தற்போதைய பிரச்னையை ஹிஜாப் அணிவதற்கான உரிமை தொடர்பான விஷயமாக மட்டும் நாம் சுருக்கிப் புரிந்துகொள்ளக் கூடாது. அவர்கள் தங்களின் நாகரிகமே ஆதிக்கம் செலுத்த வல்லது என்றும், தாங்களே பலம்மிக்கவர்கள் என்றும் நிறுவ நினைக்கிறார்கள். முஸ்லிம்களை தங்களுக்குக் கீழானவர்கள், இரண்டாந்தரக் குடிகள் என்று நிறுவ முனைகிறார்கள். அதற்காக அவர்கள் இஸ்லாமிய அடையாளங்களைக் குறிவைத்து ஒடுக்குகிறார்கள். அந்த அடிப்படையில் இப்போது அவர்களின் தெரிவாக ஹிஜாப் உள்ளது. பல பண்பாடுகளில் தலையை மறைக்கும் வழக்கம் இருந்தாலும் தற்போது இஸ்லாமியப் பண்பாடு அளவுக்குப் பரவலாக அது இல்லை எனலாம்.
பாபர் மசூதியுடன் எதுவும் முடிந்துவிடவில்லை. நிஜத்தில் பாபர் மசூதி பலவித வரிசை மாற்றங்களுக்கும், பெருக்கல் சாத்தியங்களுக்கும் அரசியல் இந்துத்துவத்தை இட்டுச் சென்றிருக்கிறது. இப்போது சந்திக்கு இழுத்து விடப்பட்டுள்ள ஞான்வாபி மசூதி – வாரணாசி காசி விசுவநாதர் ஆலயத்திற்கு அருகமையில் உள்ள இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமாகும். காசி விசுவநாதர் ஆலயத்தின் நிர்வாகத்தை அரசு 1983 முதல் தன்வசம் எடுத்துக்கொண்டு நடத்தி வருகிறது. அதற்கு முன்பாக இருந்த மடாதிபதிகளில் ஒருவரான சுவாமி ராஜேந்திரா என்பவர் இந்த விவகாரம் பற்றிப் பேசும்போது, (இன்கே பாஸ் ராம் நஹீ ரஹங்கே.. யே பெரோஜ்கார் ஹோ ஜாயேங்கே) ‘இவர்களுக்கு (இந்துத்துவர்கள்) ராம் இல்லாது போனால், வேலை வெட்டி இல்லாதவர்களாக ஆகிவிடுவார்கள்’ என்றார். மேலும் விவரமாகப் பேசுகையில், “இப்போது புதியதொரு வேலையைத் துவக்க ஒரு தளம் (ராமர் கோவில் மூலம்) அவர்களுக்குக் கிடைத்துள்ளது” என்றார்.
ஹிஜாப் உங்கள் சுயதேர்வா அல்லது வீட்டிலுள்ளர்களின் அழுத்தத்தால் கடைப்பிடிக்கப்படுவதா?
இது எங்கள் மீது திணிக்கப்பட்டிருப்பதாக முஸ்லிமல்லாதோர் பலர் நினைக்கிறார்கள். அந்த அடிப்படையிலிருந்துதான் இந்தக் கேள்வி வருகிறது. நாங்கள் மூளை சலவை செய்யப்பட்டிருப்பதாகக்கூட ஒருசிலர் வெறுப்பைக் கக்குகிறார்கள். எங்களுக்கு சுயசிந்தனை இல்லை என்பதுபோல் அவர்கள் சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். ஒருவகையில் இதுவெல்லாம் முஸ்லிம் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை.
சுயதேர்வு பற்றி ஒன்றைச் சொல்லியாக வேண்டும். ஒருவரின் சுயதேர்வு 100 சதவீதம் எந்தப் புற அழுத்தமும் இல்லாமல் மேற்கொள்ளப்படுவதாகச் சொல்ல முடியுமா? நம் சமூகத்தில் பெண்கள் முடியை நீளமாக விடுவதும், ஆண்கள் தன் முடியைக் கத்தரித்துக்கொள்வதும் அவரவர் விருப்பங்களின்படிதான் நடக்கிறதா? அவ்வாறு நடந்தால் மக்கள் எல்லோரும் எப்படி ஒன்றுபோல் இருக்க முடிகிறது?
அதனால் ஹிஜாபை திணிப்பு, அடிமைத்தனம் என்றெல்லாம் வெளியிலுள்ளோர் சொல்லக் கூடாது. அது எங்களை அவமதிக்கும் செயல். அப்படிச் சொல்வோரை சட்டப்படி தண்டிக்க வழிவகைகள் தேவை என்று நினைக்கிறேன். ஹிஜாப் குறித்து கருத்துச் சொல்லும் உரிமை மற்றவர்களைவிட எங்களுக்குத்தான் இருக்கிறது.
கடந்த பல மாதங்களாக உக்கிரமடைந்துவரும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி பற்றிய கட்டுரைகள் உள்ளூர் ஊடகங்களிலும், உலகளாவிய ஊடகங்களிலும் பிரதானமாக இடம்பெறுகின்றன. இலங்கையின் பெரும் வெளிநாட்டுக் கடன் சுமை, அந்நியச் செலாவணி இருப்பு குறைதல், எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஏற்பட்டுள்ள சவால்கள் முதலான நெருக்கடியின் அறிகுறிகள் பற்றியே அவற்றில் பெரும்பாலான கட்டுரைகள் பேசுகின்றன. இலங்கை அரசியல் பொருளாதாரத்தின் நீண்டகால அம்சங்கள், அவற்றுக்கு இப்போதைய நெருக்கடியுடன் உள்ள உறவுகள் குறித்த கேள்விகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. கடந்த கால இலங்கை அரசாங்கங்களின் அரசியல் பொருளாதாரக் கொள்கை முடிவுகள், பெருந்தொற்றுக்குப் பின்னர் இலங்கைப் பொருளாதாரத்தை அதிகமாகவோ குறைவாகவோ அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதா? பொதுவெளியில் வல்லுநர்களும் கருத்தாளர்களும் பொருளாதாரம் பற்றி எப்படி விவாதிக்கிறார்கள்? இப்போதைய அரசாங்கத்தின் முன்னுள்ள பணிகள் என்ன?
அரசியல் பொருளாதார நிபுணரும், வட மாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் கௌரவத் தலைவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளருமான அகிலன் கதிர்காமர் அவர்களுடன் நாம் மேற்கொண்ட கலந்துரையாடல் இந்நேர்காணல். கதிர்காமர் இலங்கையின் பொருளாதாரப் பாதை, அதன் கட்டமைப்பு அம்சங்களை மட்டும் விவரிக்காமல், இப்போதைய நெருக்கடிகள் பற்றிய ஆழமான பார்வையை வழங்குகிறார். அதே வேளையில் இப்போதைய பிரச்னை குறித்த விவாதங்களின் தென்படும் சிக்கல்களையும் சுட்டிக்காட்டுகிறார்.
நம்மிடையே புழக்கத்திலுள்ள ‘மனித உரிமை’க்கும், மனித உரிமை அமைப்புகளின் சொல்லாடல்களுக்கும் வித்தியாசங்கள் இருக்கவே செய்கின்றன. அன்றாட ஒடுக்குமுறைகளுக்கு முகங்கொடுக்கும் விதமாக அவை முக்கியமான இடையீட்டையும் பங்களிப்பையும் செய்கின்றன என்பதை மறுக்க முடியாது. எனினும், இக்கட்டுரையானது சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் அரசியல் வன்முறைகளை மனித உரிமைச் சொல்லாடல்களைக் கொண்டு அணுகுவதை விமர்சனத்திற்குட்படுத்துகிறது. இறுதியாக, மனித உரிமைச் சொல்லாடல்கள் நவதாராளவாதச் சிந்தனைகள் வளர்ந்துவந்த சமயத்தில் மீண்டும் புழக்கத்திற்கு வந்ததன் பின்னணியையும் பேசுகிறது.
ஒடுக்கப்படும் தமது சமூகத்தை ஒற்றைக்கல் கட்டுமானமாகச் சித்தரிப்பதும், அதற்குள் பல போக்குகள் இருப்பதைக் காண மறுப்பதும், தம் சமூகத்தின் மீது அரசு நிறுவன ஒடுக்குமுறையை நியாயப்படுத்தும் அளவுக்கு அவரது பகுத்தறிவு உணர்ச்சி செல்வதும் சரியானதாகத் தோன்றவில்லை. எந்தச் சமூகத்திலிருந்து வந்தாரோ, அந்தச் சமூகம் படும் பாடுகளைப் பரிவுணர்ச்சியுடன் காண அவருக்குக் கண் இல்லை. அத்துடன், பார்ப்பன ஆதிக்கத்தின் கோர வடிவான இந்து / இந்திய தேச அரசின் ஒடுக்குமுறை எதிர்த்துப் போராடும் திராவிட இயக்க உணர்ச்சியும் அவரிடமில்லை என எனக்குத் தோன்றுகிறது.
இதுபோன்ற குரல்களை பகுத்தறிவுவாதம், மத விமர்சனம் என பொத்தாம் பொதுவான போக்கில் திராவிட இயக்க மேடைகளில் அனுமதிப்பதும் நியாயமானதில்லை.
காஷ்மீர் ஃபைல்ஸ் திரையிடப்பட்ட திரையரங்குகளின் வாசல்களில் இஸ்லாமிய வெறுப்பு முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன; “துரோகிகளை அழிக்க வேண்டும், பழிதீர்க்க வேண்டும்” போன்ற முழக்கங்கள் வெகு இயல்பாக எழுப்பப்படுவது இந்தியாவில் இன்று பரவியிருக்கும் வெறுப்புச் சூழலை நமக்கு உணர்த்துகின்றன. அதே 90களின் இறுதியில் தேசியத் தொலைக்காட்சியான தூர்தர்ஷன் சேனலில் பொது நிதியைக் கொண்டு ராமாயணம் தொடர் ஒளிபரப்பப்பட்டது. இது இந்தியாவில் ராமர் அரசியல் வலுவாகக் காலூன்ற வழிவகுத்தது. பாபர் மசூதிக்கு எதிரான கரசேவைக்கு ஆள் சேர்க்கவும் இது பயன்பட்டது. அதுபோல, இன்று காஷ்மீர் ஃபைல்ஸ் படம் இந்துத் தேசியவாத நிகழ்ச்சி நிரலுக்கு மிக முக்கியப் பங்காற்றி வருகிறது.
இந்தத் திரைப்படத்தில் இடம்பெறும் உண்மைக்குப் புறம்பான அம்சங்கள் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன. வெளியேற்றப்பட்ட பண்டிட்களின் எண்ணிக்கை, கொல்லப்பட்டோர் எண்ணிக்கை, அன்று பாஜக ஆதரவு ஒன்றிய அரசின் ஆட்சி இருந்தது முதலான பல்வேறு அம்சங்கள் இப்படத்தில் பிழையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்படியான தகவல் பிழைகளையெல்லாம் தாண்டி, இஸ்லாமிய வெறுப்பை உற்பத்தி செய்யும் தனது நோக்கத்தை கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறது இந்தப் படம்.
தோற்றங்கள் நம்மை ஏமாற்றுகின்றனவா? பொருட்கள் இறைவனின் விருப்பத்திற்கிணங்க செயலாற்றுகின்றனவா? மேலும், பொருட்கள் நிரந்தரமில்லாதவையா? அவற்றை இறைவன் தொடர்ச்சியாகப் படைப்பதால் மட்டுமே பொருட்கள் இருக்கின்றனவா? கஸ்ஸாலியின் கூற்றுப்படி, இவ்வனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில், ஆம். தோற்றமளிக்கும் பொருட்கள் நிரந்தரத்தன்மை கொண்டவையல்ல. அப்பொருட்களின் சார்புநிலைகள் காரணங்களோடு தொடர்புடையவை. ஒவ்வொரு நிகழ்வும் மற்றொரு நிகழ்வுக்குக் கொண்டு செல்பவையானாலும் அக்காரணங்கள் இறைவனுடைய பண்புகளின் விளைவாகும்! இறைவன் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் தொடர்ச்சியாகப் படைத்துக் கொண்டிருக்கிறான். அவன் படைப்பதை நிறுத்திவிட்டால் பொருட்கள் எதுவும் இருக்காது. எந்தப் பொருளும் இல்லாமலாகும்.
பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தது, ஆம் ஆத்மி கட்சி மீதுள்ள அன்பினால் அல்ல. மாறாக மேட்டுக்குடியினரை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியிலிருந்து கட்டுப்படுத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் பாணி குறித்துப் பலத்த சந்தேகங்கள் உள்ளன. பஞ்சாபியர்கள் டெல்லி தர்பாருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த நீண்ட வரலாற்று மரபு உள்ளது. கேஜ்ரிவாலும் அவரது டெல்லி கூட்டாளிகளும், பஞ்சாபி அரசியல் பண்பாட்டின் இந்த அம்சத்தின் முக்கியத்துவத்தைத் தாமதமாக உணர்ந்திருந்தாலும், இறுதியில் பகவந்த் மானை ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் பதவிக்கு முன்னிறுத்த முடிவு செய்தனர். மான், எந்த நிர்வாகத் திறமைக்கும் பெயர் பெற்றவராக இல்லாவிட்டாலும், ஊழலற்ற, எளிமையான வாழ்க்கை முறைக்கும் செயல்பாட்டிற்கும் பெரிதும் மதிக்கப்படுகிறார்.
கெஜ்ரிவாலின் டெல்லி ஆட்சி மீது ஈர்ப்புக் கொண்டு, பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்துள்ளனர் என்ற கதையைப் பரப்பும் பல வர்ணனையாளர்களைப் போலல்லாமல், மானின் நேர்மையும் பிரபலமும்தான் பஞ்சாபி மக்களை ஆம் ஆத்மிக்கு ஈர்த்துள்ளது.
இதன் குறிப்பிடத்தக்க உட்பொருள் என்னவென்றால், கெஜ்ரிவால் மான்னையும் பஞ்சாபின் ஆம் ஆத்மி அரசாங்கத்தையும் கைப்பாவையாக ஆக்கிக் கட்டுப்படுத்துவதாகக் கருதப்பட்டால், காங்கிரஸ்-அகாலி மேட்டுக்குடிகள் தோற்பதற்கு வழிவகுத்த மக்கள் சினம் கெஜ்ரிவாலை நோக்கியும் திரும்பக்கூடும்.
முன்னுரை அளவிலாக் கருணையாளனும், இணையிலாக் கிருபையாளனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் CNNல் 2009ம் ஆண்டு வெளியான Generation Islam எனும் ஆவணப்படத்தில் ‘பாகிஸ்தானில் இஸ்லாமியக் கல்வி’ என்ற பகுதியில், “பழங்காலத்தில் அடைபட்டிருக்கும் ஒருவித இஸ்லாத்தையே பல மதரசாக்கள் பயிற்றுவிக்கின்றன. கணிதம், அறிவியல் போன்றவை பயிற்றுவிக்கப்படுவதில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பிறகு ஒரு என்ஜிஓ பணியாளரை “பாகிஸ்தானின் மதரசாக்களை நவீனமாக்கும் போரில் முன்னணியிலிருப்பவர்” [1] எனப் பாராட்டியது. மதரசாக்களை [2] நவீன யுகத்துக்கு முந்தைய முஸ்லிம் கலாச்சாரத்தின் எச்சமாகவும், சமகாலத்துக்குத் தொடர்பற்றவையாகவும், நவீன உலகிற்கு முரணானவையாகவும் சித்தரித்தது இந்த ஆவணப்படம். முஸ்லிம் உலகம் கல்வியில் எதிர்கொள்ளும் சவால்களுக்குக் காரணம் அது கல்வியை “நவீனமாக்காததே” என நாம் பரவலாக ஊடகங்களிலும் அறிவுஜீவி வட்டாரங்களிலும் அரசுசார் நிறுவனங்களிலும் [3] காணும் கருத்தைப் பிரதிபலிப்பதாக இப்படம் அமைந்தது. இப்படிச் சொல்வதன் வழியாக முஸ்லிம் உலகின் பல…