ex muslim tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

‘முன்னாள் முஸ்லிம்கள்’ உருவாகக் காரணமென்ன?

Loading

முன்னாள் முஸ்லிம்கள் (Ex-Muslims) என்ற பெயரில் உலவும் ஒருசிலர், இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் தொடர்ச்சியாக எதிர்மறையான கருத்துகளையும் அவதூறுகளையும் பரப்பி வருவதை உங்களில் சிலர் கவனித்திருக்கக்கூடும். கருத்தாழம் ஏதுமின்றி, மிகவும் மேம்போக்கான குற்றச்சாட்டுகளையும், மீம் மாதிரியான கேலி கிண்டல்களையும் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து, சாமானிய முஸ்லிம்களைச் சீண்டி மகிழ்வது என்ற அளவில் இவர்களின் செயல்பாடுகள் அமைகின்றன.

கல்வியாளர் சைமன் கோட்டீ எழுதிய The Apostates என்ற சமூகவியல் ஆய்வு நூல் இவர்களைப் பற்றிய முழுமையான பார்வையை வழங்குகிறது. 2015ல் வெளியான இந்நூல், பிரிட்டனிலும் கனடாவிலும் வசிக்கும் ‘முர்தது’கள் (முன்னாள் முஸ்லிம்கள்) தொடர்பானது. முர்ததுகள் தங்களைப் பற்றியும், இஸ்லாத்தை விட்டு வெளியேறும்போது அவர்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சிகரமான அனுபவங்கள் பற்றியும் அளிக்கும் வாக்குமூலத்தை இந்நூல் பிரதானமாகப் பதிவுசெய்கிறது. அந்தப் புத்தகம் முன்வைக்கும் கருத்துகளின் அடிப்படையில் எமது பார்வைகளையும் சேர்த்து வழங்க முனைகிறது இந்த ஆக்கம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அறிவியல்வாதத்தின் மொழியியல் சிக்கலும் அதன் விளைவுகளும்!

Loading

1920களின் தொடக்கத்தில் பகுப்பாய்வுப் புலனறிவாதம் (Logical Positivism) என்ற ஒரு கருத்தியல் உருவானது. நேரடியாகவோ மறைமுகமாகவோ நம் ஐம்புலன்களால் அறிந்து நிரூபணம் செய்யப்படுபவை தவிர மற்ற அனைத்தும் அர்த்தமற்ற மூடநம்பிக்கை என்றும், அதைப் பற்றி பேசுவதே பகுத்தறிவற்ற செயல்பாடு என்றும் அது கூறியது. வேகமான அறிவியல் வளர்ச்சி இக்கருத்தியலின் உருவாக்கத்துக்கும் பரவலுக்கும் காரணமாக அமைந்தது. பிறகு, அந்தக் கருத்தியலையே புலனறிவு கொண்டு அறிய முடியாத நிலையில், எப்படி அதை நாம் ஏற்பது என்ற வாதம் எழுந்தது. இந்தப் பின்னணியில், சுமார் 50 ஆண்டுகளில் அது கல்விப்புலங்களில் தன் செல்வாக்கை வெகுவாக இழந்தது. எனினும், அதன் எச்சம் இன்றும் அறிவியல்வாதம் (Scientism) எனும் வேடத்தில் பலரிடையே, குறிப்பாக நாத்திகவாதிகள் மத்தியில் வலம்வருகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

உலக குடியாட்சி தினம்: ஜனநாயகத்தில் சிறுபான்மையினர் – அ.மார்க்ஸ்

Loading

பெரும்பான்மையின் ஆட்சி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கையில் ஆட்சி அதிகாரம் கையளிக்கப்படுவது, கருத்தொருமிப்பின் அடிப்படையில் உருவான அரசியல் சட்டத்தின் ஆளுகை (Constitutional Governance) முதலியவற்றை நாம் ஜனநாயகத்தின் முக்கியக் கூறுகள் என்கிறோம். இவை ஒவ்வொன்றுமே ஆழமான பல தத்துவார்த்தப் பிரச்னைகளை உள்ளடக்கியுள்ளன.

”பெரும்பான்மை” எனும்போது அதன் மறுதலையாக ”சிறுபான்மை” ஒன்று இருந்தாக வேண்டும். ஜனநாயகத்தில் அந்தச் சிறுபான்மையின் பங்கு என்ன? பெரும்பான்மையின் ஆட்சி என்கிறபோது ”பெரும்பான்மை எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வது” (Majority Takes All) என்ற பொருள் வந்துவிடுகிறது. அப்படி ஆகும்போது அது ஜனநாயகம் என்பதாகவன்றி ஜெஃபர்சன் சொல்வதுபோல ”கும்பலாட்சி” (Mob Rule) ஆகிவிடுகிறது. பெரும்பான்மையின் ஆட்சி என்றால் 51 பேர் 49 பேர்களை ஒடுக்குவதுதானே என்றார் அவர். ஆக, ஜனநாயகம் என்பது வெறும் பெரும்பான்மையின் ஆட்சி மட்டுமல்ல. சிறுபான்மையினரும் சேர்ந்ததுதான் ஜனநாயகம். சிறுபான்மையினருக்கு முழுச் சுதந்திரமும் அவர்களின் கருத்துகளைப் பேசுவதற்கும், பரப்புவதற்கும், அதைப் பெரும்பான்மையாக ஆக்குவதற்குமான முழு வாய்ப்பும் அளிக்கப்படுவதுதான் ஜனநாயகம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தமிழகத்தில் முஸ்லிம் இடஒதுக்கீடு: தேவைகள், சிக்கல்கள், தீர்வுகள் – அ.மார்க்ஸ்

Loading

முஸ்லிம்களின் பிரச்னைகள் இன்றும் பல தளங்களில் உள்ளன. அரசு நலத்திட்டங்களின் பங்கு, கடன் வசதி பெறுதல், தனியார் துறைகளில் ஒதுக்கீடு, மதரசாக் கல்விக்கு உரிய ஏற்பு, வக்ஃப் சொத்துகளை மீட்டு முஸ்லிம்களுக்குப் பயனுடையதாக ஆக்குதல், தொகுதிச் சீரமைப்பு, முனிசிபாலிடி மற்றும் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றில் இடஒதுக்கீடு என எத்தனையோ விவகாரங்கள் இருக்கின்றன. 3.5% இடஒதுக்கீடு ஆணை பெற்றதோடு முஸ்லிம் இயக்கங்களின் பணி ஓய்ந்துவிடவில்லை என்பதையும், சிறுபான்மை மக்களின் உரிமை கோரலை வெறும் இடஒதுக்கீடு என்பதோடு நிறுத்திக்கொண்டால் அதில் பெரியளவுக்குப் பயனிருக்காது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இலங்கைக்கு நாடுகடத்தப்படும் அபாயத்தில் ஓர் தமிழ் அகதி!

Loading

ஒன்று இந்தியாவில் அவருக்குத் தஞ்சம் அளிக்க வேண்டும். இந்தியாவில் இருக்க அவருக்கு அனுமதி இல்லை என்றால், எந்த நாடு அவருக்குத் தஞ்சம் அளிக்கிறதோ அங்கு செல்ல அவரை அனுமதிக்க வேண்டும். இதுதான் அவரது நிலைக்கு எடுக்கப்படும் சரியான முடிவாக இருக்க முடியும். அதை விடுத்து, அவரை இலங்கைக்கு நாடுகடத்துதல் எந்தச் சட்ட அடிப்படையில் நியாயமாக இருக்கும்?

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

தமிழ்நாட்டில் ஒரு முள்வேலி முகாம்

Loading

“என் பிள்ளைகள் சாகக் கிடக்குறாங்கள்!”, “என் பிள்ளைகள் சாகக் கிடக்குறாங்கள்!”   தனது வயிற்றைக் கிழித்துக்கொண்டு
இரத்தம்  வழியவழியக் கத்தும் குரல் வீடியோவில் தனித்து ஒலித்து உருக்கி எடுக்கிறது. ஆஃப்கனிஸ்தானில் ஓடும் விமானத்திலிருந்து விழுந்த மனித உயிர்களுக்கு உலகமே இரங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், கொடூரத்தில் அதற்கு எவ்விதத்திலும் குறைவில்லாத இந்த வீடியோ அதிகக் கவனம் பெறாமல் சிலரால் மட்டுமே பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில் நடப்பது ஆஃப்கானிஸ்தானிலோ ஆஃப்பிரிக்காவிலோ அல்ல, தமிழ்நாட்டில்தான். கதறும் குரல்களும் தமிழில்தான் ஒலிக்கின்றன. கதறிக்கொண்டிருப்பது ஒரு குரல் மட்டும் அல்ல. கிட்டத்தட்ட 80 பேர்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அஹ்லுஸ் சுன்னாஹ்வின் பார்வையில் கர்பலா

Loading

முஹர்றம் 10ம் தேதி ஹிஜ்ரி 61ம் ஆண்டு (வெள்ளிக்கிழமை) இஸ்லாமிய வரலாற்றில் உச்சகட்ட கொடூரங்கள், சோகங்கள் நடந்தேறியதை வரலாற்றுப் பக்கங்கள் படம்பிடித்திருக்கின்றன. அந்தப் பக்கங்களைக் கடந்து செல்லுகையில் எப்படிப்பட்ட இரும்பு மனிதராக இருந்தாலும் அவரின் கண்கள் குளமாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் ஹிஜ்ரி 61ம் ஆண்டு கர்பலாவில் நடந்த படுகொலைகள் காஃபிர்களால் நடத்தப்பட்டதன்று; மாறாக, கலிமா மொழிந்த முஸ்லிம்களால் என்பது குறிப்பிடத்தக்கது. அதைவிட முக்கியமானது, அல்லாஹ்வின் தூதருடைய (ﷺ) ஈரக்குலையான அன்னை ஃபாத்திமாவின் ஈரக்குலை இமாம் ஹுசைன் (றலி) மீதும், நபியின் குடும்பத்தார் (அஹ்லுல் பைத்) மீதும் நடந்தேறிய மாபெரும் அநீதம் அது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சமநிலையற்றுப் பாயும் ‘குருதி’: சில விமர்சனக் குறிப்புகள்

Loading

இந்துத்துவ இளைஞனின் வன்முறைகள் வெறுமனே வார்த்தைகளில் மட்டுமே விவரிக்கப்படுகின்றன. ஆனால் லாயிக், கரீம் மற்றும் இன்னொரு முஸ்லிம் இளைஞன் ஆகியவர்கள் கொடூரத்தின் எந்த எல்லைக்கும் செல்பவர்களாகக் காட்சிப்படுத்தப்படுகிறார்கள். இந்துத்துவ இளைஞன் கிராமத்து ஏழைப் பூசாரியின் பேரன். லாயிக்கோ முஸ்லிம் அடிப்படைவாத இயக்கத்தில் சேர்ந்து, அது தடைசெய்யப்பட்டவுடன் வெளிநாடு செல்லும் அளவுக்கு வசதியானவன். எல்லாவற்றையும்விட முக்கியமான பிரச்னை, இந்துத்துவ இளைஞன் எந்த அமைப்பைச் சேர்ந்தவனாகவும் காட்டப்படுவதில்லை. ‘இந்துக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக’ உணர்ந்து வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்தவன். ஆனால் லாயிக்கோ இஸ்லாமிய வன்முறை அமைப்பில் செயல்படுபவன். வெளிநாட்டில் இருந்ததன்மூலம் அவனுக்கு வெளிநாட்டு ஆயுதக்குழுக்களுடன் தொடர்பு இருக்கலாம் என்று பார்வையாளர்கள் புரிந்துகொள்வதற்கான மௌனமும் பிரதியில் உண்டு.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்தியாவில் மதரசாக்கள் – நிழலும் நிஜமும்

Loading

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இன்னும் 8.5 கோடி குழந்தைகள் பள்ளியையே எட்டிப் பார்க்காத நிலையில், மதரசாக்கள் தன்னளவில் அறிவொளியைப் பரப்பியே வருகின்றன. அதிலும், மதரசாக்களில் பயில்பவர்கள் சமூகத்தின் அடித்தட்டு மக்களாகவும் பெண்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கான உணவு, உறையுள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளோடு அவர்களுக்கான கல்வியும் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பு இல்லையென்றால் அவர்களில் பெரும்பாலானவர்கள் படிக்காத தற்குறிகளாகத்தான் ஆவார்கள். நவீனச் சிந்தனை என்ற போர்வையில் மதரசாவை மட்டும் குறிவைத்துத் தாக்குபவர்கள் சிறுபான்மைச் சமுதாயத்திற்கு எதைக் கையளிக்கப்போகிறார்கள்?

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மதரசாக் கல்வித் திட்டம் – நேற்றும் இன்றும்

Loading

முகலாயர் காலத்தில், குறிப்பாக அக்பரின் காலத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் மதரசாக்களில் ஒருசேர கல்வி பயில ஊக்குவிக்கப்பட்டனர். ஏழ்மை அறிவுத் தேட்டத்திற்கான தடைகல்லாக இருக்கக் கூடாது என்பதற்காக மேல்படிப்பு மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கும் நடைமுறையும் முதன்முதலாக மதரசாக்களிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மதரசாக்களின் மாணவர்கள் நல்லொழுக்கம், கணிதம், அளவையியல், வேளாண்மை, வடிவியல், எண்சோதிடம், வானவியல், அரசியல், பொதுநிர்வாகம், மருத்துவம், தர்க்கவியல், இயற்பியல் உள்ளிட்ட 18 வகையான பாடங்களைக் கற்றுத்தேற வேண்டியிருந்ததாக அபுல்ஃபஜல் தனது அய்ன் இ அக்பரியில் குறிப்பிடுகிறார். நவீன பாரதத்தின் தந்தை, இந்து மதச் சீர்திருத்த சிற்பி என்று புகழப்படும் ராஜாராம் மோகன்ராய் இத்தகைய இஸ்லாமியக் கலைக்கூடத்தில் பயின்றவரே.

மேலும் படிக்க