இஸ்லாம் Vs. நவீனத்துவம் (2)
இஸ்லாமிய அறிதல்முறையில் மரபுக்கு மையமான இடமுண்டு. அதேவேளை, பகுத்தறிவையும் அனுபவவாதத்தையும் புறக்கணிப்பது இஸ்லாமிய நிலைப்பாடல்ல. நம் அறிதல்முறையின் பகுதிகள்தாம் அவை. இறைவனும் திருமறையில் தொடர்ச்சியாக நம்மை சிந்திக்கத் தூண்டுகிறான் அல்லவா?
இஸ்லாம் மற்றும் நவீனத்துவ சிந்தனைச் சட்டகங்களுக்கு மத்தியிலான வேறுபாடு எந்தப் புள்ளியில் தோன்றுகிறது என்றால், ஃபித்றா, உள்ளுணர்வு, மரபு என்பன உங்கள் சிந்தனைக்கு இடையூறாக இருப்பதாய் நவீனத்துவம் வாதிடுகிறது. அத்தோடு, உங்கள் அறிவையும் அனுபவத்தையும் மட்டுமே அறிவின் மூலங்களாக முன்வைக்கிறது.
மேலும் படிக்க