கட்டுரைகள் 

சர்ச்சையாக்கப்படும் ஹலால் உணவு!

Loading

இந்து–முஸ்லிம் சமூக உறவுகளைக் குலைக்கும் விதமாக வலதுசாரி இந்துத்துவ இயக்கங்கள் நெடுங்காலமாகச் செய்துவரும் விஷமத்தனமான வெறுப்புப் பிரச்சாரத்தின் அறுவடையாக இந்த சொமேட்டோ, மெக்டொனால்ட் விவகாரங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. டெலிவரி பாயாகக்கூட எவ்வொரு முஸ்லிமும் தன்னிடம் வரக்கூடாது என நினைக்கும் ஒருவன், தன்னுடைய வாழ்நாளில் தான் எதிர்கொள்ளும் முஸ்லிம்களை எப்படி அணுகுவான் என்று யோசித்துப் பாருங்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இறைவனைப் படைத்தது யார்?

Loading

இல்லாமை நிலையிலிருந்து இருத்தல் நிலைக்கு தோன்றிய அனைத்திற்கும் ஒரு காரணி உள்ளது.

இப்பிரபஞ்சம் இல்லாமை நிலையிலிருந்து இருத்தல் நிலைக்கு வந்துள்ளது. எனவே, இதற்கும் ஒரு காரணி உள்ளது. அந்தக் காரணிதான் இறைவன்.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

சனாதனத்தை அச்சுறுத்தும் வல்லமைபெற்ற கோட்பாடு இஸ்லாம் – முனைவர் தொல். திருமாவளவன்

Loading

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் நாக்பூரில் பத்து இலட்சம் பேரோடு பௌத்தத்தைத் தழுவினார். சனாதனிகளுக்கு அது வேதனையைத் தந்திருக்கலாம். ஆனால், அதற்காக அவர்கள் பதற்றப்படவில்லை. பத்து இலட்சம் பேர் மதம் மாறியபோதும் இந்தியாவில் பதற்றம் தொற்றிக் கொள்ளவில்லை. மீனாட்சிபுரத்திலே 180 குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவியதும் ஒட்டுமொத்த இந்தியாவே பதற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது. சனாதனத்தை அச்சுறுத்தக்கூடிய அளவிற்கு, பதற்றத்திற்குள்ளாகக்கூடிய அளவிற்கு வல்லமை பெற்ற ஒரு கோட்பாடு இஸ்லாம். அது அறிவியல் பூர்வமாகவும் மீனாட்சிபுரத்தில் நிறுவப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஆர்.எஸ்.எஸ் தொடங்கும் இராணுவப் பள்ளிகள்

Loading

ஆர்.எஸ்.எஸ் ஒரு இராணுவப் பள்ளியைத் தொடங்க உள்ளதாம். உத்தர பிரதேசத்தில் புலந்தர் சாகர் மாவட்டத்தில் அது அமையுமாம். முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராஜேந்திரசிங்கின் நினைவாக ‘ராஜு பையா சைனில் வித்யா மந்திர்’ என்னும் பெயரில் அடுத்த ஆண்டு முதல் அப்பள்ளி செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமிய எழுத்தணி: பாரம்பரியக் கலையும் சம்பிரதாய வழக்குகளும்

Loading

இஸ்லாத்தின் நான்காம் கலீஃபாவான இமாம் அலீ (ரழி) அவர்களே, முதல் முக்கிய எழுத்தணிக் கலைஞர் என்று முஸ்லிம்களால் கருதப்படுகிறார். ஆக, அவர் தொட்டுத் தொடங்கும் தொடர்வரிசை, நூற்றாண்டுகள் நெடுக இடைவிடாது நகர்ந்து இன்றுவரை பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

முத்தலாக் மசோதாவின் நோக்கம் இஸ்லாமியப் பெண்கள் மீதான இரக்கமல்ல – வழக்கறிஞர் அருள்மொழி

Loading

இந்த நாட்டில் எந்தப் பிரிவுக்கும் இல்லாத ஒரு தண்டனையை இந்தப் பிரிவுக்கு மட்டும் கொடுக்கிறார்கள். அப்படியானால் இதற்குப் பின்னுள்ள நோக்கம் இஸ்லாமியப் பெண்கள் மீதான இரக்கமல்ல. முஸ்லிம் ஆண்களை உள்ளே பிடித்துப் போட இவர்களுக்கு ஒரு சட்டம் புதிதாகக் கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவுதான்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்தியாவை சமஸ்கிருதமயமாக்கல்!

Loading

சமஸ்கிருதம் என்கிற மொழியை விடுதலைக்குப் பிந்தைய இந்திய அரசு எப்படியெல்லாம் வளர்க்க முயன்றது என்பதைப் பற்றிப் புரிந்துகொள்ளச் சமஸ்கிருத கமிஷன் சார்ந்து பல்வேறு விஷயங்களைத் தொட்டுக் காண்பிக்கிறது சுமதி ராமசுவாமியின் கட்டுரை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மசோதாக்களை எதிர்த்து வாக்களிக்கும் துணிச்சல் திமுகவுக்கு இருக்கிறதா? – திருமுருகன் காந்தி

Loading

வாக்களிப்பது என்பது ஆவணபூர்வமாக அதைப் பதிவு செய்வதாகும். ஆனால், அந்தப் பதிவை திமுக செய்யவில்லை. பாஜக-வுக்கு அது முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் வரலாற்றில் பதிவாகும். அதையே நாங்களும் குற்றம்சாட்டுகிறோம். அடுத்து UAPA மசோதா வரப்போகிறது. என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்?

மேலும் படிக்க
கட்டுரைகள் 

அறிவுரையும் சட்டமும்

Loading

இஸ்லாம் சொல்லக்கூடிய போதனைகள் மனித இயல்புக்கு மிக நெருக்கமாக இருப்பதை உணர்கிறேன். ஒரு மனிதன் முன்முடிவுகளின்றி, அரசியல் நிலைப்பாடுகளின்றி திறந்த மனதோடு அவற்றை உள்ளபடியே அணுகினால் அவை அவன் எதிர்கொள்ளும் ஒவ்வொரு விவகாரத்திற்கும் அப்படியே கச்சிதமாக பொருந்தக்கூடியவையாக இருப்பதை உணர முடியும். இது இஸ்லாம் இறைமார்க்கம் என்பதற்கான சான்றுகளில் ஒன்று.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

புனைவுகள் என்னும் பெருவெளி

Loading

கதைகள், நாவல்கள் வழியாக நாம் மனிதர்களையே வாசிக்கிறோம். மனிதனின் அன்றாட வாழ்வின் நிகழ்வுகள், அவனுடைய புறச்சூழல்கள், அவை அவனுக்குள் ஏற்படுத்தும் தாக்கங்கள், அவனுடைய அகத்திலும் புறத்திலும் அவன் எதிர்கொள்ளும் போராட்டங்கள், அவனுடைய மன அவஸ்தைகள், அவனுடைய இலட்சியவாத கனவுகள், அவன் நிகழ்த்த விரும்பும் சாகசங்கள், அவனுடைய இயல்புகள் ஆகியவை கதைகள், நாவல்களின் வழியாகவே மிகக் கச்சிதமாக பதிவு செய்யப்படுகின்றன. இந்த இடத்தில்தான் கதைகளும் நாவல்களும் வெறுமனே புனைவுகள் என்பதைத் தாண்டி அவை மனித வாழ்வை வாசிப்பதற்கான மகத்தான பொக்கிஷங்கள் என்ற அடிப்படையில் அதீத முக்கியத்துவம் பெறுகின்றன.

மேலும் படிக்க