பண்டிட்கள் பிரச்னையை அரசியலாக்குகிறதா பாஜக?
பண்டிட்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்களா?
ஆளுநர் ஜக்மோகன் மீது குற்றம் சாட்டுவது சரியா?
கஷ்மீரிகளின் தற்போதைய நிலை என்ன?
ராணுவம் அங்கு குவிக்கப்படுவது நியாயமா?
கர்நாடகாவிலுள்ள பள்ளிகளில் ஹிஜாபுக்கு அம்மாநில அரசாங்கம் தடை விதித்தது செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதுகுறித்து News TN சேனலுக்கு மெய்ப்பொருள் பொறுப்பாசிரியர் நாகூர் ரிஸ்வான் அளித்த பேட்டி இது.
கர்நாடகாவில் இந்து தேசியவாதிகளால் ஹிஜாப் சர்ச்சையாக்கப்படும் சூழலில், அதற்குத் துணை போகும் வகையில் நீதிமன்றத்தின் செயல்பாடு அமைந்திருப்பதாக எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான காமராசன் தெரிவிக்கிறார்.
ஹிஜாப் சர்ச்சையாக்கப்படுவதை எப்படி புரிந்துகொள்வது?
தேர்தல் கணக்குகளுக்காகவும் பாஜக அரசின் பொருளாதாரத் தோல்வியை மறைக்கவும்தான் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கின்றதா?
இந்து தேசியவாதத்துக்கு எப்படி பெண்ணியவாதம் தீனி போடுகிறது?
தேச அரசு எனும் வடிவம் அதனளவில் கொண்டிருக்கும் சிக்கல் என்ன?
போன்ற முக்கியமான விஷயங்கள் இந்நேர்காணலில் விவாதிக்கப்பட்டுள்ளன.
இந்து தேசியவாதிகளால் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது சர்ச்சையாக்கப்படுவது தொடர்பாக OH Tamil யூடியூப் சேனலுக்கு மெய்ப்பொருள் பொறுப்பாசிரியர் நாகூர் ரிஸ்வான் அளித்த நேர்காணல்.
ஃபிரெஞ்சு விவகாரத்தை ஒற்றைக் கலாச்சாரவாதத்துக்கு (Cultural Monism) சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ள முடியும். ‘மதச்சார்பற்ற’ அரசியல் சாசனம் மதச் சுதந்திரத்தை வழங்குவதாக உறுதியளித்தாலும், அது நடைமுறையில் எப்படி இருக்கிறது என்பதுதான் முக்கியம். அரசமைப்புச் சட்டம் என்பது ஒரு பிரதி. ஆதிக்கம் செலுத்தும் கலாச்சார மதிப்பீட்டின் தாக்கத்துக்கு ஆட்பட்டு அதை வாசித்து ஒரு புரிதலுக்கும் நடைமுறைக்கும் அவர்கள் வருகிறார்கள். கிறிஸ்தவத்தின் செல்வாக்குக்கு ஆளாகியுள்ள அவர்களிடம் எது இயல்பு, எது இயல்பல்ல என்ற முன்னுணுர்வு இருக்கிறது. ஒரு பெண் தலை முக்காடு அணிகிறாள் என்றால் அது ஃபிரெஞ்சுப் பொதுப்புத்திக்கு அசாதாரணமாகவும், இயல்பு மீறிய ஒன்றாகவும் படுகிறது.
“என் பிள்ளைகள் சாகக் கிடக்குறாங்கள்!”, “என் பிள்ளைகள் சாகக் கிடக்குறாங்கள்!” தனது வயிற்றைக் கிழித்துக்கொண்டு
இரத்தம் வழியவழியக் கத்தும் குரல் வீடியோவில் தனித்து ஒலித்து உருக்கி எடுக்கிறது. ஆஃப்கனிஸ்தானில் ஓடும் விமானத்திலிருந்து விழுந்த மனித உயிர்களுக்கு உலகமே இரங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், கொடூரத்தில் அதற்கு எவ்விதத்திலும் குறைவில்லாத இந்த வீடியோ அதிகக் கவனம் பெறாமல் சிலரால் மட்டுமே பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில் நடப்பது ஆஃப்கானிஸ்தானிலோ ஆஃப்பிரிக்காவிலோ அல்ல, தமிழ்நாட்டில்தான். கதறும் குரல்களும் தமிழில்தான் ஒலிக்கின்றன. கதறிக்கொண்டிருப்பது ஒரு குரல் மட்டும் அல்ல. கிட்டத்தட்ட 80 பேர்.
ஒருவாரகாலமாக வடநாட்டு செய்தி ஊடகங்களில் படுதீவிரமாக ஒளிபரப்பப்படும் செய்தி என்னவென்றால், சுமார் ஆயிரம் பேரை ஏமாற்றி மதமாற்றம் செய்தற்காக முஹம்மது உமர் கவுதம் (57), முஃப்தி ஜஹாங்கிர் (52) ஆகியோரை உத்தரப் பிரதேச மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸ் (ஏடிஎஸ்) டெல்லி ஜாமியா நகரில் கைது செய்திருக்கிறது என்பதும், விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் கிடைத்திருக்கின்றன என்பதும்தான். பிடிபட்டவர்கள் பின்தங்கிய சமூகத்தவர்களையும் பெண்களையும் மாற்றுத் திறனாளிகளையும் குறிவைத்து அவர்களை மூளைச்சலவை செய்திருப்பதாகவும், அவர்களுக்குப் பணம் கொடுத்து அல்லது வேலை வாங்கித்தந்து அல்லது திருமணத்துக்கு ஏற்பாடு செய்து கொடுப்பதன் மூலம் மதமாற்றம் செய்ததாகவும் யோகி ஆதித்யநாத் அரசின் காவல்துறை வாதிடுகிறது. அது மட்டுமல்லாமல், கைது செய்யப்பட்டவர்கள் இஸ்லாமிய தஅவா மையம் (ஐடிசி) என்பதை நிறுவி மதமாற்றத்தில் ஈடுபட்டதோடு, இந்தியாவின் மக்கள் தொகையையே மாற்றியமைக்கச் சதி செய்ததாகவும், பாகிஸ்தானின்…