நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

‘திருமுகம்’ ஈரானிய நாவல் (அறிமுகம்)

Loading

திருமுகம் என்ற நாவல் மனித மனதின் ஐயம் குறித்து, அது உருவாக்கும் கேள்விகள் குறித்துப் பேசுகிறது. நாவலின் நாயகன் யூனுஸின் மனதில் உருவாகும் மெய்யியல் கேள்விகள் இந்த நாவலை முன்னகர்த்திக் கொண்டு செல்கின்றன.

முனைவர் முஹ்ஸின் பாஷா தற்கொலைக்கான காரணங்களைத் திரட்டி பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்பதே யூனுஸ் எடுத்துக்கொண்ட முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக்கரு. யூனுஸின் மனத்தில் உருவாகும் இறைவன் இருக்கிறானா என்ற ஐயமும், முஹ்ஸின் பாஷா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற கேள்வியும் யூனுஸின் சிந்தனையை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்கின்றன. யூனுஸின் நண்பர் மஹர்தாத், மஹர்தாத் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜூலியா, யூனுஸூக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணான சாயாஹ் எனப் பல்வேறு கதாபாத்திரங்களின் வழி மனித மனதில் ஆதாரமான கேள்விகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் சொல்லப்படுகின்றன.

மேலும் படிக்க
master of the jinn a sufi novel நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

ஸூஃபிகளின், ஜின்களின் உலகிற்குள் ஓர் மாய எதார்த்தப் பயணம் – சௌந்தர்.G

Loading

புத்தாண்டின் முதல் நாளில் ஒரு சூஃபி மரபு சார்ந்த புத்தகத்தில் தொடங்கலாம் என்று நினைக்கையில் முதலில் அலமாரியில் தென்பட்டது, நமது கோவை விஷ்ணுபுரம் விழாவில் வாங்கிய “ஜின்களின் ஆசான் – ஸூஃபி நாவல்” என்கிற நூல்தான். ஒரு இலக்கிய பிரதியை படித்து முடித்தபின் ”ஆம். நான் இதைப் படித்ததன் மூலம் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்” என்று தோன்றினால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது இதன் அனுபவம்.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

‘காதலின் நாற்பது விதிகள்’ நாவலின் வரலாற்றுப் பின்னணி

Loading

பதின்மூன்றாம் நூற்றாண்டு என்பது ‘அனடோலியா’வில் (துருக்கி சாம்ராஜ்யம்) மிகவும் கொந்தளிப்பான காலம். அரசியல் மோதல்களும் முடிவற்ற அதிகாரப் போட்டிகளும் மதச் சண்டைகளும் நிகழ்ந்திருந்த காலம் அது. மேற்கில், ஜெருசலேம் நோக்கிப் படையெடுத்த சிலுவைச் சேனை ‘கான்ஸ்டாண்டிநோபிள்’ என்னும் இஸ்தான்பூலைச் சூறையாடியது. அதன் விளைவாக பைஸாந்தியப் பேரரசு இரண்டாகப் பிளந்தது. கிழக்கில், செங்கிஸ் கானின் ராணுவ மேதைமையின் கீழ் கட்டுப்பாட்டுடன் முன்னேறிய மங்கோலியப் படை துரிதமாகப் பரவி வந்தது. இரண்டிற்கும் இடையில் பல்வேறு துருக்கி இனக்குழுக்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. பைஸாந்தியர்கள் தாம் இழந்த நிலம், செல்வம் மற்றும் அதிகாரத்தை மீட்கப் போராடினர். எப்போதும் இல்லாத குழப்பம் கோரத் தாண்டவம் ஆடியது. எப்பக்கம் திரும்பினாலும் அங்கே பகைமையும் வெறுப்பும் இருந்தன. மேலும், அடுத்து என்ன நிகழுமோ என்ற பேரச்சம் கண் முன் நின்றது.

மேலும் படிக்க
wajhullah novel tamil mustafa mastoor நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கடவுளை எப்படி உணர்வது?

Loading

முஸ்தஃபா மஸ்தூர் ஈரானின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவர். அவருடைய நாவல்கள் இருத்தலியல் தொடர்பான விசாரணையை மேற்கொள்பவை. 2001ல் வெளியான ‘திருமுகம்’ அவருடைய நாவல்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மொழிபெயர்ப்பில் 140 பக்கங்களைக் கொண்ட இந்தச் சிறிய நாவல், இறைமையைப் புரிந்துகொள்வதற்கான திறப்பை வழங்குகிறது.

பாரசீக மொழியில் எழுதப்பட்ட இந்த நாவலை அரபி வழியாக பீ.எம்.எம். இர்பான் மொழிபெயர்த்திருக்கிறார். இரண்டு மொழிகளைத் தாண்டி வந்திருந்தாலும் தமிழில் இந்த நாவல் சிறந்த வாசிப்பனுபவத்தைத் தருகிறது என்றால், அதற்கு மொழிபெயர்ப்பாளரும் ஒரு காரணம். இஸ்லாமிய உலகின் முக்கியமான இலக்கியப் படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவரும் பணியைத் தொடங்கியிருக்கும் சீர்மை பதிப்பகத்துக்கு இந்நாவல் பெருமை சேர்க்கும். இந்நாவல் இன்னும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்படவில்லை. அதற்கு முன்பாகவே தமிழுக்கு வந்துள்ளது.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

ஜனரஞ்சக நடையில் மாபெரும் தத்துவார்த்த விசாரணை – ‘திருமுகம்’ ஈரானிய நாவல்

Loading

தத்துவார்த்த பின்னணியில் சொல்லப்பட்ட ஒரு ஜனரஞ்சகமான பாரசீக நாவலை அறபி பிரதி வழியாகத் தமிழில் கொண்டு வருவது என்பது உண்மையில் மொழி பாண்டித்தியமும், நாவல் வரைவிலக்கணமும் தெரிந்த விற்பன்னராலே முடியும். ஏற்கனவே அதை கிரானடாவில் நிரூபித்த இர்ஃபான் இதிலும் மிக அழகாக வார்த்தைகளைக் கோர்த்து எழுதியிருக்கிறார். எழுதியிருக்கிறார் என்று சொல்வதை விட செதுக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். மொத்தத்தில் இது ஐயத்தையும் நம்பிக்கையையும் பற்றிய கதை. வேட்கையையும் தடுமாற்றத்தையும் பற்றிய கதை. காதலில் விழுதலையும் தொலைத்தலையும் குறித்த கதை. இது மனிதனின் கதை எனக் குறிப்பிடப்பட்டிருப்பது சாலப் பொருந்தும்.

மேலும் படிக்க
granada novel - radwa ashour நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கிரானடா: மாபெரும் வரலாற்றுத் துயரின் நிழலோட்டம்

Loading

15ம் நூற்றாண்டின் இஸ்லாமிய நாகரிகத்தின் அறிவு மற்றும் பண்பாட்டுத் தலைநகரான முஸ்லிம் ஸ்பெயினின் (அந்தலூஸ்) வீழ்ச்சியின் வரலாற்றுப் பின்னணியை அடிப்படையாக வைத்து நகர்கிறது கிரானடா நாவலின் கதை. பெருமளவு ஒரே குடும்ப உறுப்பினர்கள்தாம் கதை மாந்தர்கள். ஆனால், அதன் வழியே நாவல் ஒரு மாபெரும் வரலாற்றுத் துயரை நிழலோட்டமாக முன்வைத்து அற்புதமான தரிசனத்தை எமக்குள் நிகழ்த்துகிறது.

மேலும் படிக்க
என்றார் சூஃபி நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

… என்றார் ஸூஃபி (நூல் அறிமுகம்)

Loading

சிறியவர்களிடம் அன்பு காட்டாதவரும், பெரியவர்களிடம் மரியாதை காட்டாதவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர் என்பது நபிகளாரின் அருள்மொழி. “அன்பே சிறியவர்களுக்கான மரியாதை; மரியாதையே பெரியவர்களுக்கான அன்பு என்றும் இதனை விளங்கலாம். மேலும், சிறியவர்களில் இருக்கும் பெரியவர்களிடம் மரியாதை காட்டுவதும், பெரியவர்களில் இருக்கும் சிறியவர்களிடம் அன்பு காட்டுவதும் இதில் அடக்கம்” என்றார் ஸூஃபி.

ஆழ்மன வாசிப்பால் உரையாடல்கள் முன்வைக்கும் புதிர்களைக் கட்டவிழ்க்கக் கோரும் அற்புதமான நூலை நமக்குத் தந்த ரமீஸ் பிலாலிக்கும் வெளியிட்ட சீர்மை பதிப்பகத்துக்கும் நன்றியும், வாழ்த்துகளும்! ரமீஸ் பிலாலியின் அகத்தில் ஒளிரும் ஸுஃபியிடமிருந்து இன்னும் பல அரிய நூல்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

மேலும் படிக்க
நீருக்குள் மூழ்கிய புத்தகம் - நிஷா மன்சூர் நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

ஒரு ரொட்டித் துண்டை உண்ணும் தவம்!

Loading

மெளலானா ரூமி பற்றி அறிந்த எல்லோரும் பிரபலமான இச்சம்பவத்தையும் அறிந்திருப்பர். மெளலானா ரூமியின் ஆளுமையையும் ஆகிருதியையும் வளர்த்தெடுத்த சம்பவம் அது. கொன்யா நகரத்தில் தனது மார்க்கப் பள்ளியில் மாணவர்களுடன் நீர்த்தடாகத்தின் அருகே அமர்ந்து அரிய நூல்களைக் கையில் வைத்தபடி உரையாடிக் கொண்டிருக்கிறார். பரதேசிக் கோலத்தில் இடையில் வந்த ஷம்ஸுத் தப்ரேஸ் அந்த நூல்களை நீர்த்தடாகத்தில் எறிந்து விடுகிறார். அவை மூழ்கியும் விடுகின்றன.

அவற்றில்தான் மெளலானா ரூமியின் தந்தையார் பஹாவுத்தீன் வலதின் மிக முக்கியமான நாட்குறிப்புகளின் தொகுப்பும் இருந்தது. “ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று ரூமி பதறுகிறார், படபடத்துச் சினந்து முகம் சிவக்கிறார். ஆனால் அமைதியான குரலில் ஷம்ஸுத் தப்ரேஸ் பதிலளிக்கிறார்: “நீ இதுவரை படித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்ததை வாழவேண்டிய நேரம் வந்துவிட்டது. உனக்கு அந்தப் புத்தகங்கள் வேண்டுமெனில் அவற்றை மீட்டுத் தருகிறேன். அவை நனையாமல் உலர்ந்தபடிதான் இருக்கும், பார்க்கிறாயா?” என்றவாறு நீர்த்தடாகத்தில் கைகளைவிட்டு அந்த நூல்களை வெளியே எடுக்கிறார். அவை சிறிதும் நனையவே இல்லை. மெளலானா ரூமியின் தந்தையார் ஷைஃகு பஹாவுத்தீன் வலது அவர்களின் அந்த நாட்குறிப்புகளின் தொகுப்புதான் இந்த “நீருக்குள் மூழ்கிய புத்தகம்”.

மேலும் படிக்க
seermai uvais ahamed நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

வஹ்ஹாபியம்: ஒரு விமர்சன ஆய்வு – அணிந்துரை

Loading

ஹமீது அல்கரின் இந்தப் புத்தகம் வஹ்ஹாபியத்தின் தந்தையான முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் பூகோளப் பின்னணி, அறிவுத் தகைமை போன்ற அடிப்படையான அம்சங்கள் தொட்டு பலவற்றை விவாதிக்கின்றது. சுன்னீ இஸ்லாமிய மரபிலிருந்து வஹ்ஹாபியம் எவ்வாறு விலகி நிற்கிறது, நவீன கால வரலாற்றில் தோன்றிய பிற சீர்திருத்த இயக்கங்களிலிருந்து அது வேறுபடும் புள்ளிகள் என்னென்ன, பிறவற்றோடு வஹ்ஹாபிய இயக்கத்தை ஒப்பிடுவது ஏன் தவறு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இது விடையளிக்கிறது. குறிப்பாக சஊதி அறபியாவின் உருவாக்கத்தில் வஹ்ஹாபியத்தின் செல்வாக்கு, அது ஏகாதிபத்திய சக்திகளுடன் கொண்ட உறவு, பண்பாட்டு வெளியில் அதன் பாதிப்புகள், முஸ்லிம்களிடையே அது கூர்தீட்டியிருக்கும் குறுங்குழுவாதம் ஆகியவையும் இப்புத்தகத்தில் விவரிக்கப்படுகின்றன.

வஹ்ஹாபியத்தின் வேர் முதல் நுனி வரை அலசும் இந்நூலின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே எடுத்துக்கொண்டு விரிவாக ஆராய முடியும். அந்த அளவுக்குச் செறிவான உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கிறது இவ்வாக்கம். தாங்கள் மட்டுமே ஓரிறைவாதத்தை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுபவர்கள் என்றும், தாங்களே நூதன வழக்கங்களைத் தவிர்த்து தூய இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள் என்றும் ஏகபோக உரிமை கோரும் வஹ்ஹாபிகளின் அடித்தளத்தை இப்புத்தகம் கேள்விக்குட்படுத்துகிறது.

மேலும் படிக்க
islamophobia in tamil nadu நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

மையநீரோட்டத்தில் இஸ்லாமோ ஃபோபியா – அ. மார்க்ஸ் அணிந்துரை

Loading

இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் முஸ்லிம்களுக்கு எதிரான இன்றைய சூழலை விளக்கும் முக்கியமான கட்டுரைகளையும் நேர்காணல்களையும் உள்ளடக்கியுள்ளது ரிஸ்வானின் இந்த நூல். சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சிக்குப் பின் உருவான ஒருதுருவ உலகில் உருவாகியிருக்கும் இஸ்லாமிய வெறுப்பு குறித்த கருத்தாழமிக்க ஆக்கங்களுடன் வெளிவரும் இத்தொகுப்பு, கடந்த சில ஆண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் தொடர்பான ஓர் முக்கியமான ஆவணம் என்றும் சொல்லலாம். ஜனநாயகத்திலும் மதச்சார்பின்மையிலும் அக்கறையுள்ள நாம் இத்தகைய நூல்களை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்கு முன்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் படிக்க