human rights கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மனித உரிமைச் சொல்லாடல்கள் மீதான விமர்சனம் – நிஷாந்த்

Loading

நம்மிடையே புழக்கத்திலுள்ள ‘மனித உரிமை’க்கும், மனித உரிமை அமைப்புகளின் சொல்லாடல்களுக்கும் வித்தியாசங்கள் இருக்கவே செய்கின்றன. அன்றாட ஒடுக்குமுறைகளுக்கு முகங்கொடுக்கும் விதமாக அவை முக்கியமான இடையீட்டையும் பங்களிப்பையும் செய்கின்றன என்பதை மறுக்க முடியாது. எனினும், இக்கட்டுரையானது சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் அரசியல் வன்முறைகளை மனித உரிமைச் சொல்லாடல்களைக் கொண்டு அணுகுவதை விமர்சனத்திற்குட்படுத்துகிறது. இறுதியாக, மனித உரிமைச் சொல்லாடல்கள் நவதாராளவாதச் சிந்தனைகள் வளர்ந்துவந்த சமயத்தில் மீண்டும் புழக்கத்திற்கு வந்ததன் பின்னணியையும் பேசுகிறது.

மேலும் படிக்க
ex muslim tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

‘முன்னாள் முஸ்லிம்கள்’ உருவாகக் காரணமென்ன?

Loading

முன்னாள் முஸ்லிம்கள் (Ex-Muslims) என்ற பெயரில் உலவும் ஒருசிலர், இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் தொடர்ச்சியாக எதிர்மறையான கருத்துகளையும் அவதூறுகளையும் பரப்பி வருவதை உங்களில் சிலர் கவனித்திருக்கக்கூடும். கருத்தாழம் ஏதுமின்றி, மிகவும் மேம்போக்கான குற்றச்சாட்டுகளையும், மீம் மாதிரியான கேலி கிண்டல்களையும் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து, சாமானிய முஸ்லிம்களைச் சீண்டி மகிழ்வது என்ற அளவில் இவர்களின் செயல்பாடுகள் அமைகின்றன.

கல்வியாளர் சைமன் கோட்டீ எழுதிய The Apostates என்ற சமூகவியல் ஆய்வு நூல் இவர்களைப் பற்றிய முழுமையான பார்வையை வழங்குகிறது. 2015ல் வெளியான இந்நூல், பிரிட்டனிலும் கனடாவிலும் வசிக்கும் ‘முர்தது’கள் (முன்னாள் முஸ்லிம்கள்) தொடர்பானது. முர்ததுகள் தங்களைப் பற்றியும், இஸ்லாத்தை விட்டு வெளியேறும்போது அவர்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சிகரமான அனுபவங்கள் பற்றியும் அளிக்கும் வாக்குமூலத்தை இந்நூல் பிரதானமாகப் பதிவுசெய்கிறது. அந்தப் புத்தகம் முன்வைக்கும் கருத்துகளின் அடிப்படையில் எமது பார்வைகளையும் சேர்த்து வழங்க முனைகிறது இந்த ஆக்கம்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

உலகை ஆளும் புதிய மதம்!

Loading

Pew ஆய்வு மையம் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் அமெரிக்காவில் வளரும் 77 சதவீத முஸ்லிம் சிறுவர்கள் தம்மை இஸ்லாத்தோடு அடையாளம் காண்கிறார்கள் என்கிறது. அப்படியென்றால் மீதமுள்ள 23 சதவீதத்தினரின் நிலையென்ன, 77 சதவீதம் இருப்பவர்களுள் எத்தனை பேர் இஸ்லாமிய உலக நோக்குடன் இருக்கிறார்கள், எத்தனை பேர் இஸ்லாத்தைக் கடைபிடிக்கிறார்கள்? சில தலைமுறைகள் கடந்த பின்னர் நிலைமை என்னவாகும் என்பன விடை காண வேண்டிய வினாக்களாய் நம்மிடையே உள்ளன.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்

Loading

இயல்பிலேயே இஸ்லாம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த கண்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை மறுக்கும் இந்த ஆதிக்கக் கருத்தியல்களின் முன்னால் மற்ற மதங்கள் போல் அது ஒருபோதும் மண்டியிடாது.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

ஒரு முஸ்லிம் ஐயவாதியின் ஒப்புதல் வாக்குமூலம் – டேனியல் ஹகீகத்ஜூ

Loading

முஸ்லிம் அறிவுத்துறை வரலாறு நெடுகிலும் இத்தகைய முஸ்லிம் ஐயவாதிகள் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றனர். அவர்கள் எந்தெந்த தத்துவங்களை எல்லாம் அபாயகரமானவையாகவும் நாசகரமானவையாகவும் கண்டார்களோ அவற்றை மதிப்பீடு செய்யவும், நிலைகுலையச் செய்யவும், விமர்சனத்திற்கு உட்படுத்தவும், வீழ்த்தவும் எல்லாவிதமான பகுத்தறிவு மூலோபாயங்களையும் அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதைக் காண முடிகிறது. இன்றைய முஸ்லிம்கள் தொலைத்துவிட்டவொரு அரிய கலை இது.

மேலும் படிக்க