15ம் நூற்றாண்டின் இஸ்லாமிய நாகரிகத்தின் அறிவு மற்றும் பண்பாட்டுத் தலைநகரான முஸ்லிம் ஸ்பெயினின் (அந்தலூஸ்) வீழ்ச்சியின் வரலாற்றுப் பின்னணியை அடிப்படையாக வைத்து நகர்கிறது கிரானடா நாவலின் கதை. பெருமளவு ஒரே குடும்ப உறுப்பினர்கள்தாம் கதை மாந்தர்கள். ஆனால், அதன் வழியே நாவல் ஒரு மாபெரும் வரலாற்றுத் துயரை நிழலோட்டமாக முன்வைத்து அற்புதமான தரிசனத்தை எமக்குள் நிகழ்த்துகிறது.
சிறியவர்களிடம் அன்பு காட்டாதவரும், பெரியவர்களிடம் மரியாதை காட்டாதவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர் என்பது நபிகளாரின் அருள்மொழி. “அன்பே சிறியவர்களுக்கான மரியாதை; மரியாதையே பெரியவர்களுக்கான அன்பு என்றும் இதனை விளங்கலாம். மேலும், சிறியவர்களில் இருக்கும் பெரியவர்களிடம் மரியாதை காட்டுவதும், பெரியவர்களில் இருக்கும் சிறியவர்களிடம் அன்பு காட்டுவதும் இதில் அடக்கம்” என்றார் ஸூஃபி.
ஆழ்மன வாசிப்பால் உரையாடல்கள் முன்வைக்கும் புதிர்களைக் கட்டவிழ்க்கக் கோரும் அற்புதமான நூலை நமக்குத் தந்த ரமீஸ் பிலாலிக்கும் வெளியிட்ட சீர்மை பதிப்பகத்துக்கும் நன்றியும், வாழ்த்துகளும்! ரமீஸ் பிலாலியின் அகத்தில் ஒளிரும் ஸுஃபியிடமிருந்து இன்னும் பல அரிய நூல்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.
மெளலானா ரூமி பற்றி அறிந்த எல்லோரும் பிரபலமான இச்சம்பவத்தையும் அறிந்திருப்பர். மெளலானா ரூமியின் ஆளுமையையும் ஆகிருதியையும் வளர்த்தெடுத்த சம்பவம் அது. கொன்யா நகரத்தில் தனது மார்க்கப் பள்ளியில் மாணவர்களுடன் நீர்த்தடாகத்தின் அருகே அமர்ந்து அரிய நூல்களைக் கையில் வைத்தபடி உரையாடிக் கொண்டிருக்கிறார். பரதேசிக் கோலத்தில் இடையில் வந்த ஷம்ஸுத் தப்ரேஸ் அந்த நூல்களை நீர்த்தடாகத்தில் எறிந்து விடுகிறார். அவை மூழ்கியும் விடுகின்றன.
அவற்றில்தான் மெளலானா ரூமியின் தந்தையார் பஹாவுத்தீன் வலதின் மிக முக்கியமான நாட்குறிப்புகளின் தொகுப்பும் இருந்தது. “ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று ரூமி பதறுகிறார், படபடத்துச் சினந்து முகம் சிவக்கிறார். ஆனால் அமைதியான குரலில் ஷம்ஸுத் தப்ரேஸ் பதிலளிக்கிறார்: “நீ இதுவரை படித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்ததை வாழவேண்டிய நேரம் வந்துவிட்டது. உனக்கு அந்தப் புத்தகங்கள் வேண்டுமெனில் அவற்றை மீட்டுத் தருகிறேன். அவை நனையாமல் உலர்ந்தபடிதான் இருக்கும், பார்க்கிறாயா?” என்றவாறு நீர்த்தடாகத்தில் கைகளைவிட்டு அந்த நூல்களை வெளியே எடுக்கிறார். அவை சிறிதும் நனையவே இல்லை. மெளலானா ரூமியின் தந்தையார் ஷைஃகு பஹாவுத்தீன் வலது அவர்களின் அந்த நாட்குறிப்புகளின் தொகுப்புதான் இந்த “நீருக்குள் மூழ்கிய புத்தகம்”.
ஹமீது அல்கரின் இந்தப் புத்தகம் வஹ்ஹாபியத்தின் தந்தையான முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் பூகோளப் பின்னணி, அறிவுத் தகைமை போன்ற அடிப்படையான அம்சங்கள் தொட்டு பலவற்றை விவாதிக்கின்றது. சுன்னீ இஸ்லாமிய மரபிலிருந்து வஹ்ஹாபியம் எவ்வாறு விலகி நிற்கிறது, நவீன கால வரலாற்றில் தோன்றிய பிற சீர்திருத்த இயக்கங்களிலிருந்து அது வேறுபடும் புள்ளிகள் என்னென்ன, பிறவற்றோடு வஹ்ஹாபிய இயக்கத்தை ஒப்பிடுவது ஏன் தவறு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இது விடையளிக்கிறது. குறிப்பாக சஊதி அறபியாவின் உருவாக்கத்தில் வஹ்ஹாபியத்தின் செல்வாக்கு, அது ஏகாதிபத்திய சக்திகளுடன் கொண்ட உறவு, பண்பாட்டு வெளியில் அதன் பாதிப்புகள், முஸ்லிம்களிடையே அது கூர்தீட்டியிருக்கும் குறுங்குழுவாதம் ஆகியவையும் இப்புத்தகத்தில் விவரிக்கப்படுகின்றன.
வஹ்ஹாபியத்தின் வேர் முதல் நுனி வரை அலசும் இந்நூலின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே எடுத்துக்கொண்டு விரிவாக ஆராய முடியும். அந்த அளவுக்குச் செறிவான உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கிறது இவ்வாக்கம். தாங்கள் மட்டுமே ஓரிறைவாதத்தை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுபவர்கள் என்றும், தாங்களே நூதன வழக்கங்களைத் தவிர்த்து தூய இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள் என்றும் ஏகபோக உரிமை கோரும் வஹ்ஹாபிகளின் அடித்தளத்தை இப்புத்தகம் கேள்விக்குட்படுத்துகிறது.
இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் முஸ்லிம்களுக்கு எதிரான இன்றைய சூழலை விளக்கும் முக்கியமான கட்டுரைகளையும் நேர்காணல்களையும் உள்ளடக்கியுள்ளது ரிஸ்வானின் இந்த நூல். சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சிக்குப் பின் உருவான ஒருதுருவ உலகில் உருவாகியிருக்கும் இஸ்லாமிய வெறுப்பு குறித்த கருத்தாழமிக்க ஆக்கங்களுடன் வெளிவரும் இத்தொகுப்பு, கடந்த சில ஆண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் தொடர்பான ஓர் முக்கியமான ஆவணம் என்றும் சொல்லலாம். ஜனநாயகத்திலும் மதச்சார்பின்மையிலும் அக்கறையுள்ள நாம் இத்தகைய நூல்களை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்கு முன்கை எடுக்க வேண்டியது அவசியம்.
பெரும்பான்மைவாத ஜனநாயகத்தில் சிறுபான்மையினரின் இருப்பு, இந்திய வரலாற்று எழுத்தியலில் நிலவும் பக்கச்சார்பு, மையநீரோட்ட மதச்சார்பற்ற கட்சிகளிடமுள்ள சிக்கல்கள் உள்ளிட்ட பல அம்சங்களை ஷர்ஜீல் இமாமின் எழுத்துகள் விவாதிக்கின்றன. அவை காத்திரமான மாற்றுப் பார்வைகளை முன்வைப்பதுடன், கல்விப்புல விவாதங்களை மக்கள்மயப்படுத்துகின்றன.
தெரிவுசெய்யப்பட்ட அவரின் கட்டுரைகளையும் பேச்சுக்களையும் தொகுத்தளிக்கிறது இந்நூல். முஸ்லிம் விவகாரம் சார்ந்த பல விவாதங்களுக்கான தொடக்கப்புள்ளியாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தப் பெரும் போக்கு சராசரி உறைவில் உடைவை ஏற்படுத்தி சாதித்தவர் விஜயன். வாழ்வின் கடைசி வாரங்கள் வரை அயல் நில உலாவில்தான் இருந்திருக்கின்றார். செல்வருக்கும் சாதிக்கக் கிடைக்காத ஒன்று. தன் நேசத்திற்கு முன்நிபந்தனைகள் எதுவும் கோராத வைக்கம் முஹம்மது பஷீர், வாடிக்கையாளரின் மானம் காக்கும் கே.ஆர்.விஜயன், கோடி ரூபாய்களை தள்ளி நிறுத்திய மொய்து கீழ்ச்சேரி – இது போன்றவர்கள்தான் சுற்றுலாவிற்கும் பயணத்திற்குமான வேறுபாட்டை தங்கள் வாழ்வைக் கொண்டு வரையறுப்பதோடு வாழ்வின் வரம்புகளை விரித்துப் பரத்துபவர்களும்கூட.
“இளைய தலைமுறையினரிடம் நிர்வாணத்தையும் விபச்சாரத்தையும் பரவலாக்கினால் எந்தவொரு நாட்டையும் யுத்தமின்றி அழித்துவிட முடியும்” என்பார் சலாஹுதீன் அய்யூபி. உண்மையில், சமூகத்தில் அழிவை உண்டாக்கும் இந்த விஷயங்களை இன்று நாம் பரவலாகக் காண முடிகிரது. நிர்வாணமும் கட்டற்ற விபச்சாரமும் விஸ்வரூபமெடுத்திருக்கின்றன.
இந்திய சினிமாவில் முஸ்லிம்கள் குறித்த பதிவு எப்படியிருந்திருக்கிறது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முஸ்லிம்கள் வலதுசாரிகளாலும் லிபரல்களாலும் எப்போதும் வன்முறையாளர்களாக, பெண் வெறுப்பாளர்களாக, மத வெறியர்களாகவே சித்தரிக்கப்பட்டு வந்த சூழலில், மாநாடு திரைப்படம் இந்தப் போக்கிற்கு சவுக்கடி கொடுத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.
இன்றைக்கு இந்திய அரசியல் முஸ்லிம்களை மையப்படுத்தி சுற்றிச்சுழல்வதை நாம் அறிவோம். அவர்கள்மீது அச்சத்தையும் துவேசத்தையும் ஏற்படுத்துவதன் வழியாகவே இந்துத்துவமும் பெரும்பான்மைவாதமும் தம் இருப்பை வலுப்படுத்தியிருக்கும் நிலையில், இஸ்லாமிய வெறுப்புக்கு எதிரான படமாகவும் மாநாடு வெளிவந்திருக்கிறது. முஸ்லிம்கள்மீது காவல்துறை பொய் வழக்கு புனைவது, அரசியல் லாபங்களுக்காக மதக் கலவரம் தூண்டப்படுவது முதலான விஷயங்களை அது அழுத்தமாக பலமுறை பதிவு செய்கிறது.
இந்த அறபுக் குடும்பம் ஹிஜ்ரி 235ல் (கி.பி.852) மக்காவை விட்டு புறப்பட்டதாகவும் 500 ஆண்டுகள் கடலிலும், கடற்கரையோரங்களில் இடைநிறுத்தம் செய்து கடைசியாக ஹிஜ்ரி 750 (கி.பி.1350) வாக்கில் இங்கு பழவேற்காடு வந்து சேர்ந்ததாகவும் கூறினார். இது மிகச் சரியாக இப்னு பதூதா (1304 -1368) தென்னிந்தியாவுக்கு வந்து சேர்ந்த காலத்தோடு கச்சிதமாகப் பொருந்திப் போகிறது. மதுரை வரை வந்த இப்னு பதூதா இங்கு ஏற்கனவே அறபுக் குடியேற்றங்களைக் கண்டு திகைத்துப் போய் எழுதி வைத்ததும் வரலாறு.