கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது இஸ்லாம்! – பெரியார்

Loading

“இன்று முஸ்லிம்கள் மீது இந்துக்களுக்கு உள்ள வெறுப்புக்குக் காரணம், இஸ்லாம் மத வெறுப்பேயாகும். இஸ்லாம் மதமானது ஆரிய மதத்திற்கு (இந்து மதத்திற்கு) எதிரானதாக இருப்பதாலேயே இஸ்லாத்தை இந்துக்கள்(ஆரியர்கள்) வெறுக்கிறார்கள். ஏன் எதிராய் இருக்கின்றது என்றால், இஸ்லாம் இந்து மதத்தின் அடிப்படையையே தகர்த்து விடுகிறது.” – பெரியார்

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

விஸ்வரூபம்: ஒரு போஸ்ட்மார்ட்டம் அறிக்கை

Loading

இப்படத்தில் வரும் ஒரே நல்ல முஸ்லிம் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவனாக, இந்திய இராணுவத்தில் பெரிய பொறுப்பில் இருப்பவனாக, பார்ப்பனப் பெண்ணை கலப்பு மணமுடித்தவனாக, கதக் கற்றவனாக, இறையியல்களின் இரும்புவேலியைத் தாண்டிய பிரபஞ்சமயமான ஆன்மிகத்தை உணர்ந்தவனாக, தமிழ் அறிவுச்சூழலின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் ‘வஹ்ஹாபி அல்லாத சூஃபியாக’ சித்தரிக்கப்படுகிறான். இதற்கு எதிரே ஏனைய எல்லா முஸ்லிம்களும் தூய்மைவாதிகளாகவும், கெடுபிடியுடன் இஸ்லாமியச் சட்டதிட்டத்தைப் பின்பற்றுபவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

கமலின் விஸ்வரூபத்தை எந்தச் சட்டகத்தில் வைத்துப் புரிந்துகொள்வது?

Loading

தமிழில் தேவர் சமூகப் பெருமையை விதந்தோதி வந்த படங்களை விட அதிகமான படங்கள் முஸ்லிம் தீவிரவாதம் குறித்து வந்திருந்திருக்கின்றன என்றாலும் அவற்றில் பெரும்பாலானவை அசட்டுத்தனமானவை. இந்நிலையில் இதுபற்றி ஒப்பீட்டளவிலான சிரத்தையோடு வெளிவந்த படம் விஸ்வரூபம். ஆனால் இந்தச் சிரத்தை ஒடுக்கப்படும் மக்கள் சார்பானதாக இல்லை, மாறாக ஆளும் வர்க்கங்களுக்கு சார்பாக உரையாடி, விவாதித்துப் பழகி, மேலே நாம் விவாதித்திருக்கும் எஸ்டாப்ளிஷ்மெண்ட் கருத்தியல்களின் வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட படம்தான் விஸ்வரூபம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இந்து நாஜிகளை விஞ்சும் இந்துக் கம்யூனிஸ்டுகள்!

Loading

ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபர் அந்த ஒட்டுமொத்த சமூகத்தையுமே குறிப்பவர் என்ற கருத்தும், அவர்களில் ஒருவரது செயலுக்காக அந்த ஒட்டுமொத்தச் சமூகமுமே பொறுப்பேற்கவேண்டும் என்ற கருத்தும் இந்துத்துவத்திற்கும் இந்து நாஜிகளுக்குமே சொந்தமானது. ஒருபோதும் அது கம்யூனிசமாக முடியாது என்பதை இந்த இந்துக் கம்யூனிஸ்டுகள் புரிந்துகொள்ள வேண்டும்; அல்லது நாம் அவர்களுக்கு அதைப் புரியவைக்க வேண்டும்.

மேலும் படிக்க
நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

கும்பல் கொலைகளை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்?

Loading

கும்பல் கொலைகளில் ஈடுபடுபவர்களை நூறு கோடி இந்துக்களின் பிரதிநிதிகளாக முஸ்லிம்கள் பார்க்கவில்லை. ஜனநாயக அமைப்பின் மீது முஸ்லிம்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இவ்விசயத்தில் முஸ்லிம்கள் மகத்தான நன்னடத்தையை -அசலான ஜனநாயகவாதிகளின் நடத்தையை- வெளிப்படுத்துகிறார்கள். வெறும் தேர்தல் ஜனநாயகத்தின் விழுமியத்தை அல்ல, ஜனநாயகம் எனும் பண்பாட்டு விழுமியத்தை அவர்கள் இவ்விசயத்தில் கடைப்பிடிக்கிறார்கள். முஸ்லிம்களின் மொழியில் ‘சப்ரு’ என்று சொல்லப்படும் நிலைகுலையாமையையும் அழகிய பொறுமையையும் பேணி வருகிறார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பதில்லையே, ஏன்?

Loading

உயர்சாதிப் பெண்கள் பாலியல் விடுதலை அடைந்துவிட்டார்களா? அல்லது ஒடுக்கப்படுகிறார்களா? பிறகு ஏன் இவர்கள் மோசமான பார்ப்பன ஆணாதிக்கத்தை மறைக்க முயல்கிறார்கள்? ஏன் ஒரு உயர் சாதி/வர்க்க பெண்ணின் வாழ்க்கையும் இப்படத்தில் பதிவு செய்யப்படவில்லை? எதற்காக இந்த சவர்ண லிபரல் பெண்ணியவாதிகளின் கேமராக்கள் தலித், முஸ்லிம் பெண்களின் வாழ்வின் பக்கமே கவனம் குவிக்கின்றன? அருவருக்கத்தக்க வகையில் முஸ்லிம் பெண்கள் உடலில் ஆட்டம்போட அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது? உயர்சாதிப் பெண்களின் பாலியல் வாழ்வை அவர்கள் ஏன் கண்டுகொள்வதில்லை? காப் பஞ்சாயத்துக்குக் கீழும், பிருந்தாவனத்திலும் உள்ள பெண்களைப் பற்றி பேச அவர்களுக்கு ஏன் துணிவில்லை?

மேலும் படிக்க
காணொளிகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

அயான் ஹிர்சி அலிக்கு முஸ்லிம் பெண்களின் பதிலடி!

Loading

“நீங்கள் எங்களுடன் நிற்பவரோ எங்களுக்கு உதவுபவரோ அல்ல. எங்களை மனிதத் தன்மையற்றவர்களாகச் சித்தரிப்பதற்காகவே (dehumanization) செயல்படும் தொழிற்துறையில் இருந்து லாபம் ஈட்டக்கூடியவர். அந்தத் தொழிற்துறை முஸ்லிம்கள் பற்றிய ஒரே விதமான பொதுமைப்படுத்தல்கள் (stereotypes), பொய்யுரைகள், வெறுப்புப் பிரச்சாரங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. அது ஒரு லாபகரமான பிழைப்பு.”

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

காலச்சுவடு இதழின் இந்துத்துவ அரசியல்

Loading

சிறுபான்மையினர், தலித்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டச் சமூகத்தினர் சந்திக்கும் முக்கியப் பிரச்னைகளிலெல்லாம் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே பார்ப்பன அறிவுஜீவிகளும் லிபரல்களும் கொண்டிருப்பார்கள். இந்துத்துவவாதிகள் எந்தக் கருத்தை நிறுவ முனைகிறார்களோ அதே ‘திருப்பணியைத்’தான் இவர்களும் செய்வார்கள். ஆனால் இந்த இருசாராருக்கும் இடையில் ஒரு வேறுபாடு உண்டு. இதைப் பார்ப்பன அறிவுஜீவிகள் மதச்சார்பற்றவர்கள், முற்போக்காளர்கள் என்கிற போர்வைக்குள் இருந்து கொண்டு லாவகமாகச் செய்வதுதான் அந்த வேறுபாடு. கடந்த டிசம்பர் மாத காலச்சுவடு இதழின் தலையங்கம் இதற்கோர் உதாரணம்.

மேலும் படிக்க