கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இதுதான்டா போலீஸ் – வில்லவன்

Loading

இதுநாள் வரை அவர்கள் போலீசின் தடியடி காட்சிகளை பார்த்திருக்கக்கூடும். ஒரு சப்.இன்ஸ்பெக்டர் சிறுவன் ஒருவனினை கைது செய்து வாயில் சுட்ட செய்தியை படித்திருப்பார்கள். ஆனாலும் அத்தகைய கொடுமைகள் அவர்கள் வாழ்வில் குறுக்கிட வாய்ப்பில்லை என்பதால் மூளையில் ஏறியிருக்காது.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 3) – மரியம் ஜமீலா

Loading

“எவரேனும் இஸ்லாத்தை மீள்கட்டமைப்பு அல்லது மறுதிசையமைப்பு செய்ய விரும்பினால், தாராளமாகச் செய்யட்டும். இஸ்லாத்தின் எந்தெந்தப் பகுதிகள் உயிரற்று உள்ளன, அவை ஏன் அவ்வாறு உள்ளன, எந்த அடிப்படையில் அவற்றை மாற்றலாம், அதன் அதிமுக்கிய உயிருள்ள பகுதிகள் எவை, அவற்றை எந்நிலையில் அவர் தக்கவைத்துக் கொள்வார் போன்ற கேள்விகளுக்கு தெளிவான வாதங்களின் அடிப்படையில் பதிலளித்தால், அவரது முயற்சிகள் வரவேற்கப்படும்.”

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஜல்லிகட்டுப் போராட்டமும் காவல்துறை அத்துமீறல்களும்

Loading

சென்னை, சேலம், கோவை, வேலூர், புதுக்கோட்டை, அலங்காநல்லூர் முதலான இடங்களில் கூடியிருந்த மக்களைக் காவல்துறையினர் வன்முறையாக வெளியேற்றத் துவங்கினர். வெளியேற மறுத்தவர்கள் தாக்கப்பட்டனர். காவல்துறையினரே வாகனங்களைக் கொளுத்துகிற படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகத் தொடங்கின. மெரினாவில் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த போராட்டக்காரர்களின் வாகனங்களைப் போலீசாரே தாக்கி உடைத்தனர். சில இடங்களில் அவை எரியூட்டவும் பட்டன.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

வஹீதுத்தீன் கான் சொல்வது சமாதானமா, சரணாகதியா?

Loading

உண்மையில், அமைதியும் நீதியும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். நீதி இல்லாத இடத்தில் உண்மையான அமைதி இருப்பதற்கான வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தால் அது மயான அமைதியாக, திணிக்கப்பட்ட அமைதியாகத்தான் இருக்கும். சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு போராடச் சொல்கிறது இஸ்லாம். ஆனால், மௌலானா அவர்கள் இதை மறுக்கிறார். அவரது பிரதிகளை வாசிக்கும்போது, போராட்டம் என்பதையே ஒரு வன்முறை என்கிற ரீதியில்தான் அவர் பார்க்கிறார் என்பதை அவதானிக்க முடியும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 2) – மரியம் ஜமீலா

Loading

“எனவே, என் முன் மூன்று பிரச்னைகள் இருந்தன; நாடு பிரிக்கப்படாவிட்டால் முஸ்லிம்களை பாதுகாக்க என்ன செய்வது; நாடு பிரிக்கப்பட்டால் இந்தியாவில் தங்கிவிடும் முஸ்லிம்களுக்காக என்ன செய்வது; பிந்திய நிகழ்வில், புதிய முஸ்லிம் நாடு இஸ்லாம் அல்லாத அரசாக உருவாகிவிடாமல் தடுத்து, அசல் இஸ்லாமிய அரசாக உருவாக வழி செய்வது எவ்வாறு?”

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஆய்வுக் கட்டுரை: இஸ்லாமிய பார்வையில் அரசியல் பொருளாதாரம்

Loading

தனது உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களின் மீது உழைப்பாளி மட்டுமே சட்டபூர்வமாக உரிமை கோர முடியும். எனவே, யாரேனும் ஒருவர் மற்றவர்களை வேலைக்கமர்த்தி, அவர்களுக்குக் கூலியையும் கருவிகளையும் வழங்கி, அவர்களின் உழைப்பில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்களை தனது உடமையாக்கிக் கொள்வதென்பது இஸ்லாத்தை பொறுத்தவரை நினைத்தும் பார்க்கவியலாத ஒன்று.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மிடில் கிளாஸ்: பலியாகப்போகும் சாத்தானின் அழிவுகால சேனைகள் – வில்லவன்

Loading

இந்த நடுத்தர வர்க்கம்தான் இதுவரை நடந்த தாராளமய சுரண்டலுக்கு விளம்பர தூதுவர்களாக இருந்தார்கள். அவர்கள்தான் இதுவரை நடந்த சூழல் சீர்கேடுகளுக்கும், கிராமப் பொருளாதார வீழ்ச்சிக்கும் மவுன சாட்சிகளாக இருந்தார்கள். வறிய மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களான மானிய வெட்டு, இலவச கல்வி மருத்துவ வசதிகள் ஒழிப்பு, தொழிலாளர் நல சட்டங்கள் ஒழிப்பு போன்றவைகளுக்கு இவர்களே போர்வீரர்களாக இருந்தார்கள். ஆனால் இனி இந்த வீரர்களுக்கான தேவை இல்லை, அவர்களுக்கு வீசப்படும் எலும்புத்துண்டுகள் இனி கார்ப்பரேட்டுக்களுக்கு அனாவசியம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மோடி அரசின் ‘செல்லாது’ அறிவிப்பின் அரசியல் – ஜெயரஞ்சன்

Loading

தமிழ் கதாநாயகன் துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டை பிடிப்பதை ரசிக்கும் நமது ரசிகர்கள், மோடியின் இந்த சாகசத்தில் மயங்குவது இயற்கைதானே? ஆக, பெருகி வரும் சமமின்மையைக் களைய எதையுமே செய்யத் தயாராக இல்லாத மோடி அரசு, இதன் காரணமாகத் தோன்றும் அதிருப்தியை திசை திருப்பவே பணக்காரர்களின் பணத்தை ஒரே அறிவிப்பால் அழித்தது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமே இந்த அறிவிப்பின் நோக்கம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஆத்ம ஆனந்தங்கள் – சையித் குதுப்

Loading

மரணம் இப்போது வந்தாலும் நான் திடுக்கிட மாட்டேன். என்னால் செய்யமுடிந்த அளவுக்கு செய்திருக்கிறேன். ஆயுள் நீடித்தால் நான் செய்ய ஆசைப்படுகின்ற பல விடயங்கள் உண்டு. அவை முடியாமற் போனாலும் கவலை என் உள்ளத்தை அரிக்கப் போவதில்லை. அடுத்தவர்கள் நிச்சயமாய் அவற்றை செய்வார்கள். நிலைத்து நிற்கத் தகுதிபெற்றிருந்தால், என்றுமே அவற்றுக்கு மரணமில்லை. இப்பிரபஞ்சத்தை அவதானித்துக் கொண்டிருக்கும் அந்த தெய்வீகக் கண்காணிப்பு, ஒரு நல்ல சிந்தனையை சாகவிடாது என்ற திருப்தி எனக்கிருக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் மொழிபெயர்ப்பு 

“போபால் மோதல் கொலைகளை” ஊத்தி மூடுவதற்கான விசாரணை நாடகம் அம்பலம்! பகுதி 1

Loading

“சிறைத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு விடயத்தில் கோட்டை விட்டுள்ளார்கள் என்பதை மட்டுமே நாங்கள் நிரூபிக்க வேண்டியுள்ளது; போபால் மோதல் கொலைகளின் உண்மைத் தன்மை பற்றி கண்டுகொள்ளப் போவதில்லை” என்று அந்த அதிகாரி தனிப்பட்ட முறையில் தெரிவித்திருக்கிறார். சிறையுடைப்பு பற்றி மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே தனக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு என்பதாக அவர் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க