உலர்ந்த, வற்றிய சருகுகள்தான் நெருப்பை விழுங்குகின்றன. எல்லோரும் கூடி வாழும் ஒரு நாட்டில் ரத்தமும் சதையுமாய் ஊனும் நிணமுமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதத் தொகையினரை எல்லோரையும் சாட்சியாக்கிக் கொன்றொழிக்க எப்படி முடிகிறது? அதைத்தான் இந்த நாவல் கேள்விகளாக்கி, கள்ள மௌனம் சாதிக்கும் பெரும்பான்மையினரின் முகத்திற்கு நேரே நீட்டுகிறது.
பலரும் கேட்கும் ஒரு கேள்வி: ‘அலி’கள் அல்லது ‘அரவானிகள்’ தொடர்பாக இஸ்லாத்தின் கருத்தென்ன, அரவானிகளுக்கென தனிச்சட்டங்கள் உண்டா, அரவானிகளை சமுதாயம் எவ்வாறு நடத்த வேண்டும், ஆண்பாலும் அல்லாத, பெண்பாலும் அல்லாத மூன்றாவது பாலினம் உண்டா?
இவ்வாண்டின் தொடக்கத்தில் அலிகர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற CAA, NRC எதிர்ப்புக் கூட்டத்தில் பேசியதற்காக JNU ஆய்வு மாணவர் ஷர்ஜீல் இமாம் தேசத் துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டு பத்து மாதங்கள் கடந்து இன்றும் சிறையிலிருக்கிறார். அப்படி அவர் என்னதான் பேசினார் அன்று? அவருடைய முழுப் பேச்சின் தமிழாக்கம் இது.
மலையாளத்தின் மீது ஏற்பட்ட சமஸ்கிருத ஆதிக்கம் காரணமாக மணிப்பிரவாள நூல்கள் தோன்றின. வைதீக மொழியான சமஸ்கிருதத்துடன் முஸ்லிம்களுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கவில்லை. ஆனால் அறபியும் தமிழும் இவர்களிடத்தில் ஆதிக்கம் செலுத்தின. எனவேதான் மலையாள மொழியில் காணமுடியாத நூற்றுக்கணக்கான பழந்தமிழ்ச் சொற்கள் மாப்பிள்ளை இலக்கியங்களில் காணப்படுகின்றன.
இன்றைய தேர்தல் அரசியல் என்பதே முஸ்லிம்களை ‘நாம்-அல்லாதவர்களாக’ மற்றமைப் படுத்துவதுதான். உன் அடையாளத்திற்கு ஒரு அச்சுறுத்தல் என்கிற ரீதியில், நீ முஸ்லிம் வெறுப்புப் பேச்சை அவிழ்ப்பதன் ஊடாக நீ உன்னவர்களாக வரையறுப்பவர்களை ஒருங்குதிரட்டிக்கொள்ள வேண்டும். முஸ்லிம்களை மற்றவர்களாக்குவதுதான் இன்றைய தேர்தல் அரசியல்!
தாங்கள் (முஸ்லிம் ஆட்சி முதலிய) வரலாற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற அச்சம் இந்துக்களுக்கு உண்டு. உலகளாவிய கிலாஃபத் இயக்கம் முதலியன ஆர்எஸ்எஸ் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தன. இப்படியான அணிதிரட்டலில் பலனடைகிறோம் என்றால், அதை அவர்களும் செய்வார்கள்தானே. செய்கிறார்கள். எல்லா அம்சங்களிலும் (பாபர் மசூதி தொடங்கி) அது நடக்கிறது. ஆங்காங்கு வன்முறைகள். கலவரங்கள் இன்னொரு பக்கம். எல்லாவற்றையும் தங்களின் ‘தேர்தல் போர்த் தந்திரம்’ என்பதாக முன்வைத்து அவர்கள் மேலே மேலே செல்கின்றனர்.
ஒரு முறை கே.என்.பணிக்கர் விவேகாநந்தரை தாராளவாதி எனவும், அவரை ஆர்.எஸ்.எஸ் சுவீகரிப்பது அபத்தம் எனவும் ஆங்கில இந்து நாளிதழில் எழுதினார் (April 10, 2013, Vivekananda’s Legacy of Universalism). அதற்கு ஆர்.எஸ்.எஸ் தரப்பிலிருந்து எழுதப்பட்ட பதிலில், “விவேகாநந்தரால் உருவாக்கப்பட்ட ராமகிருஷ்ணா மிஷனிலிருந்து வெளி வந்த ஒருவர்தான் ஆர்.எஸ்.எஸ்-ன் புகழ் பெற்ற ’சர் சங் சலக்’ (தலைவர்) ஆக இருந்தவர் (கோல்வால்கரைத்தான் அவர்கள் குறிக்கின்றனர்). அந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பையா விவேகநந்தரின் 150வது பிறந்த நாளைக் கொண்டாடக் கூடாது என்கிறாய்?” என்று கூறி விவேகாநந்தரின் உரைகளிலிருந்து பல்வேறு மேற்கோள்களைக் காட்டியது.
ஏற்கனவே பெங்களூரு வன்முறையால் மூன்று உயிர்கள் பறிபோயுள்ளன, அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கர்நாடக காவல்துறை மேற்கொள்ளும் அதிகப்படியான கைது நடவடிக்கைகள், தீவிரவாத சதித் திட்டமாக சித்தரிக்க முயற்சித்தல், கொடூரமான ‘உபா’ (UAPA) சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் கூறுவது, வன்முறையால் ஏற்பட்ட இழப்பீட்டை கலவரக்காரர்களிடம் வசூலிப்போம் என யோகி ஆதித்யநாத் பாணியில் எடியூரப்பா சூளுரைப்பது முதலானவை புதிய புதிய சிக்கல்களைத் தோற்றுவிக்கக் கூடிய முனைவுகளாக உள்ளன. பிரச்னைகளை சரிசெய்கிறேன் எனக் கிளம்புபவர்களே பிரச்னையின் ஒரு பகுதியாகவோ ஊற்றுக்கண்ணாகவோ இருப்பதுதான் இங்கு ஆகப்பெரிய பிரச்னை!
வாழ்வின் இரகசியங்கள் என்றும் முடிவடையாதவை. ஆன்மீகத் தேடல் கொண்டவர்கள் எளிதில் சலிப்படைவதில்லை. ஆன்மீக வாழ்வு லௌகீக வாழ்வு போன்று குறுகியதும் அல்ல. அது எல்லையற்ற பெருவெளி. அங்கு அறிதல்கள் பெருகிக் கொண்டேயிருக்கும். தகவல்கள் மனிதனை எளிதில் சலிப்பில் ஆழ்த்திவிடுகின்றன. அறிதல்கள் அப்படியல்ல. ஒரு ஆன்மீகவாதியால் இறுதிவரை இயங்கிக் கொண்டேயிருக்க முடிகிறது, அவர் மரணத்தின் வாசனையை அருகாமையில் உணர்ந்தாலும்.
Pew ஆய்வு மையம் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் அமெரிக்காவில் வளரும் 77 சதவீத முஸ்லிம் சிறுவர்கள் தம்மை இஸ்லாத்தோடு அடையாளம் காண்கிறார்கள் என்கிறது. அப்படியென்றால் மீதமுள்ள 23 சதவீதத்தினரின் நிலையென்ன, 77 சதவீதம் இருப்பவர்களுள் எத்தனை பேர் இஸ்லாமிய உலக நோக்குடன் இருக்கிறார்கள், எத்தனை பேர் இஸ்லாத்தைக் கடைபிடிக்கிறார்கள்? சில தலைமுறைகள் கடந்த பின்னர் நிலைமை என்னவாகும் என்பன விடை காண வேண்டிய வினாக்களாய் நம்மிடையே உள்ளன.
மனிதர்களில் ஒவ்வொருவரையும் ஒருவகையில் அவர் இன்ன இயல்பினர், அவருக்கு இன்னின்ன தனித்தன்மைகள், பலவீனங்கள் இருக்கின்றன, அவர் இப்படித்தான் செயல்படுவார் என்றெல்லாம் மிக எளிதாக வகைப்படுத்திவிடலாம். இந்த வகையில் நாம் அவர்களை முழுமையாகப் புரிந்து கொள்ளலாம். அவர்களின் செயல்பாடுகளை சரியாகக் கணிக்கலாம். ஆனால் இன்னொரு வகையில் ஒவ்வொருவரும் ஒரு தனி உலகம். சில சமயங்களில் அவர்கள் நம் கணிப்புகளை, எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி விடுவார்கள். அவர்களின் சில செயல்பாடுகள் நம்மை வியப்பின் உச்சிக்கு கொண்டு செல்லலாம் அல்லது பேரதிர்ச்சியில் ஆழ்த்தலாம். இந்த வகையில் மனிதன் ஒரு புரியாத புதிர்.