கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஃபலஸ்தீன விடுதலை கீதம் வாசிக்கும் ஃபிஃபா உலகக் கோப்பை!

உலகக் கோப்பையில் பொங்கிப் பெருகியிருக்கும் ஃபலஸ்தீன விடுதலை ஆரவாரம் அம்மக்களுக்கு அவர்கள் தனித்து விடப்படவில்லை என்ற செய்தியையும், உலகுக்கு ஃபலஸ்தீன விடுதலை வேட்கை உயிர்ப்புடன் இருக்கிறது என்ற செய்தியையும் பறைசாற்றியிருக்கின்றது. அதே நேரத்தில், இஸ்ரேல் என்னதான் அறபுலக அரசுகளுடன் ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக்கொண்டு தனது இருப்பை அங்கீகரிக்கச் செய்தாலும், மக்களைப் பொறுத்தமட்டில் அது என்றுமே ஒரு நாடாக அங்கீகாரம் பெற முடியாது என்ற செய்தி பொட்டில் அடித்தாற்போல் உணர்த்தப்பட்டிருக்கின்றது.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

என்ன நடக்கிறது ஃபலஸ்தீனில்?

முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமான அல்அக்ஸா பள்ளிவாசல் அமைந்துள்ள நிலமான ஃபலஸ்தீன், இஸ்லாமிய வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவமும் தனிச்சிறப்பும் வாய்ந்தது என்பதை நாம் அறிவோம். இப்ராஹீம், லூத், தாவூத், சுலைமான், மூஸா, ஈஸா (அலை) உள்ளிட்ட இறைத்தூதர்களின் பிறப்பு அல்லது இறப்பு இம்மண்ணில்தான் நிகழ்ந்துள்ளது. ’இறைத்தூதர்களின் பூமி’ எனும் புகழுக்குரிய ஃபலஸ்தீனில் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் இருப்பது தொட்டு அங்கிருந்து நபிகள் நாயகம் (ஸல்) விண்ணுலகப் பயணம் மேற்கொண்டது வரை அதை மிகுந்த சிறப்புமிக்கதாய் ஆக்கியிருக்கிறது.

மேலும் படிக்க