கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஏன் இந்த கள்ள மௌனம்?

Loading

நாட்டில் கணிசமாக உள்ள ஒரு சமூக மக்களை ஒதுக்கிவிட்டு வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை இந்த தலைவர்கள் நிச்சயமாக உணர்ந்திருப்பார்கள். இருந்தும் முஸ்லிம்களிடம் கைகோர்க்கும் சிந்தனை அவர்களிடம் ஏன் இல்லை என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை எதிர்க்கும் சில கட்சிகளிடம் கூட ஒரு வித அனுதாபப் பார்வை மட்டுமே இருக்கிறது. ஒடுக்கப்படும் ஒரு இனத்தின் மீது அனுதாபம் கொள்வதையும் தாண்டி அவர்களுடன் இணைந்து பயணிப்பதே, அதைவிட அவசியமாகும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இ.ந்.தி.யா Vs. பா.ஜ.க.

Loading

தேர்தல் நெருங்கநெருங்க பா.ஜ.க. கொடுக்கும் நெருக்கடிகள் இன்னும் அதிகமாகும் என்பதை எதிர்க்கட்சிகளும் ஃபாசிசத்திற்கு எதிரான சித்தாந்தம் கொண்டவர்களும் உணர வேண்டும். மூன்று மாதங்களாக மணிப்பூர் பற்றியெரிந்தாலும் நாளை யார் வீட்டிற்கு அமலாக்கத்துறையை அனுப்பலாம் என்றுதான் ஒன்றிய ஆட்சியில் இருப்பவர்கள் யோசித்துக்கொண்டிருப்பதுபோல் தெரிகிறது. இனி வரும் நாள்களில் அமலாக்கத்துறை மற்றும் என்.ஐ.ஏ.வின் கொடுங்கரங்கள் இன்னும் அதிகமானோரை நோக்கி நீளலாம். அரசியல் கட்சிகளுக்கு அமலாக்கத்துறை, செயல்பாட்டாளர்களுக்கு என்.ஐ.ஏ., சிலருக்கு இரண்டும் என்ற மிரட்டல்-அரசியலை பா.ஜ.க. மேலும் உக்கிரப்படுத்தவே செய்யும்.

மேலும் படிக்க
bulldozer politics tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

புல்டோசர் அழகியலும் இந்து தேசியக் களியாட்டமும்

Loading

முஸ்லிம்களைத் தாக்குவதைக் கண்காட்சியாக்குவதன் மூலம் ஒரு பெருங்கொண்ட மக்கள்திரள் சத்தும் சாரமுமற்ற வாழ்வில் ஒரு உந்துசக்தியைப் பெறுவதாக உணர்கிறார்கள். அகத்திலும் புறத்திலும் இருக்கும் வாழ்க்கை பாரத்தைத் தாங்க முடியாத மக்களுக்கு அவர்களது வலியை குணப்படுத்துவதற்குப் பதிலாக வலியை மறத்துப்போகச் செய்யும் போதை வஸ்துகளைக் கொடுத்து பிறழ்ச்சியான இன்பத்திளைப்பில் திளைக்கச் செய்வதற்கு எவ்வகையிலும் மாறுபட்டதல்ல இந்து தேசியவாத அரசியல். போதை கிடைத்துக்கொண்டே இருக்க, முஸ்லிம்கள் வதைபட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இவ்வாறு முஸ்லிம் வதை என்பது வெகுமக்கள் திரளின் களியாட்டத்துக்கான தியேட்டராகவும், முஸ்லிம்களின் கண்ணீரும் அங்கலாய்ப்பும் ஃபாசிஸ்ட் போர்னோகிராஃபியாகவும் மாறிவிட்டது.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

நரக மாளிகை (நூல் அறிமுகம்)

Loading

முஸ்லிம்களின் உயிர் மற்றும் உடமைகளின் மீது சங் பரிவாரம் நிகழ்த்தும் திட்டமிட்ட வன்முறை வெறியாட்டங்களை, அதன் நாசகர சித்தாந்தத்தை பல புத்தகங்கள் அம்பலப்படுத்தி இருக்கின்றன. மேழி புக்ஸ் வெளியிட்டுள்ள மொழிபெயர்ப்பு நூலான நரக மாளிகை அத்தகைய கொடூரங்களை நிகழ்த்தும் இந்து தேசியவாத இயக்கத்தின் பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு பற்றியும், இந்து ராஷ்டிரக் கனவின் பெயரால் எத்தகைய மனித மிருகங்களை அது உருவாக்குகிறது என்பதையும் பதிவு செய்துள்ளது.

மேலும் படிக்க
bajrang dal tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்து ஆதிக்கவாதத்தின் சராசரி முகம் : ஒரு பஜ்ரங் தள ஊழியருடன் உரையாடல் – மோயுக் சாட்டர்ஜீ

Loading

அகமதாபாத்தில் சில பஜ்ரங் தள ஊழியர்களுடன் பணியாற்றிய சொந்த அனுபத்திலிருந்து நேரடிப் பதிவாக ஆசிரியர் இதை எழுதியிருக்கிறார். இந்தியா முழுக்க வலதுசாரி ஆயுதக் குழுக்கள் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தும் செய்திகள் அதிகரித்து வரும் இவ்வேளையில், பஜ்ரத் தளத்தின் ஊழியர்களுடைய தினசரி வாழ்க்கை மீது வெளிச்சம் பாய்ச்சும் முயற்சி இது. மூன்று பகுதிகளைக் கொண்ட இந்தக் கட்டுரையில், இந்தக் குழுக்களிடம் வன்முறையைத் தாண்டி பல விசயங்களிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். குஜராத் போன்று இந்தியாவின் சில பகுதிகளில் இந்தக் குழுக்களும் ஊழியர்களும் அந்தந்தப் பகுதிகளின் தினசரி வாழ்க்கையுடன் கலந்திருக்கிறார்கள். அந்தப் பகுதிவாசிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பவர்களாக, பஞ்சாயத்து செய்பவர்களாகச் செயல்படுகிறார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

‘இந்து ஃபோபியா’: இந்துத்துவர்களின் அரிய கண்டுபிடிப்பு!

Loading

இஸ்லாமோ ஃபோபியா, செமிட்டிய எதிர்ப்புணர்வு (anti semitism) என்பனபோல் தூலமாக நிறுவப்படாத, தெளிவாக வரையறை செய்யப்படாத ஒரு புதிய சொல் இந்து ஃபோபியா. இதை சமீப காலமாக மேற்குலகில் வாழும் இந்துத்துவ வட்டாரம் தொடர்ந்து பரப்பி வந்தது. தற்போது சங்கி ஊடகங்களைத் தாண்டி இந்தியாவிலுள்ள பல மையநீரோட்ட ஊடகங்களில் இவ்வார்த்தைப் புழக்கத்துக்கு வந்திருக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சிமியைக் குற்றப்படுத்தாதீர்கள்! – பேரா. இர்ஃபான் அஹ்மது

Loading

9/11 தாக்குதலைத் தொடர்ந்து உலகெங்குமுள்ள அரசுகள் முஸ்லிம்கள்மீது அடக்குமுறைகளையும் தீவிரக் கண்காணிப்பையும் முடுக்கிவிட்டன. கறுப்புச் சட்டங்களை இயற்ற, இஸ்லாமிய இயக்கங்களைத் தடை செய்ய அச்சந்தர்ப்பத்தை அவை லாவகமாகப் பயன்படுத்திக்கொண்டன. சிமி முதன்முதலாகத் தடை செய்யப்பட்டதும் அப்போதுதான்.

2006ம் ஆண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் மானுடவியல் துறைப் பேராசிரியர் இர்ஃபான் அஹ்மது எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது. சிமி குறித்து பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்துவதற்காக முழு வீச்சுடன் செயல்படும் ஊடகமும் அதிகார வர்க்கமும் சிமியின் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்தது எது என்ற அடிப்படையான கேள்வியைக் கண்டுகொள்வதே இல்லை. இக்கட்டுரை அந்த அம்சம் குறித்துதான் கவனப்படுத்த முனைகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

எழுபதாண்டுகளாக இந்திய முஸ்லிம்களை வஞ்சிக்கும் ‘இந்துக் குடியரசு’

Loading

கடந்த ஏழு தசாப்தங்களாக பல வழிகளில் இந்த அரசமைப்புச் சட்டம் சிறுபான்மையினரை, அதிலும் குறிப்பாக 20 கோடி முஸ்லிம்களை, இரண்டாந்தரக் குடிமக்ககளாக குறுக்குவதற்குப் பெரும் பங்காற்றியுள்ளது. முஸ்லிம்களின் வறுமை, கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவை குறித்த பரிதாபகரமான புள்ளிவிவரங்கள் யாவும் அரசமைப்புச் சட்ட உருவாக்கத்தின்போது சிறுபான்மை விவகாரம் தொலைநோக்குடன் அணுகப்படவில்லை என்பதை மிகத்தெளிவாகப் புலப்படுத்துகின்றன.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்து ஓரியண்டலிசத்தின் பன்முகங்கள் – பேரா. இர்ஃபான் அஹ்மது உரைத் தொகுப்பு

Loading

கடந்த பிப்ரவரி மாதம் 25 அன்று ஆஸ்திரேலியா இந்தியா முஸ்லிம் மன்றம் (AIMF) நடத்திய இணையவழிக் கருத்தரங்கில் பேரா. இர்ஃபான் அஹ்மது, ‘இந்து ஓரியண்டலிசத்தின் முகங்கள்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். 2014ல் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவின் போக்கும் நகர்வும் புதிய பரிமாணத்தை எட்டியிருப்பதை அறிவோம். அதை வெறுமனே அரசியல் ரீதியில் அணுகாமல், அதன் அறிவுசார் அடித்தளத்தை நாம் இனங்காண வேண்டும் என்கிறார் இர்ஃபான் அஹ்மது. அதைக் குறிக்கவே ‘இந்து ஓரியண்டலிசம்’ எனும் புதிய பதத்தைப் பயன்படுத்துகிறார்.

இங்கு முதன்மையானது அறிவமைப்புதான் (Knowledge System) என்று சுட்டிக்காட்டும் அவர், சமகால அரசியல் போக்கானது கடந்த காலத்திலிருந்து (குறிப்பாக நேரு, காந்தி, பட்டேல் போன்றோர் பாதையிலிருந்து) தடம் புரண்டதால், திசை மாறியதால் உருவாகியிருப்பதாக நிலவும் பொதுக் கருத்தைக் கேள்விக்குள்ளாக்குவதோடு, கடந்த காலத்தின் நீட்சியாக தற்போதைய சூழலைக் குறிப்பிடுகிறார்.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

இந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்

Loading

இத்தொகுப்பு மார்க்ஸின் இந்துத்துவம் குறித்த முக்கியமான ஆய்வுப்பங்களிப்புகள் அனைத்தையும் ஒருங்கே கொண்ட ஓர் தொகுப்பு. இப்பேசுபொருள் குறித்து மார்க்ஸின் எழுத்துக்களை கற்க நினைக்கும் ஒருவர் அதை ஒரே இடத்திலேயே பெற்றுக்கொள்ளுமாறு செய்திருப்பது இத்தொகுப்பின் மிக முக்கியமான பலமாகும். இந்துத்துவத்தை கருத்தளவில் எதிர்கொள்ள நினைக்கும் எழுத்தாளர்கள் இரண்டு வகைகளில் அதைச் செய்வார்கள். ஒன்று அதன் பிரச்சாரங்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு அதற்கு தக்க பதில்களைச் சொல்வது, இரண்டாவது அதன் அரசியலைக் கேள்விக்குள்ளாக்கி விவாத மேசையை திருப்ப எத்தனிப்பது. மார்க்ஸ் இவ்விரண்டையுமே செய்திருக்கிறார் என்பதை இந்நூலை கூர்ந்து வாசிப்போர் புரிந்துகொள்வர்.

மேலும் படிக்க