கட்டுரைகள் 

உறவுச் சிக்கல்கள்

பொறுமைக்கு தொடர் பயிற்சி அவசியம். ஒரு மனிதன் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள தன்னை கொஞ்சம் கொஞ்சமாக பழக்கிக் கொள்ள வேண்டும். தன் கோபத்தை, வெறுப்பை, பொறாமையை கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெறும் மனிதன் மகத்தான மனிதனாக மாற்றடைகிறான். பொறுமை என்பது தீய உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருப்பதும் அவற்றின் மூலமாக நமக்கோ மற்றவர்களுக்கோ தீங்கு நேர்ந்துவிடாமல் காத்துக் கொள்வதும் ஆகும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

பணிவும் கண்ணியமும்

கண்ணியம் என்பது அல்லாஹ் அளிப்பது. அது நம்மிடம் இருக்கும் திறமைகளைக் கொண்டு சம்பாதிக்க முடியாதது. தான் விரும்பியவர்களை அவன் கண்ணியப்படுத்துகிறான். தன் பக்கம் திரும்புவர்களையே அவன் விரும்புகிறான். அவன் யாரை கண்ணியப்படுத்த நாடுகிறானோ அவரை யாராலும் இழிவுபடுத்த முடியாது. அவன் யாரை இழிவுபடுத்த நாடுகிறானோ அவரை யாராலும் கண்ணியப்படுத்த முடியாது. பாவிகள் உண்மையான கண்ணியத்தை ஒருபோதும் பெற மாட்டார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

அறிதல் முறைகள்

புத்தகங்களில் மற்றவர்களின் ஆய்வுகளை, அனுபவங்களை, அனுமானங்களை வாசிக்கின்றோம். பயணங்களில் பிரபஞ்சத்தை, இயற்கையை வாசிக்கின்றோம். மனிதர்களினுடனான சந்திப்புகளில் மனிதர்களை வாசிக்கின்றோம். ஒரு மனிதனின் சிந்தனையை விசாலப்படுத்துவதில் இந்த மூன்றுக்கும் பெரும் பங்கு இருக்கின்றன.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

தனிமையும் வெறுமையும்

இறைநினைவு இல்லாத உள்ளங்களில் ஷைத்தானின் ஆதிக்கமே நிலைத்திருக்கும். அவை காற்றில் அடித்துச் செல்லப்படும் தூசிகள்போல எந்தவொன்றாலும் மிக எளிதாக இழுத்துச் செல்லப்பட்டுவிடும். அவை சுதந்திரமாக செயல்படும் ஆற்றலை இழந்த சூழலின் கைதிகள். சுதந்திரமான மனிதன் என்பவன் தன் கட்டுப்பாட்டில் முழுமையாக உள்ளவன்; இச்சைகளால் வழிநடத்தப்படாதவன்; எந்தவொன்றுக்கும் அடிமையாதவன்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

குடும்பம் என்னும் வலுவான உந்து சக்தி

ஆன்மாக்களுக்கு மத்தியிலுள்ள ஒத்திசைவு வலுவான குடும்பத்திற்கான அடிப்படை. ஆண், பெண் தொடர்பு ஊடலும் கூடலும் கலந்ததுதான். மணவாழ்வு மேடு, பள்ளங்களைக் கொண்டதுதான். உங்களின் அடிமையைத் தவிர வேறு யாராலும் உங்களுக்கு முழுமையாக அடிபணிந்து இருக்க முடியாது. எதிர்பார்ப்புக்கும் எதார்த்தத்திற்கும் மத்தியிலுள்ள இடைவெளி மிகப்பெரியது என்பதை மனம் உணர்ந்துகொள்ளும்போது அது சகிப்புடன் வாழ பழகிக்கொள்கிறது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

லௌகீகமும் ஆன்மீகமும்

எந்தவொன்றும் அளவுக்கு மீறி புனிதப்படுத்தப்படும்போது அது சிக்கல்மிகுந்ததாகி விடுகின்றது. தேவையற்ற புனிதங்கள் உடைக்கப்பட வேண்டும். இல்லையெனில் அவை தனிமனிதனின் மீது சமூகத்தின் மீது பெரும் சுமைகளாக மாறி நிற்கும்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

விவாதம் – ஒரு சிறிய விளக்கம்

அறிஞர்கள் விவாதம் செய்ய விரும்புவதில்லை. அரைகுறைகளுக்கு விவாதம் பெரும் தீனி. அறிவிலிகளுக்கு அது ஒரு போர். விவாத அறைகூவல் விடுப்போரை புறக்கணித்து விடுவதே சிறந்தது. அதுதான் அதனை தகர்ப்பதற்கான சிறந்த வழிமுறையும்கூட. அதுவும் ஆன்மீக பிரச்சாரத்தை முன்னெடுப்பவர்கள் விவாதத்தின் பக்கம்கூட செல்லாமல் இருப்பதே மிகச் சிறந்தது. அதுதான் பேணுதலான வழிமுறையும்கூட.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

பாவங்கள் ஏற்படுத்தும் விளைவுகள்-1

ஒரு மனிதன் தான் செய்யும் பாவத்தை பாவம் என உணர்தலே அவன் அதிலிருந்து விடுபடுவதற்கான முதல் அடி. எந்தச் சமயத்திலும் அதனை அவன் நியாயப்படுத்தி விடக்கூடாது. அதற்கான நியாய வாதங்கள் அவனுக்குள் உருவாகிவிட்டால், அவற்றை அவன் வெளிப்படுத்தத் துணிந்து விட்டால் அவன் அடுத்த நிலைக்குச் சென்றுவிடுவான். அது வெளியேறுவதற்கு சற்று கடினமான நிலை. ஒருவன் தனக்கு நோய் இருப்பதை உணர்ந்தால்தானே அதற்கான சிகிழ்ச்சையை அவன் முன்னெடுக்க முடியும்.

மேலும் படிக்க
காணொளிகள் குறும்பதிவுகள் 

ஒரு சிறிய பிரார்த்தனை

மனிதர்களுக்கு அவகாசம் அளிக்கப்படுகிறது. அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. எல்லாவற்றையும் தாண்டி ஒருவன் பாவங்களில் மூழ்கியிருப்பான் எனில் தனக்கு வழங்கப்பட்ட அவகாசத்தை தன் திறமையின் விளைச்சலாகக் கருதிக்கொண்டிருப்பான் எனில் அவன் தனக்கான துன்பங்களை தானே தேடிக்கொண்டிருக்கிறான் என்று பொருள்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

பலவீனர்கள் அல்ல உதவியாளர்கள்

பெண் குழந்தை பொன்னையும் கொண்டு வரும் என்று நம்மிடையே வழக்கத்தில் இருக்கும் சொல்லும் நம் வாழ்பனுபவம் கற்றுத்தந்த பாடங்களில் ஒன்றுதானே. எல்லாம் தன் முயற்சியின், தன் திறமையின், தன் உழைப்பின் விளைவுதான் என்ற எண்ணம் மிக விரைவில் ஒருவனை நிராசையில் ஆழ்த்திவிடலாம். கர்வம் தனக்கு எதிரான நிராசையையும் கொண்டு வரும்.

மேலும் படிக்க