நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதன் விளைவு என்னவாக இருக்கும்? – பேரா. அசோக் ஸ்வைன் நேர்காணல்

ஜார்ஜ் புஷ் நிர்வாகத்தையும் ஒபாமா நிர்வாகத்தையும் ஒப்பிட்டால், ஆஃப்கானிஸ்தான் விஷயத்தில் ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. ஆனால், ட்ரம்ப் நிர்வாகம் தாலிபானுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியதுடன், அதன் முன்னணித் தலைவர்களை விடுதலை செய்ய பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தது. மேலும், தாலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி உடன்படிக்கைச் செய்துகொண்டு, பன்னாட்டுப் படைகளை ஆஃப்கானிஸ்தானிலிருந்து திரும்பப்பெற நாள் குறித்தது. என்றாலும், பைடன் நிர்வாகத்திடம் இந்தக் கடினமாக பணியை ஒப்படைத்துவிட்டது. இவ்விஷயத்தில் பைடன் தன் தலைமைத்துவப் பண்மைக் காட்டியிருக்கிறார். ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சியின் தீவிர விமர்சனங்களுக்கிடையேதாம் துருப்புகள் திரும்பப்பெறப்படுகின்றன.

அமெரிக்காவுக்கு இது வெற்றிபெற இயலாத போர்தான். அமெரிக்காவின் தோல்வியை ஒப்புக்கொண்டு போரை நிறுத்தியிருப்பது பைடன் செய்த சரியான காரியம் என்றே சொல்வேன்.

மேலும் படிக்க
நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

நபிகள் நாயகம் விதித்த ஓவிய வரையறைகள் மாற்றுச் சிந்தனைகளுக்கான உந்துசக்தியாகின – ஓவியர் மதுரை ரஃபீக் நேர்காணல்

அரூப (Abstract) ஓவியங்களுக்கு அடிப்படையே இஸ்லாம்தான் என்றுகூடச் சொல்வேன். பூடகமான, புதுவிதமான Concept-ஐ தேடி முஸ்லிம் ஓவியர்கள் நகர்ந்திருக்கிறார்கள். உருவம் சாராது எப்படி வரைவது என யோசித்தபோதுதான் இலைகளை, பூக்களைப் பார்த்து அதே மாதிரி வரைந்திருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, தாஜ்மஹாலைச் சொல்லலாம். மேலிருக்கும் Dome (மைய மண்டபத்தின் கூம்பு வடிவக் கூரை) மலரின் மொட்டாகவும், சுற்றியுள்ளவை இலையாகவும், மினாராக்கள் மல்லிகைக் கொடியாகவும் உருவகிக்கலாம்.

நபிகள் நாயகம் அவர்கள் விதித்த ஓவிய வரையறைகள் மாற்றுச் சிந்தனைக்கான கிரியா ஊக்கியாகவே வினை புரிந்ததிருப்பதை வரலாறு பதிவுசெய்துள்ளது. Miniature Painting நுண்கலையில் புதிய தனி பாணியொன்றைக் கட்டியமைத்தது முஸ்லிம்களே.

மேலும் படிக்க
நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

மதமாற்றத்தின் அரசியல்!

அவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு மாற்றத்தை மட்டுமே கொண்டுவந்திருப்பது தெரிகிறது. மொத்தத்தில் பெரும்பாலான பௌத்தர்கள், மதமாற்றத்துக்கு முந்தைய தமது இந்து வழக்காறுகளையும் நம்பிக்கைகளையுமே தொடர்கிறார்கள். எனவேதான், தலித்கள் இஸ்லாத்துக்கு மாறுவதை மூர்க்கமாக எதிர்க்கும் இந்துவெறிக் குழுக்கள், தலித்கள் விரும்பினால் பௌத்தர்களாக மாறிக் கொள்ளலாம் என வாதிடுகின்றன. ஏனெனில், அவர்களின் பார்வையில் பௌத்தம் என்பது இந்து மதத்தின் ஒரு கிளைதான்.

மேலும் படிக்க
நேர்காணல்கள் 

“நான் இந்து இல்ல, நான் இப்ப பள்ளனும் இல்ல; சாதிய ஒழிச்சுக்கட்டிய முகம்மது பிலால்!”

“மதம் மாறுவது என்கிற நிலையில் நீங்க பவுத்தரா, கிறித்தவரா மாறுவது ரொம்ப சுலபம். அது யாரையும் இந்த சமூகத்துல பாதிக்காது. மதம் மாறுகிறவர்கிட்டேயும் மாற்றத்த கண்டுபிடிக்க முடியாது. வேணும்னா கூட்டம் போட்டு சொல்லிக்கலாம். ஆனா, நீங்க இஸ்லாம் மாறுவது என்பது மத மாற்றம் மட்டுமல்ல. உன்னுடைய சமூகத்துல உன்ன அடிமைப்படுத்துகிற கலாச்சாரத்திலிருந்தும் மாறுகிறோம்.”

மேலும் படிக்க
நேர்காணல்கள் 

“ஒரே நொடியில் ஜாதியை ஒழித்து விட்டேன்”

தமிழகத்தின் தென்கோடியில் கன்னியாகுமரி அருகே கொடிக்கால் கிராமத்தில் பிறந்த கொடிக்கால் ஷேக் அப்துல்லா, ‘இஸ்லாம் ஏமாற்றவில்லை’ என்கிறார். அநீதியாகத் தம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட பிறவி இழிவைத் துடைத்தெறிய இலக்கியம், ஊடகம், பகுத்தறிவு, பொதுவுடைமை, மனித உரிமை எனப் பயணப்பட்டு, வழியெல்லாம் ஏமாற்றத்தில் கரைந்து, இறுதியில் இஸ்லாத்தின் மூலம் தனது இழிவு நீங்கியதைப் பெருமையுடன் விவரிக்கிறார். ஒடுக்கப்பட்ட இனங்களின் விடுதலைக்காக, அவர் அனுபவத்தில் தேக்கியவற்றைத் தன் தாய்ச் சமூகத்திடம் வாஞ்சையுடன் பகிர்ந்து கொள்கிறார்.

மேலும் படிக்க
நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய விஞ்ஞானங்கள்: அர்த்தம், சாத்தியம், எதிர்காலம்

இஸ்லாமிய அறிஞர்கள் அவர்களுடைய மரபை முழுமையாக அறிந்திருப்பதோடு மட்டுமல்லாமல், இது தொடர்பாக மேற்கத்திய அறிஞர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை அறிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். இதற்கு அர்த்தம் என்னவென்றால், ஆங்கிலம் மட்டுமல்லாமல் ஜெர்மன், பிரெஞ்சு, மற்றும் இன்ன பிற மொழிகளில் உள்ள அறிவுசார் ஆய்வுகளை அறிந்தவர்களாக இருக்க வேண்டும். இத்தகைய கல்விப்புல ஆய்வுகள் மீது அறிவை அடிப்படையாகக் கொண்டு விமர்சனங்களை முன்வைக்க முடிந்தவர்களாக இருக்க வேண்டும். இதில் இஸ்லாமிய அறிஞர்களிடத்தில் கல்விப்புலம் சார்ந்த போதாமைகள் இருக்குமானால் அவர்களின் எழுத்துகளை எவரும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை. இதற்கு மொழியாளுமையும் தேவைப்படுகிறது. அறபு, பாரசீகம், ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு கட்டாயமாகத் தேவைப்படுகின்றன. மேலும் ஒரு இஸ்லாமிய மொழியையும் அறிந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு அறிஞர் உஸ்மானிய அறிஞர்கள் பற்றியோ, இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் பற்றியோ அக்கறை கொண்டிருப்பாரானால், அவர் துருக்கி அல்லது உருது மொழியைக் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். இன்று ஒரு சிறந்த இஸ்லாமிய அறிஞர் என்பதற்கான அளவுகோல் என்னவென்றால், அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாமல் முக்கியமான மேற்கத்தியப் பல்கலைக்கழகங்களில் கூட மரியாதையை உண்டாக்கக்கூடிய உரையை நிகழ்த்தக்கூடிய திறன்படைத்தவராக அவர் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க
நேர்காணல்கள் 

எந்தவொரு கலையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குச் சொந்தமானதாய் இருக்க முடியாது

மனித வாழ்வுக்கு கலை அவசியமானது என்பேன். கலைகள் எல்லாம் உயர் மனிதப் பண்புகளை நம்முள் விதைக்கக்கூடியவை. எதிர்மறை மனிதப் பண்புகளை நம்மிடமிருந்து அகற்றுவதற்கு கலை, இலக்கியங்கள் அவசியத் தேவை. உண்மையில், கலைகளின் செயல்பாடும் நல்ல மனிதர்களை உருவாக்குவதுதான் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.

மேலும் படிக்க
நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

கும்பல் கொலைகளை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்?

கும்பல் கொலைகளில் ஈடுபடுபவர்களை நூறு கோடி இந்துக்களின் பிரதிநிதிகளாக முஸ்லிம்கள் பார்க்கவில்லை. ஜனநாயக அமைப்பின் மீது முஸ்லிம்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இவ்விசயத்தில் முஸ்லிம்கள் மகத்தான நன்னடத்தையை -அசலான ஜனநாயகவாதிகளின் நடத்தையை- வெளிப்படுத்துகிறார்கள். வெறும் தேர்தல் ஜனநாயகத்தின் விழுமியத்தை அல்ல, ஜனநாயகம் எனும் பண்பாட்டு விழுமியத்தை அவர்கள் இவ்விசயத்தில் கடைப்பிடிக்கிறார்கள். முஸ்லிம்களின் மொழியில் ‘சப்ரு’ என்று சொல்லப்படும் நிலைகுலையாமையையும் அழகிய பொறுமையையும் பேணி வருகிறார்கள்.

மேலும் படிக்க
நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

தலித்கள் ஏன் சாதி அடையாளத்தைக் கூர்மைப்படுத்த வேண்டும்?

‘இந்து’ எனும் சமூக அடையாளத்துக்குள் நம்மை மூழ்கடிப்பதே அவர்களின் நோக்கம். அந்த அடையாளத்தின் தலைமையாகவும் குரலாகவும் அவர்கள் தங்களையே நிலைநிறுத்திக் கொள்வார்கள். ஆம், தலித்களை இந்துமயப்படுத்தியே தமது ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். அதனால்தான் தீவிர (ரேடிகல்) தலித்களும், பழங்குடிகளும், பிற்படுத்தப்பட்ட சாதியினரும் இந்து அடையாளத்தை மறுக்கவும் எதிர்க்கவும் செய்கிறோம். உண்மையில் நாம் இந்துக்களல்ல. பிறகு ஏன் நாம் அப்படி அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும்? நம் சொந்த அடையாளங்களை நாம் ஏன் இழக்கவேண்டும்?

மேலும் படிக்க