இறந்தவர் தீர்க்கதரிசி போலும். தனது இறுதி நேரத்தைக் குறிப்பால் உணர்ந்துகொண்டு அருகிலிருந்த மனைவியை வறுத்தெடுத்து ஆசைஆசையாய்ச் சீனியடை செய்துதரச் சொல்லி சாப்பிட்டுவிட்டே சொர்க்கம் போயிருக்கிறார். தான் வாழ்ந்த காலத்திலும் அவர் டயட், உடல் நலம் பற்றியெல்லாம் கவலைப்படாதவர். ’விரும்பியதைச் சாப்பிடணும்’ என்று எப்போதும் சொல்வார்.
தான் என்னதான் சிந்தித்தாலும் ஆசான் போட்டிருக்கும் கருங்கல் அஸ்திவாரத்தை தாண்ட இயலாது என்ற உண்மை தெளிவானதால் கமாலின் உடலும் மனதும் சோர்ந்தது. தலையிலிருந்து எரி மெழுகு உருகியது. அவரை விட்டால் தனக்கு வழிகாட்டுபவர் யாருமில்லை என்ற நினைவு வர கழிவிரக்கம் ஊற்றாகிப் பெருகியது.
ஜார்ஜ் புஷ் நிர்வாகத்தையும் ஒபாமா நிர்வாகத்தையும் ஒப்பிட்டால், ஆஃப்கானிஸ்தான் விஷயத்தில் ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. ஆனால், ட்ரம்ப் நிர்வாகம் தாலிபானுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியதுடன், அதன் முன்னணித் தலைவர்களை விடுதலை செய்ய பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தது. மேலும், தாலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி உடன்படிக்கைச் செய்துகொண்டு, பன்னாட்டுப் படைகளை ஆஃப்கானிஸ்தானிலிருந்து திரும்பப்பெற நாள் குறித்தது. என்றாலும், பைடன் நிர்வாகத்திடம் இந்தக் கடினமாக பணியை ஒப்படைத்துவிட்டது. இவ்விஷயத்தில் பைடன் தன் தலைமைத்துவப் பண்மைக் காட்டியிருக்கிறார். ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சியின் தீவிர விமர்சனங்களுக்கிடையேதாம் துருப்புகள் திரும்பப்பெறப்படுகின்றன.
அமெரிக்காவுக்கு இது வெற்றிபெற இயலாத போர்தான். அமெரிக்காவின் தோல்வியை ஒப்புக்கொண்டு போரை நிறுத்தியிருப்பது பைடன் செய்த சரியான காரியம் என்றே சொல்வேன்.
ஒன்று இந்தியாவில் அவருக்குத் தஞ்சம் அளிக்க வேண்டும். இந்தியாவில் இருக்க அவருக்கு அனுமதி இல்லை என்றால், எந்த நாடு அவருக்குத் தஞ்சம் அளிக்கிறதோ அங்கு செல்ல அவரை அனுமதிக்க வேண்டும். இதுதான் அவரது நிலைக்கு எடுக்கப்படும் சரியான முடிவாக இருக்க முடியும். அதை விடுத்து, அவரை இலங்கைக்கு நாடுகடத்துதல் எந்தச் சட்ட அடிப்படையில் நியாயமாக இருக்கும்?
நூர்ஜஹான் தயிர்மூலம் செய்யப்படும் இனிப்புக்கூழ் வகைகளைப் பிரமாதமாக செய்யக்கூடியவர். மன்னர் ஷாஜஹானின் மனைவி மும்தாஜ் ஒருமுறை படைத்தளத்திற்குச் சென்றபோது வீரர்கள் சோர்வாக இருப்பதைக் கண்டு, ‘இறைச்சியோடு அரிசியை மசாலாத் தூள் சேர்த்து வேகவைக்கும்’ முறையை அறிமுகப்படுத்தினார். அப்படிப் பிறந்ததுதான் இன்றும் நம்மைக் கிறங்கடித்துக் கொண்டிருக்கும் ‘பிரியாணி’.
கடந்த வியாழக்கிழமை அன்று காபூல் விமான நிலையத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் இதுவரை 13 அமெரிக்க ராணுவத்தினர் உட்பட சுமார் 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதலுக்கு ஆஃப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் இயங்கும் ஐஎஸ்ஐஎஸ்-கே / ஐஎஸ்-கே (இஸ்லாமிய அரசு – குராசான் மாகாணம்) பொறுப்பேற்றுள்ளது. யார் இந்த ஐஎஸ்-கே?
புதிதாக வந்த வெளிநாட்டுத் துப்பட்டி அதுவரை உம்மா உடுத்தியிருந்த ரேசன்கடை இலவச வெள்ளைத்துணிக்கு விடைகொடுத்திருந்தது. உறவுக்காரர்களின் திருமணத்திற்கு இனி சென்றால் பக்கத்துவீட்டு சைனம்புவிடம் இரவல் துப்பட்டி வாங்கி ஏழ்மையை மறைக்கத் தேவையில்லை என்ற உற்சாகம் உம்மாவிற்குப் புதுத்தெம்பைக் கொடுத்தது. அதன் ஓரப்பூக்களில் அத்தாவின் வாசம் இருந்திருக்க வேண்டும். அவரது ஸ்பரிசத்தை அவள் அணியும்போது அது கொடுத்திருக்க வேண்டும். அதன் பூக்களைத் தேடி வந்தடையும் வண்ணத்துப்பூச்சிகள் எங்கோ ஒரு தூரத்தில் புலாவ் பசார் தீவில் சோற்றுப் பானையைக் கிண்டிக்கொண்டிருக்கும் அத்தா அனுப்பியதாக உம்மா உணர்ந்திருப்பாள். அதுதானே அத்தா இறந்து ஏழுவருடங்களுக்குப் பின்னும் அந்தத் துப்பட்டியை உம்மா உடுத்தி வருவதன் காரணமாக இருக்கும்.
“என் பிள்ளைகள் சாகக் கிடக்குறாங்கள்!”, “என் பிள்ளைகள் சாகக் கிடக்குறாங்கள்!” தனது வயிற்றைக் கிழித்துக்கொண்டு
இரத்தம் வழியவழியக் கத்தும் குரல் வீடியோவில் தனித்து ஒலித்து உருக்கி எடுக்கிறது. ஆஃப்கனிஸ்தானில் ஓடும் விமானத்திலிருந்து விழுந்த மனித உயிர்களுக்கு உலகமே இரங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், கொடூரத்தில் அதற்கு எவ்விதத்திலும் குறைவில்லாத இந்த வீடியோ அதிகக் கவனம் பெறாமல் சிலரால் மட்டுமே பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில் நடப்பது ஆஃப்கானிஸ்தானிலோ ஆஃப்பிரிக்காவிலோ அல்ல, தமிழ்நாட்டில்தான். கதறும் குரல்களும் தமிழில்தான் ஒலிக்கின்றன. கதறிக்கொண்டிருப்பது ஒரு குரல் மட்டும் அல்ல. கிட்டத்தட்ட 80 பேர்.