா, மாலிக், அல்-ஷாஃபியீ, அஹ்மது இப்னு ஹன்பல், ஸைது இப்னு அலீ, ஜாஃபர் அஸ்-சாதிக், இப்னு தைமிய்யா மற்றும் இப்னு ஹஸ்ம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய நாள்காட்டியின் மூலோபாய முக்கியத்துவம்

நமது திட்டமிடலுக்குப் பயன்படுத்த முடியாதவொரு நாள்காட்டியை அல்லாஹ் நமக்கு வழங்கியிருப்பான் என்று உங்களால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா? அதே போல், வருங்காலத்திற்காக மூலோபாய ரீதியில் ஆயத்தமாகும் ஒரு இஸ்லாமிய அமைப்பு, போலிக் கடவுளர் வழிபாட்டின் மீதமைந்த ஒரு நாள்காட்டியை அதற்குப் பயன்படுத்துவதை உங்களால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா?

மேலும் படிக்க
கட்டுரைகள் 

மார்டின் லிங்ஸ்: ஓர் அறிமுகம்

2005-05-12-ல் மார்டின் லிங்ஸ் என்ற அபூ பக்ரு அல்-சிராஜுத்தீன் தனது 96 வயதில் இறையடி சேர்ந்ததை யடுத்து, The Journal of Islam & Science, Vol. 3, No. 2-ல் டாக்டர் முஸஃப்பர் இக்பால் எழுதிய நினைவேந்தல் கட்டுரையை தழுவி இதை ஆக்கியிருக்கிறேன். மெல்லினம் பதிப்பித்த ‘சூஃபியிசம் என்றால் என்ன?’ என்ற நூலில் இது பிரசுரமாகியுள்ளது.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் 

சமீபகால வரலாற்றின் மூன்று முஜாஹிதுகள்

முஸ்லிம் சமூகத்தை இஸ்லாத்தை விட்டும் தூரமாக்குவதற்கான முயற்சி இது என்பதை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட இம்முஜாஹிதுகள், வெற்றி வாய்ப்பு துளியும் இல்லை என்று அறிந்த நிலையிலும் வீரஞ்செறிந்த இப்போராட்டங்களை முன்னெடுத்தார்கள். தமது தனிமனித, சமூக வாழ்வின் சகல அம்சங்களையும் தீர்மானிப்பதாக சத்திய தீனுல் இஸ்லாமே இருக்க வேண்டுமென்கிற அவர்களின் நெஞ்சார்ந்த உணர்வுதான் இப்போராட்டங்களின் அடிநாதமாக இருந்தது.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் 

சஈத் நூர்ஸியும் ரிஸாலா-யே நூரும்

குர்ஆனிய உலகநோக்கை உட்கிரகித்து, இஸ்லாத்தின் புரட்சிகர இயல்பில் ஆழ்ந்த பற்றுறுதி கொண்டு, எதை நிர்மூலமாக்கி எதை நிர்மாணிக்க முனைகிறோம் என்பது பற்றிய பூரண பிரக்ஞை கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்குவதற்குப் பொருத்தமானவொரு கல்விமுறையே உண்மையில் இன்று தேவையாக இருக்கிறது. அத்தகைய ஒன்றையே சஈத் நூர்சி தனது ‘ரிஸாலா-யே நூரில்’ முன்வைக்கிறார்.

மேலும் படிக்க