பாட்சாவின் சடலத்தைக் கொண்டு முஸ்லிம்கள் – சங்கிகள் – கிறிஸ்தவர்கள் இடையில் ஏற்படும் சிக்கலும் முறுகலும்தான் ஆன்டி இண்டியன் படத்தின் மையக்கரு. படத்தின் தொடக்கம் முதலே முஸ்லிம்கள் பிரச்னைக்குரியவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். சங்கிகள் மீம் கண்டெண்ட் பாணியில் சில இடங்களில் பகடி செய்யப்படுகிறார்கள். முட்டாளாக, நகைப்புக்குரியவர்களாக அவர்களைச் சித்தரிக்கிறது படம்.
சட்டப்படி ஒரு ஆயுள் தண்டனை கைதி 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவிட்டால் அவரை விடுதலை செய்வதில் எந்தத் தடையும் இல்லை. ஒருவர் தண்டனைக் காலத்தை அனுபவித்துவிட்ட பிறகு அவர் என்ன குற்றம் செய்தார் என்பதைப் பார்க்க வேண்டிய தேவையில்லை. தண்டனைக் காலம் முடியும் முன்னரேகூட ஒருவரை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அரசியலமைப்பின் 161வது விதியின் கீழ் அதிகாரம் உள்ளது. ஒரு சிறைவாசியின் நடத்தைக்கான நற்சான்று இருப்பதே விடுதலை செய்வதற்கு போதுமானது. இவ்வாறு விதிகள் தெளிவாக இருந்தாலும் சிறைவாசிகள் விடுதலை என்பது பாரபட்சமாக, தன்னிச்சையாகத்தான் இதுவரை கையாளப்பட்டு வந்திருக்கிறது என்கிறார் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்.
இஸ்லாம் ஒரு சமத்துவக் கொள்கை கொண்ட மதமாகும். அதாவது, முகமதிய மதத்தில் மக்களுக்குள் பிறவியில் உயர்வு தாழ்வு என்பது கிடையவே கிடையாது. பணக்காரன், ஏழை, படித்தவன் படியாதவன்; இளைத்தவன் பலசாலி என்கின்ற வித்தியாசமில்லாமல் சகலருக்கும் வாழ்வில் சகல உரிமையும் அளிக்கின்றது. மேலும், முகமதிய மதம் ஒற்றுமையையே அதிகமாய்க் கொண்டிருக்கிறது. அதாவது அந்த மதத்தைச் சேர்ந்த ஒரு தனி மனிதனுக்கு ஒரு சிறு தீங்கு அந்நியனால் செய்யப்பட்டாலும், உடனே அவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி தங்களுக்கு வந்ததுபோல் கருதி அவனுக்கு உதவி செய்ய அவசரமாய் முந்துகின்றார்கள்.
சமீபத்தில் வெளியான முனைவர் இமாத் ஹம்தாவின் Salafism and Traditionalism: Scholarly Authority in Modern Islam என்ற நூல் எமது உரையாடல்புலத்திற்குப் பயனளிக்கும் பல முக்கியமான உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது. அதிலொன்று, நவீனகால சலஃபிசச் சிந்தனைப் பள்ளியானது இஸ்லாமிய மூலாதாரங்களைப் பொருள்கோடல் செய்வதற்கான மற்றொரு முறைமையாகவே (Hermeneutical Methodology) புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்ற அவரது கருத்து. ஏனெனில், கடந்த சில தசாப்தங்களாக சலஃபிசம் எனும் சொல் மிகவும் அரசியல்படுத்தப்பட்ட ஒன்றாகிவிட்டது. நாசகர அரசியல் குறிக்கோள்களை நோக்கி மக்களை வழிநடத்தும் கோட்பாடாகவே அது பார்க்கப்படுகிறது. இது தவறான கண்ணோட்டம் என்று கூறும் நூலாசிரியர், சலஃபிசத்தின் மையமான வாதங்களையும், மூலாதாரங்களை அவர்கள் அணுகும் விதத்தையும், அதிலுள்ள உள்முரண்பாடுகளையும் பகுப்பாய்வு செய்கிறார்.
அடுத்து, இஸ்லாமிய மூலாதாரங்களைப் பொருள்கோடல் செய்வது எப்படி என்பது குறித்த சலஃபிசச் சிந்தனைப் போக்கை, அதற்கு எதிர்த்திசையில் பயணித்த இஸ்லாமிய மரபுவாதத்தின் (Islamic Traditionalism) விவாதங்களைத் தவிர்த்துவிட்டுப் புரிந்துகொள்ள முடியாது என்கிறார் இமாத் ஹம்தா. இந்தப் பின்னணியில், இஸ்லாமிய மரபுவாதத்தின் பிரதான கருத்தாடல்கள் பற்றியும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது.
தமிழ் நாவல் உலகு எனும் வீட்டில் புதியதொரு ஜன்னலை திறந்துவிட்டுள்ளது கிரானடா என்று சொன்னால் அது மிகையான கருத்தல்ல. ”அசாதரணமாதொரு காலத்தில் வாழ்ந்த சாதாரணர்கள் சிலரின் வாழ்க்கையைப் பின் தொடர்ந்து செல்வதன் ஊடாக, பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த முஸ்லிம் ஸ்பெயினின் வீழ்ச்சி ஏற்படுத்திய பண்பாட்டு இழப்பையும் வலியையும் வெகு நுட்பமாக நெய்தெடுக்கிருக்கிறது கிரானடா” எனப் பின்னட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகத்திற்கு நியாயம் செய்துள்ளது இந்த நாவல்.
அறிவும் உணர்வும் கலந்த தனித்துவமான சமூக இயங்கியலை புனைவின் வழியாக மீட்டுருவாக்கம் செய்து, சந்தேகத்தையும் நம்பிக்கையையும் மையப்படுத்தி, காதலையும் தொலைதலையும் அதனூடகப் பிணைத்து, ஆன்மாவின் தேடல் எதுவென்பதை மனித மனங்களுக்குப் புரியவைக்கும் முயற்சியாகப் பயணப்படுகிறது இந்நாவல். பாரசீகப் பட்டுநூலால் நெய்யப்பட்ட திடமான படைப்பாய் இப்புனைவு உருவாகியிருப்பதை உணரமுடிகிறது.
ஃபிரெஞ்சு விவகாரத்தை ஒற்றைக் கலாச்சாரவாதத்துக்கு (Cultural Monism) சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ள முடியும். ‘மதச்சார்பற்ற’ அரசியல் சாசனம் மதச் சுதந்திரத்தை வழங்குவதாக உறுதியளித்தாலும், அது நடைமுறையில் எப்படி இருக்கிறது என்பதுதான் முக்கியம். அரசமைப்புச் சட்டம் என்பது ஒரு பிரதி. ஆதிக்கம் செலுத்தும் கலாச்சார மதிப்பீட்டின் தாக்கத்துக்கு ஆட்பட்டு அதை வாசித்து ஒரு புரிதலுக்கும் நடைமுறைக்கும் அவர்கள் வருகிறார்கள். கிறிஸ்தவத்தின் செல்வாக்குக்கு ஆளாகியுள்ள அவர்களிடம் எது இயல்பு, எது இயல்பல்ல என்ற முன்னுணுர்வு இருக்கிறது. ஒரு பெண் தலை முக்காடு அணிகிறாள் என்றால் அது ஃபிரெஞ்சுப் பொதுப்புத்திக்கு அசாதாரணமாகவும், இயல்பு மீறிய ஒன்றாகவும் படுகிறது.
ஏதோ ஒரு பொல்லா நாள். மேலதிகாரி இன்ஸ்பெக்சன் வர, கஸ்டம்ஸ் கெடுபிடியில் ஒரே நாளில் பதினைந்து குருவிகளோடு சரக்குகள் மாட்டிக்கொண்டன. சரக்கு என்றால் ஒவ்வொரு குருவி தலையிலும் இரண்டரை லட்சம் மதிப்புள்ள சரக்கு. அப்பாஸ் வாழ்க்கையே மாறிப்போனது. தெரிந்த லாபிகளில் மூவ் செய்தும், சரக்கு கைக்கு வந்துசேரவில்லை. அன்று அணைந்ததுதான் சேட்டின் செல்போன், இன்றுவரை அவரிடம் பேசமுடியவில்லை.
9/11 தாக்குதலைத் தொடர்ந்து உலகெங்குமுள்ள அரசுகள் முஸ்லிம்கள்மீது அடக்குமுறைகளையும் தீவிரக் கண்காணிப்பையும் முடுக்கிவிட்டன. கறுப்புச் சட்டங்களை இயற்ற, இஸ்லாமிய இயக்கங்களைத் தடை செய்ய அச்சந்தர்ப்பத்தை அவை லாவகமாகப் பயன்படுத்திக்கொண்டன. சிமி முதன்முதலாகத் தடை செய்யப்பட்டதும் அப்போதுதான்.
2006ம் ஆண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் மானுடவியல் துறைப் பேராசிரியர் இர்ஃபான் அஹ்மது எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது. சிமி குறித்து பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்துவதற்காக முழு வீச்சுடன் செயல்படும் ஊடகமும் அதிகார வர்க்கமும் சிமியின் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்தது எது என்ற அடிப்படையான கேள்வியைக் கண்டுகொள்வதே இல்லை. இக்கட்டுரை அந்த அம்சம் குறித்துதான் கவனப்படுத்த முனைகிறது.