ஒளிப்படக் கட்டுரை முக்கியப் பதிவுகள் 

உலகம் முழுக்க றமளான் (1447) – ஒளிப்படக் கட்டுரை

Loading

உலகம் முழுக்க முஸ்லிம்கள் றமளான் மாதத்தை எவ்வாறு வரவேற்கிறார்கள், கடைப்பிடிக்கிறார்கள், கொண்டாடுகிறார்கள் என்பதை ஒளிப்படங்களின் வழி சொல்லிடும் ஒரு சிறு முயற்சி.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மகளிர் தினம் 2026: கொண்டாட்டங்களுக்குப் பின்னால் மறக்கப்படும் உண்மைகள்!

Loading

நுகர்வுக் கலாச்சாரத்தின் மாயையிலிருந்து விடுபட்டு, தார்மீக விழுமியங்களை நோக்கிய பயணமே பெண்களுக்கு உண்மையான விடுதலையைத் தரும். 2026-ஆம் ஆண்டின் மகளிர் தினம் என்பது வெறும் கொண்டாட்டமாக முடிந்துவிடாமல், அநீதிகளுக்கு எதிராகக் குரல் எழுப்பும் ஒரு ‘செயல்பாட்டுத் தினமாக’ (Day of Action) மாற வேண்டும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஒரு நாள் மனிதர்கள்?!

Loading

“எவனுடைய இரண்டு நாட்கள் ஒரே மாதிரியாக கடத்தப்படுகின்றதோ அவன் மிகப் பெரிய நஷ்டவாளி.” (பைஹகீ)

இரண்டு நாட்களை ஒரே மாதிரியாக கடத்துபவன் நஷ்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றான் என்றால் ‘இரண்டு றமளானை ஒரே மாதிரியாக கடத்துபவர்கள் எத்தகையவர்களாக இருப்பர்?! அப்படி ஒரே மாதிரியான நிலையில் தனது நாட்களை, குறிப்பாக றமளானை கடந்து போகின்றவர்கள் தங்களுடைய நிலை குறித்து அதிகம் சிந்தித்திட, அந்த சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்திட கடமைப்பட்டுள்ளோம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

கட்டுறுதி கொண்டவராக இருப்பதன் முக்கியத்துவம்

Loading

இஸ்லாம் ஆர்வமூட்டும் விளையாட்டு மரபுகள் மனம், உடல், ஆன்மா அனைத்தையும் ஒருசேர வலுப்படுத்துகின்றன. இஸ்லாத்தில் விளையாட்டிற்கு உடல் ரீதியான பயனையும் தாண்டி ஓர் உயர்ந்த நோக்கம் உள்ளது. அதுதான் ‘ஃபனா’ (fana) — அதாவது மனிதன் தனது ஈகோவை அல்லது சுயத்தைப் பூஜ்யமாக்கி, தன் நாட்டங்களை அல்லாஹ்வின் நாட்டத்தோடு இணைப்பதாகும்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

நோன்பின் நோக்கம்

Loading

தக்வா என்பது அல்லாஹ்வின் சட்டங்களுக்கு, அவன் அமைத்த ஒழுங்குகளுக்கு உட்பட்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்வது. தக்வா என்பது அல்லாஹ்வின் கட்டளைகளைப் பேணுவது. தக்வா என்பது அவன் செய்ய வேண்டும் என்று கூறியவற்றைச் செய்வதும் அவன் விலகியிருக்க வேண்டும் என்று கூறியவற்றிருந்து விலகியிருப்பதும் ஆகும். நோன்பு அப்படியான, நேர்த்தியான ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு பயிற்சி. நோன்பின் வழியாக மனிதர்கள் அந்த உயர்நிலையை அடைய முடியும்.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

தமிழின் முதல் நாவல் கீழக்கரையிலிருந்து…!

Loading

தமிழின் முதல் நாவலான தாமிரப்பட்டணம் குறித்த ஆய்வு

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

‘கவிதையின் சமன்’ – மலபார் இலக்கியத் திருவிழா, கோழிக்கோடு 2023

Loading

ஒவ்வொரு சமூகத்தினரும் சாதி, மத அடிப்படையில் கல்வி நிறுவனங்களைத் தொடங்கினால் மட்டுமே தங்கள் சமூக மாணவர்களுக்கு போதிய இடங்கிடைக்கிறது என்ற பருண்மை இலக்கிய நிகழ்வுகளுக்குள்ளும்  தவிர்க்க முடியாத ஒன்றாக மாறுவது வேதனையளிக்கும் விசயம்தான். மலபார் இலக்கியத் திருவிழாவுமே நீண்ட ஒதுக்கலினால், சமூகம் தனக்குத்தானே கண்டெடுத்த விடைதானே. ‘எங்கள் இலக்கிய முதுசொங்களை இறக்கி வைப்பதற்கும், புதியதாய் சுட்ட பணியாரங்களைக் கடை விரிப்பதற்கும் ஈரடி இடந்தாருங்கள் எஜமானே!’ என்ற மன்றாட்டுகளிலிருந்து விடுதலை. இது நம்ம இடம் என்ற உணர்வு அளிக்கும் விசாலமும் தன்னுணர்வும் மகத்தானது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இந்துமாக்கடல் வாழ் சமூகத்தில் மறைந்துவரும் மொழியைக் காப்பாற்றும் காயல்பட்டினம்

Loading

தமிழ் – அறபி ஆகிய இரண்டு செவ்வியல் மொழிகள் இணைந்து ஈன்ற அழகிய குழந்தைதான் அர்வி மொழி. இன்று அர்வி அதன் நோக்கத்தையும் பெருமையையும் இழந்திருந்தாலும், அது மீட்டுருவாக்கப்பட்டு பாதுகாக்கப்படுவது அவசியம்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஓர் அழகிய ஆவணம்

Loading

தொழுகை முடித்து அறைக்குத் திரும்பி வந்த இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானீ அவர்கள் ஹதீஸ் விரிவுரை எழுதப்பட்ட அந்தத் தாளைப் பார்க்கிறார்கள். தன் மகள் அதில் கிறுக்கி வைத்திருப்பதை அறிகிறார்கள். வேறொரு தாளில் அதை அப்படியே எழுதிக்கொண்டு அதைக் கிழித்துப் போட்டிருக்கலாம். கால் நூற்றாண்டு காலம் கடுமையாக உழைத்து எழுதும் பணியில் ஒரேயொரு தாளை மீண்டும் படி எடுப்பது ஒன்றும் சிரமமான வேலை அல்ல. ஆனால், மகான் அவர்கள் தன் மகள் கிறுக்கிய அந்தத் தாளை அப்படியே தன் நூலில் சேர்த்துவிட்டார்கள். அது இன்றும் மூலக் கையெழுத்து ஆவணமாக (manuscript) இருக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

அறுக்கும் முன்…

Loading

நாம் ஏன் இளம் பிராணிகளை அறுக்கிறோம்? அதன் இறைச்சி மென்மையாக இருப்பதற்காக என்று சொல்கிறோம். அதுதான் ருசியாக இருக்கும் என்கிறோம். நாவு ருசி தேடி அலைவதில் சட்டங்களை நமக்குச் சாதகமாக வளைக்கிறோம். ருசியாகச் சாப்பிட்டால்தானே அல்லாஹ்வுக்கு மனமுவந்து நன்றி சொல்லலாம் என்று சப்பைக்கட்டு கட்டுகிறோம். சபாஷ்! அல்லாஹ்வுக்கு நன்றி சொல்வதில் நாம் அவ்லியாக்களை மிஞ்சிவிட்டோம் பாருங்கள்!

மேலும் படிக்க