கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

நியாயமான கோபம் எப்போது தார்மீகக் கடமையாகிறது?

Loading

கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும், அடக்கி ஆள வேண்டும் என்று போதனை செய்யும் இஸ்லாம், அநீதிக்கும் வரம்பு மீறலுக்கும் எதிராக கோபம் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறது. கோபம் அதன் சரியான வடிவத்தில் இருக்கும்போது இயற்கையானது மட்டுமல்ல, உன்னதமானதுமாகும்.

நமது இறைநம்பிக்கையில் வேரூன்றிய, நம் நெறிமுறைகளால் வழிநடத்தப்படும், கண்ணியம் என்பது சிலருக்கு மட்டுமான சலுகை அல்ல — அது அனைவருக்கும் உரிய உரிமை என்பதை உறுதி செய்யும் ஓர் உலகத்தை நோக்கிய கோபமே நமக்குத் தேவை.

ஃபலஸ்தீன நிகழ்வுகளை மையமாக வைத்து இச்சிறிய, ஆனால் முக்கியமான பாடத்தை நமக்குக் கற்றுத் தருகிறது இக்கட்டுரை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தமிழ்நாட்டில் இஸ்லாத்தை நோக்கிய பெருந்திரள் மதமாற்றங்கள்
ஒரு வரலாற்றுப் பார்வை

Loading

தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம் சபையின் நிறுவனர் தென்காசி மு.ந. அப்துர் ரஹ்மான் ஸாஹிபு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அவருடைய மகனாரும் பன்னூலாசிரியரும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.கே. ரிபாயி அவர்கள் ‘சமுதாய நீரோட்டத்தில் சங்கமம்’ என்ற பெயரில் ஒரு நூலாக எழுதியுள்ளார். தென் தமிழ்நாட்டில் இருபதாம் நூற்றாண்டின் முதல் அரைப் பகுதியில் தொடங்கி அலையலையாக நடந்துவந்த இஸ்லாத்தை நோக்கிய ஒடுக்கப்பட்ட மக்களின் பெருந்திரள் மதமாற்றங்களைப் பற்றி அந்நூலில் இடம்பெற்றுள்ள ‘மத மாற்ற அலைகள்’ என்ற ஆறாவது அத்தியாயம் பேசுகிறது. மெய்ப்பொருள் வாசகர்களின் வாசிப்புக்கென அதை இங்கு அப்படியே தந்துள்ளோம். – மெய்ப்பொருள் பொறுப்பாசிரியர்

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

கமால் மௌலா: கோயிலாக மாற்றப்பட்ட பள்ளிவாசல்!

Loading

மத்திய பிரதேசத்தில் பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கமால் மௌலா பள்ளிவாசல், உயர்நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் தெளிவான வழிகாட்டல்கள் உள்ள போதும், பள்ளிவாசல்களுக்கான உரிமை கோரல்களை இந்து வலதுசாரிகள் தொடர்ந்து முன்வைக்கின்றனர். நீதிமன்றங்களும் அவற்றை அனுமதிக்கின்றன.

‘வழிபாட்டுத் தலங்கள் சட்டம் முறையாக பின்பற்றப்படும்’ என்று பாபரி பள்ளிவாசல் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியதை மிகப்பெரும் கேடயமாக நம்பியிருக்கும் முஸ்லிம்களுக்கு இத்தகைய தீர்ப்புகள் அதிர்ச்சியையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன.

நீதியை நிலைநாட்டி, முஸ்லிம்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவதில் நீதித்துறைக்கு மிகப்பெரும் பொறுப்பு உள்ளது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

கொடிக்கால் மாமா — முக்கால் நூற்றாண்டுக் காலப் பெருந்தடம்

Loading

எழுபத்தைந்து வருட ஓட்டமென்பது இரு தலைமுறைக் காலங்களையும் தாண்டிய ஒன்று. அத்தகைய நெடிய காலத்தை வெறும் எண்களுக்குள் குறுக்கிவிட இயலாத அளவிற்கு நிகழ்வுகளும் படிப்பினைகளும் ஈகங்களும் நிறைந்த வாழ்க்கை கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்வுடையது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அலீ ஃகாமினயீ: இஸ்லாமிய ஈரானைச் செதுக்கிய சிற்பி

Loading

பல நாடுகளையும் நாட்டுத் தலைவர்களையும் அச்சுறுத்திவரும் ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கும், ஸியோனிச இஸ்ரேலுக்கும் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர் இமாம் அலீ ஃகாமினயீ. அவர் இமாம் ஃகுமைனீயை அடுத்து, ஈரான் இஸ்லாமியக் குடியரசை 35 ஆண்டுகளுக்கு மேல் வழிநடத்தியவர் ஆவார்.

அலீ ஃகாமினயீயின் ஷஹாதத் உறுதிசெய்யப்பட்டதும், டிரம்பும் நெதன்யாஹுவும் ‘ஈரான் மக்கள் தங்கள் நாட்டை மீட்டெடுக்கக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு’ என வெற்று கோஷம் முழக்கினர். அதேபோல், மக்களும் நாட்டை மீட்டெடுக்கத் தெருக்களில் கூடினர்; ஆனால் தற்போதைய அரசிடமிருந்தல்ல. மாறாக, ஈரான் இஸ்லாமியக் குடியரசை அழிக்கத் துடிக்கும் அமெரிக்க-இஸ்ரேல் ஸியோனிஸ்டுகளிடமிருந்து. ஃகாமினயீயின் ஷஹாதத்திற்குத் துக்கம் அனுசரித்துத் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தியவாறே ‘அமெரிக்கா செத்தொழியட்டும்’ (Death to America) என்று மக்கள் எழுப்பிய கோஷங்கள் விண்ணைப் பிளந்தன.

ரஹ்பர் ஃகாமினயீ ஈரானை ஷா மன்னரின் கோரப் பிடியிலிருந்து மீட்டு, ஒரு பிராந்திய சக்தியாக மாற்றி, ஃபலஸ்தீன் விவகாரத்தை அதன் மூலோபாயக் கொள்கையின் மையமாக வைத்தவர். நவீன ஈரானை நீண்டகாலம் திறம்பட நிர்வகித்த தீரமிக்க தலைவர். அவரின் இந்த அரும்பணி பல தசாப்தங்களுக்கு மக்களின் நினைவுகளில் ஆழப் பதிந்திருக்கும். இறைவன் அவரைப் பொருந்திக்கொள்வானாக!

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

சிலருக்கான  சிறப்புச் சலுகையே மனிதநேயம்
விசாரணையின்றி ஆறாண்டுகளாக இந்தியச் சிறையில் வாடும் உமர் காலித்

Loading

இன்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள் இரவு நேரச் செய்தி விவாதங்களில் காலித்தின் பெயரைத் தூற்றி, அவரை ஒரு முஸ்லிம் பயங்கரவாதி என்றும், தேச விரோதி என்றும் முத்திரை குத்துகின்றனர். மறுபுறம், இடதுசாரி ஆர்வலர்கள் தங்களின் போராட்டங்களில் அவரது பெயரை முழங்குவதோடு, அவரது முகம் பொறித்த டி-சர்ட்டுகளையும் அணிந்து கொள்கின்றனர்.
ஆறு ஆண்டுகளாக டெல்லி திஹார் சிறையில் விசாரணையும் இன்றி பிணையும் இன்றி அடைக்கப்பட்டுள்ள உமர் காலித், தனது சிறை அனுபவங்களை ‘தி கார்டியன்’ இதழுக்கு வழங்கிய பேட்டியின் மூலம் பகிர்ந்துள்ளார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தமிழ்த் திரை சொல்ல மறந்த கதை- ஹபீபி

Loading

தமிழ்த் திரை சொல்ல மறந்த கதை- ஹபீபி

ச. அகமது

திரையுலகில் முஸ்லிம்களை பெரும்பாலும் எதிர்மறையாக சித்தரிக்கும் நிலையில், அசல் தன்மையுள்ள கதைகளையும் கதை மாந்தர்களையும் பொது சமூகத்திற்கு அப்பட்டமாக ஒரு இருட்டு அறையில் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன்.

ஹபீபி தமிழ் சினிமாவில் ஒரு நல்ல தொடக்கமாகட்டும். ஹபீபியின் கரங்களை பற்றிக் கொண்டு நட்பு பாராட்ட ஓராயிரம் விரல்கள் வரட்டும். உலக அரங்கில் அவ்விரல்கள், அக்கரங்கள் நமது வாழ்வியலின் காத்திரமான கதைகளுக்காக கரவொலி எழுப்பட்டும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

Gen Z அரசியலின் தொடக்கமா CJP?

Loading

டைனோர்சர்களை அழித்த விண்கற்களின் தாக்குதல் உட்பட பல பேரழிவுகளில் இருந்து தப்பித்த உயிரினங்களில் ஒன்று கரப்பான்பூச்சி. ஒவ்வொரு நிலப்பரப்பின் சூழலுக்கும் ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் இந்த உயிரினத்தின் திறன் அபாரமானது.
இந்திய இளைஞர்களை குறிப்பிட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறிய சர்ச்சை கருத்துகளுக்கு எதிரொலியாக கரப்பான்பூச்சியின் பெயரால் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இணையத்தை பயன்படுத்தி பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் செல்வாக்கை பெற்று வரும் இந்த அணி, யாரை குறிவைத்து, எந்த இலக்கை நோக்கி பயணிக்கிறது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தோற்றப் பின்னணியையும் அதன் செயல்பாட்டு முறையையும் அறிந்து கொள்வது அவசியமாகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

கண்ணியம், சுயாதீனம், சுய நிர்ணய உரிமையுடன் ஆதிக்கத்தை நிறுவிய ஈரான்!

Loading

‘வெனிசுலா மாதிரி’யை அப்படியே மீட்டுருவாக்கம் செய்து அதன் மூலம் ஈரான் தலைமைத்துவத்தின் அரசியல், ராணுவ நடத்தைகளை மாற்ற வேண்டும் அல்லது ஒட்டுமொத்தமாக வீழ்த்த வேண்டும் என்ற அமெரிக்காவின் திட்டம் முற்றிலும் சிதைந்துள்ளது. ஈரான் இஸ்லாமியக் குடியரசின் காத்திரத் தன்மையும் அதன் கருத்தியல் பலமுமே அமெரிக்காவின் இத்தோல்விக்கான காரணமாகும்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் சமீபத்திய கூட்டு இராணுவ நடவடிக்கைகள் முழுமையான தோல்வி என்பதோடு, அவை ஈரானை அச்சுறுத்துவதிலும் பின்னடையச் செய்வதிலும் வெற்றி பெறவில்லை; அதிகாரச் சமநிலையை மாற்றியமைக்கவும் இல்லை. மாறாக, இஸ்ரேலை மிகப் பலவீனமான ஒரு வியூகம்சார் நிலைப்பாட்டுக்கே அவை தள்ளியுள்ளன.

மேலும் படிக்க
கவிதைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

அநீதம் இழைக்கப்பட்டீர் என் உயிரே! ஹுசைனே! (பாடல்)

Loading

இங்கே காணலாம் எல்லோரும்
என்ன ஆயிற்று எனக்கு என்று
ஹுசைனை இந்த மிருக நகங்கள் கிழிப்பதை
மனித குலத்தின் சிகர நபி சகிப்பார்களா?
அல்லாஹ்வின் மீது சத்தியமாக!
இறைவனின் திருத்தூதரின் மீதும்
அபூ தாலிபின் மகனான அலீயின் மீதும்
பரிசுத்த ஃபாத்துமத்துஸ் ஸஹ்றா மீதும்
நற்குண நாயகராம் என் அண்ணன்
ஹசன் அல்முஜ்தபா மீதும்…
என் சகோதரனே!
குதிரைகள் என் நெஞ்சின் மீது
ஏறி மிதிப்பதைப் பார்த்தீரே, எப்படி இருந்தது?

மேலும் படிக்க