கட்டுரைகள் 

ஊதிப் பெரிதாக்கப்பட்ட பிம்பமும் இஸ்லாமிய இயக்கமும்

Loading

சாத்வீகமான, அறிவுப்பூர்வமான வழிமுறையைக் கடைப்பிடிப்பவர்கள் ஆரம்பத்தில் கோமாளிகளாக, கோழைகளாக சித்தரிக்கப்பட்டலாம். ஆனால் பிற்பாடு அவர்கள்தாம் நிலைத்திருப்பார்கள். அறிவுப்பூர்வமான எதுவும் நீண்ட தர்க்கத்திற்குப் பிறகே ஏற்றுக்கொள்ளப்படும். உணர்ச்சிகளைத் தூண்டுபவர்கள் உடனடி விளைச்சல்களை அறுவடை செய்யலாம். ஆனால் அவர்களால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

இந்தியாவில் இஸ்லாமிசமும் ஜனநாயகமும்

Loading

குஃப்ர், ஜாஹிலிய்யத், ஈமான் போன்ற இஸ்லாமிய வழக்குகளை நடப்பிலிருந்த அரசியல் அதிகாரத்திற்கும் பொருத்திய மௌதூதி, மதச்சார்பற்ற அமைப்புகளிலும் அரசாங்கத்துறைகளிலும் பங்கேற்பதைத் தடைசெய்தார். தேர்தலில் பங்கேற்பதையும் வாக்களிப்பதையும் தடை செய்தார். இதுபோன்ற தீவிரத்தன்மை கொண்ட அறிவுறுத்தல்களை ஏற்கமறுத்த முஸ்லிம் சமூகம், தங்களது வாழ்க்கை சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளும் யதார்த்தபூர்வமான வழிகளை நோக்கிப் பயணிக்கும்படி ஜமாத்தை உந்தித்தள்ளியது. ஜமாத்தும் தனது தீவிரத்தன்மைகளோடான புறக்கணிப்புவாத கருத்தியலைக் கைவிட்டு, பங்கேற்புவாதப் பாதைக்கு நகர்ந்தது. 

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 10) – மரியம் ஜமீலா

Loading

“இஸ்லாத்தை உண்மையாக நேசிப்பவர்கள், அதுதான் சத்தியம் என்பதில் உள்ளத்தால் திருப்தியடைந்தவர்கள் மேலும் அதில் உள்ளார்ந்த நம்பிக்கை கொண்டவர்கள், தற்போதைய நிலைமைக்காக ஒருபோதும் பேரச்சம் கொள்ளவோ, அவநம்பிக்கைக்கு சரணடையவோ மாட்டார்கள். அத்தகையவர்கள், இஸ்லாத்தின் உயர்நிலைக்காக தங்கள் கடைசி மூச்சு வரை போராடுவது –அது இவ்வுலகில் வெற்றியாயினும் தோல்வியாயினும்- தங்கள் கடமை என்று கருதுகின்றனர். அவர்களது முயற்சிகள் இங்கு தோல்வியடைவது போல் தோன்றினும் உண்மை வெற்றி என்பது மறுமையில் பெறும் பாவமீட்சியே என்று நம்புகின்றனர். மேலும் அதுவே அவர்களது குறிக்கோள். இந்தக் கண்ணோட்டத்தில், உண்மையான கடமையுணர்ச்சி கொண்ட முஜாஹிதுகள் தோல்வியடைவதில்லை. மாறாக தாங்கள் முஸ்லிம்கள் என்று கூறிகொண்டே, இஸ்லாமிய ஒழுங்கிற்காக பாடுபடுபவர்களை வீழ்த்தவும் தடுக்கவும் தங்களால் இயன்றளவு முயற்சி செய்பவர்களே அசலில் தோல்வியும் வீழ்ச்சியும் அடைகின்றனர். அவர்களே இவ்வுலகிலும் மறு உலகிலும் இறைவனின் தண்டனைக்கு தகுதியானவர்கள். அத்தண்டனை தாமதமாகலாம், எனினும் அல்லாஹ்வின் சீற்றம் வரும்போது அது முழு உலகிற்கும் ஒரு எச்சரிகையாகவும் கடிந்துரையாகவும் அமையும். எனினும் நாளை காலை சூரியன் உதிக்கும் என்பதை எந்தளவு உறுதியாக நான் நம்புகிறேனோ, அதேபோல் இன்ஷா அல்லாஹ் இஸ்லாமியப் படை முடிவாக வெற்றி பெறும் என்பதையும் நான் நம்புகிறேன்.”

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

சையித் குதுப்: ஓர் அறிமுகம்

Loading

சிறையிலிருந்த காலத்தில் பல முக்கிய ஆக்கங்களை சையித் குதுப் எழுதி முடித்தார். அவை அனைத்திலும் பிரதானமாக, அவர் 1962-ஆம் ஆண்டு எழுதத் துவங்கிய ‘ஃபீ ழிலால் அல்-குர்ஆன்’ (‘திருக்குர்ஆனின் நிழலில்’) என்ற திருக்குர்ஆன் விரிவுரை ஆக்கமும் இதில் அடக்கம். அவருடைய வாழ்வின் அன்றாட போராட்ட மோதல் சூழ்நிலைகளால் இவ்விரிவுரை பெருமளவு தாக்கத்திற்கு உள்ளானது எனலாம். ஒவ்வொரு வசனத்திலும் இடம்பெறும் மொழியியல் மற்றும் வரலாற்று விவரணங்களைக் குறிப்பிடுவதிலும், விரிவான மேற்கோள்களையும் மாறுபட்ட அபிப்பிராயங்களையும் எடுத்துக் கூறுவதிலுமே கவனத்தைக் குவிக்கும் ஏனைய மரபுமுறை விரிவுரை ஆக்கங்களிலிருந்து இது மிக அடிப்படையிலேயே மாறுபடுகின்றது.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 1

Loading

‘இஸ்லாமிய அரசு’, ‘ஃகிலாஃபா’, ‘ஜிஹாது’, ‘ஷரீஆ’ போன்ற உயரிய இஸ்லாமிய எண்ணக்கருக்களை எல்லாம் சிதைக்கவும் பிழையாகச் சித்தரிக்கவும் ஏகாதிபத்திய சக்திகள் நெடுங்காலமாகவே முயன்று வருகின்றனர் என்பது உண்மைதான் என்றாலும், எதிரிகளின் அந்த நிகழ்ச்சிநிரலுக்கு ISIS உள்ளிட்ட தக்ஃபீரி குழுக்கள் ஒரு வரப்பிரசாதமாக வந்து குதித்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

எது இஸ்லாமிய இயக்கம்?

Loading

‘இஸ்லாமிய இயக்கம்’ என்பது இஸ்லாத்தின் சமூக-அரசியல் குறிக்கோள்களை அடைவதற்காக உம்மத்திற்குள் செயற்கையாக உருவாக்கப்படும் ஒரு அல்லது பல ‘அரசியல் கட்சி’ அல்ல என்பதே நாம் கூற வரும் அடிப்படையான செய்தி. மாறாக, அந்தக் குறிக்கோள்களுக்காக முழு உம்மத்தையும், அதன் ஒட்டுமொத்த வளங்களையும் அணிதிரட்டுவதையே ‘இஸ்லாமிய இயக்கம்’ அதன் அசல் பொருளில் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த நோக்குநிலையிலிருந்து பார்த்தால், முதலாவது இஸ்லாமிய இயக்கத்தை உருவாக்கி, அதற்குத் தலைமை தாங்கியது வேறு யாருமல்ல, அண்ணல் நபிகள் அவர்கள்தான்.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

அண்ணலாரின் வாழ்வில் அதிகாரப் பரிமாணங்கள் – ஸஃபர் பங்காஷ்

Loading

இறைத்தூது வழங்கப்பட்ட தனியொரு மனிதராகத் துவங்கிய அண்ணலார் எவ்வாறு வெகு குறுகியதொரு காலத்திற்குள், அரபுகளின் சமூக அடிப்படைகளை முற்றாக மாற்றி மறுவரைவிலக்கணம் செய்து, புதியதொரு நாகரிகத்தின் தோற்றத்துக்கு வித்திட்டார்கள் என்பது நாம் ஆழ்ந்து கற்க வேண்டியதொரு அம்சமாகும்.

மேலும் படிக்க